News May 11, 2024

இதுதான் பாலிவுட்டின் ஃபார்முலா!

image

பாலிவுட்டைப் பொறுத்தவரை ஒரு படம் ஹிட்டானால்தான் மறுபடியும் வாய்ப்புகள் கிடைக்கும் என்ற ஃபார்முலா இருப்பதாக நடிகை ஜோதிகா கூறியுள்ளார். யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தமிழ் ரசிகர்களிடம் தனக்கு வரவேற்பு கிடைத்ததாகவும், தனது படங்கள் வெற்றி பெறாவிட்டாலும், திறமையை பார்த்து நிறைய வாய்ப்புகள் வந்ததாகவும் தெரிவித்தார். பாலிவுட்டுக்கும் தமிழ் சினிமாவுக்கும் இருக்கும் வித்தியாசம் இதுதான் என்றார்.

News May 11, 2024

பூண்டு விலை ₹160-₹320

image

அன்றாடம் சமையலுக்கு பயன்படும் அத்தியாவசிய பொருளான பூண்டு விலை, உயர்ந்துகொண்டே வருவது இல்லத்தரசிகளை கலக்கமடையச் செய்துள்ளது. 10 நாட்களுக்குமுன், கிலோ ₹100-₹200 வரை விற்பனையான பூண்டு தற்போது ₹160-₹320ஆக உயர்ந்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததாலும், வியாபாரிகள் பதுக்கி வைப்பதாலும் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படும் நிலையில், விலையை கட்டுக்குள் வைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News May 11, 2024

கல்லூரிகளில் சேரும் முன் விசாரியுங்கள்

image

கல்லூரிகளில் சேருவதற்கு முன் அவற்றின் தரம், அடிப்படை வசதிகள் போன்றவை குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என அண்ணா பல்கலை., துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார். +2 முடித்த மாணவர்கள் BE படிக்க ஆர்வம் காட்டும் நிலையில், சமீபத்தில் வெளியான செமஸ்டர் தேர்வு முடிவில் 56 கல்லூரிகளில் 20% மாணவர்களே தேர்ச்சி பெற்றனர். போதிய வசதிகள் கல்லூரிகளில் இல்லாததே இதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.

News May 11, 2024

தோனியுடன் விளையாடுவதே பெருமை!

image

தோனிக்கு எதிராக விளையாடிய அனுபவம் குறித்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர் ரஷீத் கான் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். போட்டிக்கு பின் பேசிய அவர், “தோனி ஒவ்வொரு முறை மைதானத்திற்குள் நுழையும்போதும், அவருக்கு வேறுவிதமான வரவேற்பும், அபாரமான அன்பும் கிடைக்கிறது. அவர் ஆடும் காலத்தில் நானும் கிரிக்கெட் ஆடுகிறேன். அவருக்கு எதிராகப் பந்துவீசுகிறேன் என்பதே பெருமையான விஷயம்தான்” என்றார்.

News May 11, 2024

மோடி சொல்வது அனைத்தும் பொய்: பிரியங்கா காந்தி

image

பிரதமர் மோடி சொல்வது அனைத்தும் பொய் என்று பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், தேர்தலுக்காக மோடி பல்வேறு வாக்குறுதிகளை அளிப்பதாகவும், அவை அனைத்தும் பொய் என்றும் கூறினார். ஊழலுக்கு எதிராக தனியாளாக போராடுவதாக மோடி கூறுகிறார், அனைத்து அதிகாரங்களும், உலகத் தலைவர்களின் ஆதரவும் இருக்கையில் எப்படி தனியாளாக போராடுவதாக கூறுகிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News May 11, 2024

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு திரும்ப பெறப்படும்

image

முஸ்லிம்களுக்கு ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்க மாநிலங்களில் அளிக்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு திரும்பப் பெறப்படும் என்று அசாம் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான ஹிமந்த பிஸ்வா ஷர்மா கூறியுள்ளார். எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை எப்படி முஸ்லிம்களுக்கு வழங்க முடியும் என கேள்வி எழுப்பிய அவர், பாஜக இருக்கும் வரை இதை அனுமதிக்காது என்றும் கூறினார்.

News May 11, 2024

சூர்யா உடன் இணைந்த சந்தோஷ் நாராயணன்?

image

சூர்யாவின் 44ஆவது படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள இப்படமானது, அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாக உள்ளது. இந்நிலையில், X பக்கத்தில் ரசிகர் ஒருவர் சந்தோஷ் நாராயணனிடம், “எப்போதும் போல சூர்யா 44இல், ஒரு டான்ஸ் மெட்டீரியலுக்கு பாட்டு வையுங்கள்” என்று கேட்க, அந்தப் பதிவை லைக் செய்து சூர்யா படத்திற்கு இசையமைப்பதை உறுதி செய்துள்ளார்.

News May 11, 2024

ரிஷப் பண்டுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை

image

ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்டுக்கு ஒரு போட்டியில் விளையாட பிசிசிஐ தடை விதித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி பந்துவீச அதிகம் நேரம் எடுத்து கொண்டதற்காக அவருக்கு ரூ.30 லட்சம், மற்ற வீரர்களுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் அபராதம் விதிக்கப்படுவது 3ஆவது முறை என்பதால், ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது.

News May 11, 2024

மகனுடன் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தாய்

image

10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில், தாயும் மகனும் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற்ற சுவாரஸ்ய சம்பவம் திருவண்ணாமலையில் நடந்துள்ளது. வந்தவாசியைச் சேர்ந்த நித்தியா, 9ஆம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை கைவிட்டுவிட்டு காலை உணவுத் திட்ட சமையலராக பணியாற்றி வருகிறார். கல்வி கற்கும் ஆசை வர, தனியார் பயிற்சி மையத்தில் படித்து பொதுத் தேர்வு எழுதி, அரசுப் பள்ளியில் படிக்கும் தன் மகன் சந்தோஷுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.

News May 11, 2024

பாஜக கூட்டணி வென்றால் அமித் ஷாவே பிரதமராவார்

image

மத்தியில் பாஜக கூட்டணி வென்றால், உள்துறை அமைச்சர் அமித் ஷாவே பிரதமராவார் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 75 வயதானால் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டுமென்ற விதியை பாஜகவில் மோடி உருவாக்கியதாகவும், அதன்படி அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சின்ஹா விலகியதாகவும், செப்.17ல் மோடிக்கு 75 வயதாவதால் அவரும் விலகி விடுவார், ஆதலால் அமித் ஷாவை பாஜக பிரதமராக்கும் என்று கெஜ்ரிவால் கூறினார்.

error: Content is protected !!