India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கூட்ட நெரிசலை தவிர்க்க, தாம்பரத்தில் இருந்து தென்மாவட்டங்கள் வழியே திருவனந்தபுரம் கொச்சுவேலிக்கு 14 நாள்களுக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 16, 18,23,25,30, ஜுன் 1,6,8,13,15,20,22,27,29 தேதிகளில் இரவு 9.40 மணிக்கு ரயில் புறப்படும். செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், திருச்சி, மதுரை, கடையநல்லூர், தென்காசி வழியே கொச்சுவேலிக்கு மறுநாள் செல்லும். அதே மார்க்கத்தில் திரும்பும்.
அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க இயக்குநர் மகிழ் திருமேனி விடாமுயற்சி செய்துவருகிறார். திட்டமிட்ட பட்ஜெட்டை இப்போதே தாண்டிவிட்டதால், பிசினஸ் கணக்குகளைச் சொல்லி, அடுத்தக்கட்ட ஷூட்டிங்கிற்கு லைகா நிறுவனம் பணம் தரமறுத்துள்ளது. அஜித் தனது சம்பளத்தில் 20 சதவீதத்தை விட்டுக்கொடுத்தால், மேற்கொண்டு பணத்தைத் தர சம்மதம் என்று லைகா தரப்பில் சொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, வங்கியில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்விதமான பரிவர்த்தனையும் மேற்கொள்ளாத, இருப்பு இல்லாத கணக்குகளை ரத்து செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அந்த கணக்குகளை பயன்படுத்த விரும்பினால், KYC ஆவணங்களை சமர்ப்பித்து புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த நடைமுறை ஜூன் 1 அன்று அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம் என தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். எத்தனை வாகனங்கள் வருகிறது என்பதை கணக்கிடவே இ-பாஸ் நடைமுறை என விளக்கமளித்த அவர், செல்போன் மூலமாகவே உடனடியாக அதனைப் பெறலாம் என்றார். மேலும், இந்த நடைமுறையால் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித தொந்தரவும் இருக்காது எனவும் அவர் விளக்கமளித்தார்.
மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் அருகில் அமர்வதே பாவம் என மம்தா விமர்சித்துள்ளார். ஆளுநர் மாளிகை பெண் ஊழியரிடம் பாலியல் சிண்டலில் ஈடுபட்டதாக ஆனந்த போஸ் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், புகாரை மறுத்து ஆளுநர் வெளியிட்ட சிசிடிவி வீடியோவில், சர்ச்சை காட்சி இல்லை. இதுகுறித்து பேசிய மம்தா, அது எடிட் செய்யப்பட்டது, தன்னிடம் முழு வீடியோவுடன் கூடிய பென் டிரைவ் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, தென்காசி, நெல்லை, திருப்பூர், ஈரோடு, சேலம், ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது, இதனால், தாழ்வான இடங்களிலும், சாலைகளிலும் மழைநீர் தேங்கக் கூடும் என்று வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஜுலை 10இல் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியே தனது கடைசி டெஸ்ட் என அவர் குறிப்பிட்டுள்ளார். 41 வயதாகும் அவர், இதுவரை 187 டெஸ்டில் 700 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். முரளிதரன், வார்னேவுக்கு பிறகு அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது வீரர் ஆவார்.
பிரதமர் மோடியின் நாடகங்கள் அனைத்தும் ஜூன் 4இல் முடிந்துவிடும் என்று சிவசேனா (UBT) கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். மும்பையில் பேசிய அவர், “மோடி தான் பயன்படுத்தும் வார்த்தைகள் மூலம் பிரதமர் பதவியின் மதிப்பை குறைத்து வருகிறார். அவரால் நாட்டின் பெயரும் கெடுகிறது. பதஞ்சலி எண்ணெய்யைத் தலையில் தேய்த்துக் கொண்டு ஓய்வெடுங்கள், நாட்டை நாசப்படுத்தாதீர்கள்” என பிரதமர் மோடியை சாடியுள்ளார்.
2025ஆம் நிதியாண்டில் 12,000 பேரை எஸ்பிஐ பணியமர்த்த உள்ளதாக அதன் தலைவர் தினேஷ் ஹாரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 11,000- 12,000 பேரை வேலைக்கு தேர்வு செய்ய உள்ளதாகவும், இதில் 10,000 பணியிடங்கள் இன்ஜினியரிங் பணியிடங்கள் என்றும் கூறினார். இதில் 85% பேர் புதியவர்கள் என்ற கூறிய ஹாரா, தொழில்நுட்ப திறன் கொண்டோருக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஐபிஎல் தொடரின் 60ஆவது லீக் போட்டியில் இன்று மும்பை-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. ஈடன் கார்டன் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ள நிலையில், மழை காரணமாக டாஸ் போடுவது தாமதமாகியுள்ளது. இரு அணிகளும் இதுவரை 33 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், 23 போட்டிகளில் MI அணியும், 10 போட்டிகளில் KKR அணியும் வெற்றி பெற்றுள்ளன. இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்?
Sorry, no posts matched your criteria.