India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
CSK-GT இடையேயான நேற்றைய ஐபிஎல் போட்டியில், புதிய வரலாற்று சாதனை பதிவாகியுள்ளது. குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷுப்மன் கில்லும், சாய் சுதர்ஷனும் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்தனர். இருவரும் அடுத்தடுத்து சதம் அடித்ததால், ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் பதிவான முதல் சீசன் (14 சதங்கள்) என்ற புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, 2023இல் 12 சதங்கள் அடித்ததே அதிகபட்சமாகும்.
பாஜக மீண்டும் வென்றால் ஸ்டாலின், மம்தா, பினராயி விஜயன் உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்படுவர் என கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சிவராஜ் சிங் சவுகான், வசுந்தரா ராஜே உள்ளிட்டோரின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதாக கூறிய அவர், அடுத்து யோகி ஆதித்யநாத் தான் என்றும் தெரிவித்தார். மேலும், உ.பி முதல்வர் 2 மாதங்களில் மாற்றப்படுவார் எனவும் அவர் கூறினார்.
வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சலினால் ஏற்படும் நீரிழப்பைத் தவிர்த்திட போதியளவு நீர் மற்றும் திரவ உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், வீடுகளை சுற்றி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளது.
மத்தியில் INDIA கூட்டணி ஆட்சி அமையும் என்றும், அதில், ஆம் ஆத்மி முக்கிய பங்கு வகிக்கும் எனவும் கெஜ்ரிவால் சூளுரைத்துள்ளார். NDA கூட்டணி 220-230 தொகுதிகளிலேயே வெல்லும் எனக் கூறிய அவர், பாஜகவின் சர்வாதிகாரத்தை எதிர்த்து தான் சிறையில் இருந்து போராடியதாகவும் கூறினார். அமித் ஷாவை பிரதமராக்க மோடி பரப்புரை செய்வதாக குற்றம்சாட்டிய அவர், மோடியின் கேரண்டிகளை அவர் நிறைவேற்றுவாரா? எனவும் கேள்வி எழுப்பினார்.
CSK அணிக்காக விளையாடும் தோனி, ஐபிஎல் தொடரில் இதுவரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 262 ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கியுள்ள அவர், 5,218 ரன்கள், 360 பவுண்டரிகள், 251 சிக்சர்கள், 24 அரை சதங்கள் அடித்துள்ளார். தோனி, பினிஷர் என்பதால் 5 விக்கெட்டுகளுக்கு பிறகு களமிறங்குவதையே வாடிக்கையாக கொண்டிருப்பார். அதனால், அணிக்கு ரன் சேர்ப்பதும், இலக்கை எட்டுவதுமாக இருக்கும் அவரால், ஒரு சதம் கூட அடிக்க முடியவில்லை.
ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தாங்கள் தொடங்கியுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கூறியுள்ளார். தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், தலைவர்களை சிறைக்கு அனுப்பிவிட்டு தங்கள் கட்சியை அழிக்க நினைத்ததாக குற்றம்சாட்டினார். ஆம் ஆத்மியை அழிக்க முடியாது என்பதற்கு இங்கு கூடியிருப்பவர்களே சாட்சி என பெருமிதம் தெரிவித்த அவர், அனைத்து அரசியல் கட்சிகளையும் பாஜக அழித்துவிட நினைப்பதாகவும் சாடினார்.
விஜயகாந்திற்கான பத்ம பூஷன் விருதை பெற்றுக்கொண்டு வந்த பிரேமலதாவை சென்னை விமான நிலையத்தில் வரவேற்க சென்ற தேமுதிகவினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. பிரேமலதா வாகனத்துடன் மற்ற நிர்வாகிகள் வாகனங்களும் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த தேதிமுகவினர் தடுப்புகளைத் தள்ளிவிட்டு, போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இன்றும், நாளையும் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும், மே 13ஆம் தேதி சேலம், நாமக்கல், தருமபுரி, பெரம்பலூர், மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 3 மணி நேரத்திற்கு (4 மணி வரை) திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும்.
வெற்றிமாறன் இயக்கவுள்ள ‘வாடிவாசல்’ படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக இயக்குநர் அமீர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், படத்தில் முழுக்க முழுக்க ஹீரோவுடன் பயணிக்கும் வில்லனாக நடிக்க உள்ளதாகவும், பல ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யாவுடன் இணைவதை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
நீட் தேர்வு என்றால் கடும் கட்டுப்பாடுகள் இருக்கும் என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் புரிந்துக்கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் மாற்றம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இதற்கெல்லாம் ஒரே தீர்வு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தான் என்றார். மேலும், மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழும் போது நல்லது நடக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.