News May 11, 2024

ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்தது

image

அட்சய திருதியையொட்டி நேற்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1240 உயர்ந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 குறைந்து ₹54,000க்கும், கிராமுக்கு ₹20 குறைந்து ரூ.6,750க்கும் விற்பனையாகிறது. அதேபோல், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 70 காசுகள் குறைந்து ₹90.50க்கும், கிலோ ₹90,500க்கும் விற்கப்படுகிறது.

News May 11, 2024

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

image

+2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 6ஆம் தேதி வெளியானது. மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மதிப்பெண் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விடைத்தாள் நகல் பெறுவதற்கான விண்ணப்பத்தை பதிவு செய்ய இன்று கடைசி நாளாகும். மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மேலும் விவரங்களை அறியலாம். விடைத்தாள் நகல் பெற ஒரு பாடத்திற்கு ₹275 கட்டணமாகும்.

News May 11, 2024

499, 498, 497 மதிப்பெண் எடுத்து சாதனை

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் காவியா ஸ்ரீ, காவியா ஜனனி, சஞ்சனா, சந்தியா 500க்கு 499 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்தனர். அடுத்தபடியாக சிவகங்கையைச் சேர்ந்த மாணவி கிருத்திகா, ராமநாதபுரத்தைச் சேர்ந்த பிரதிக்ஷா 498 மதிப்பெண் எடுத்து 2வது இடத்தையும், உசிலம்பட்டியைச் சேர்ந்த சுஸ்யா, தேனியைச் சேர்ந்த விதர்சனா 497 மதிப்பெண் எடுத்து 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

News May 11, 2024

பேருந்தில் பயணம் செய்ய குழந்தைகளுக்கு ஆதார்?

image

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணம் விலக்கு அளித்து போக்குவரத்துறை அறிவித்துள்ளது. 5 – 12 வயது வரை குழந்தைகளுக்கு அரை கட்டணம் வசூலிக்க வேண்டும். குழந்தைகளின் வயது குறித்து நடத்துநர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், தக்க பிறந்த நாள் சான்று அல்லது ஆதார் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும். பயணிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

News May 11, 2024

பயிற்சியாளராக தொடர டிராவிட்டுக்கு விருப்பமில்லை?

image

T20 உலகக் கோப்பையுடன் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளதால், பயிற்சியாளர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ நேற்று அறிவித்தது. இந்நிலையில், டிராவிட் மீண்டும் விண்ணப்பிப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில், நேற்று அவர் விண்ணப்பிக்கவில்லை. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அணிக்கு புதிய பயிற்சியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தெரிகிறது.

News May 11, 2024

‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு சர்வதேச கௌரவிப்பு

image

ஆஸ்கர் விருது வென்ற RRR படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல், அமெரிக்காவில் நடைபெற உள்ள அகாடமி மியூசியம் ஆஃப் மோஷன் பிக்சர்ஸ், ஆஸ்கர் விருது விழாவில் கௌரவிக்கப்பட உள்ளது. இந்திய இசையின் பெருமையை உலகம் முழுவதும் தெரியப்படுத்தும் இவ்விழாவானது, வரும் 18ஆம் தேதி டேவிட் ஜப்பேன் தியேட்டரில் நடத்தப்படவுள்ளது. இதில், ஏ.ஆர்.ரஹ்மானின் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’, ‘லகான்’ படங்களின் பாடல்களும் கௌரவிக்கப்படவுள்ளன.

News May 11, 2024

உ.பி.யில் குறிப்பிட்ட நகரங்களின் பெயர் மாற்றம்?

image

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உ.பி.யில் அக்பர்பூர் உள்ளிட்ட நகரங்களின் பெயர் மாற்றப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளாா். சில ஊர்களின் பெயரை உச்சரித்தால் வாயில் கெட்ட சுவை ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அக்பர்பூர் மட்டுமல்லாமல், அலிகார், அசம்கார், ஷாஜகான்பூர் போன்ற பகுதிகளின் பெயர்களை மாற்றுவது குறித்து அம்மாநில அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

News May 11, 2024

வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் CSK

image

குஜராத்துக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் தோல்வி அடைந்ததால், CSK அணிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 12 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் இருக்கும் சென்னை அணி, எஞ்சி இருக்கும் 2 போட்டிகளிலும் அதிக ரன் ரேட்டுடன் வெற்றி பெற்றால் மட்டுமே, ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியும். ஆனால், பலம் வாய்ந்த ராஜஸ்தானுடனும், ப்ளே-ஆஃப் கனவுடன் இருக்கும் பெங்களூருவுடன் மோதுவது சென்னை அணிக்கு சவாலாக இருக்கும்.

News May 11, 2024

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்

image

இந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் தெரிவித்துள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு முதல் இதுவரை 280 பேரிடமிருந்து உறுப்புகள் தானம் பெறப்பட்டு 1,595 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 2023இல் தமிழக அரசு அறிவித்தபடி, இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படுகிறது.

News May 11, 2024

இன்னும் ஒரு அணி கூட ப்ளே-ஆப்க்குள் நுழையவில்லை

image

நடப்பு ஐபிஎல் தொடரில் 59 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் ஒரு அணி கூட ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. KKR, RR-16, SRH-14, CSK, DC, LSG-12, RCB, GT-10, MI, PBKS-8 புள்ளிகளுடன் உள்ளன. மும்பை, பஞ்சாப் அணிகள் தொடரில் இருந்து ஏற்கெனவே வெளியேறின. இன்னும் 11 போட்டிகளே உள்ளதால், ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர். இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், கொல்கத்தா அணி பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழையும்.

error: Content is protected !!