News May 11, 2024

செப்டம்பரில் இலங்கை அதிபர் தேர்தல்

image

இலங்கை அதிபர் தேர்தல் வரும் செப்.17 – அக்.16 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத பொருளாதர நெருக்கடியால் அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்தது. இதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், நாட்டை விட்டு வெளியேறிய ராஜபக்சே, அதிபர் பதவியை ராஜினாமா செய்ததால் ரணில் அதிபராக பொறுப்பேற்றார். அவரின் பதவி காலம் முடிவடைய உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

News May 11, 2024

₹100 கோடியை நோக்கி ‘அரண்மனை 4’

image

சுந்தர் சி இயக்கி நடித்துள்ள ‘அரண்மனை 4’ திரைப்படம், உலகம் முழுவதும் ₹70 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மே 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. காமெடி கலந்த திகில் திரைப்படமான இதில், தமன்னா, ராஷி கன்னா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரசிகர்களின் ஆதரவுடன், விரைவில் ₹100 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News May 11, 2024

BREAKING: தேர்வு தேதி அறிவிப்பு வெளியானது

image

10ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கான அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ஜூலை 2ஆம் தேதி தமிழ், 3ஆம் தேதி ஆங்கிலம், 4ஆம் தேதி கணக்கு, 5ஆம் தேதி அறிவியல், 6ஆம் தேதி விருப்ப மொழிப்பாடம் மற்றும் 8ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.

News May 11, 2024

பூமியைத் தாக்கிய சூரிய காந்தப்புயல்

image

சக்திவாய்ந்த சூரிய காந்தப்புயல் நேற்று பூமியைத் தாக்கியதாக, அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) தெரிவித்துள்ளது. இதனால், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா நாடுகளில், வானில் வண்ணமயமான காட்சிகள் தோன்றின. மீண்டும் சூரிய காந்தப்புயல் பூமியைத் தாக்கும் என்றும், செயற்கைக்கோள்களுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் NOAA அறிவுறுத்தியுள்ளது.

News May 11, 2024

ஷுப்மன் கில்லுக்கு ₹24 லட்சம் அபராதம்

image

CSK-க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், GT அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காமல், GT அணி கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. இது ஐபில் விதிப்படி குற்றம் ஆகும். குஜராத் அணிக்கு ஏற்கெனவே ஒருமுறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால், இம்முறை கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு ₹24 லட்சமும், இம்பேக்ட் வீரர் உள்பட மற்ற வீரர்களுக்கு ₹6 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது.

News May 11, 2024

பாஜக மாவட்டத் தலைவர் கைது

image

திருவாரூர் முன்னாள் பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளர் மதுசூதனனை கொலை வெறி தாக்குதல் நடத்திய விவகாரத்தில் பாஜக மாவட்டத் தலைவர் பாஸ்கரை காவல்துறையினர் கைது செய்தனர். மே 8ஆம் தேதி மதுசூதனனை வழிமறித்து, பைக்கில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இந்த வழக்கில் ஏற்கெனவே பாஜக விளையாட்டுப் பிரிவு மாவட்டத் தலைவர் ஜெகதீசன், சரவணன் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

News May 11, 2024

இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட்

image

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மேலும், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (பிற்பகல் ஒரு மணி வரை) செங்கல்பட்டு, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், உள் மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

News May 11, 2024

ஆப்பிள் நிறுவனத்திற்கு புதிய சிஇஓ?

image

ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக்கிற்கு 64 வயதாவதால் அவர் பணி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஓய்வு பெறும் நிலையில், அப்பதவிக்கு யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், அந்நிறுவனத்தின் நம்பிக்கைக்கு உரிய தலைமை ஹார்டுவேர் இன்ஜினியர் ஜான் டெர்னஸ் அல்லது தற்போதைய தலைமை நிர்வாகி ஜெஃப் வில்லியம்ஸ் அந்த வாய்ப்பினை பெறலாம் என்று கூறப்படுகிறது.

News May 11, 2024

5 மாதங்களில் பட்டாசு விபத்தில் 28 பேர் பலி

image

கடந்த 5 மாதங்களில் மட்டும் பட்டாசு விபத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கவலை தெரிவித்துள்ளார். பட்டாசு ஆலைகளுக்கான விதிமுறைகளை கண்டறிந்து தமிழக அரசு ஆய்வுகளை நடத்துமா? என்றும் தொழிலாளர்களுக்கான புதிய பாதுகாப்பை வழங்க முயற்சி எடுக்குமா? எனவும் அவர் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார். இம்மாதத்தில் இதுவரை 5 முறை வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 11, 2024

துணைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத இருக்கும் பள்ளி மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்களாக தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்கள், கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

error: Content is protected !!