News May 11, 2024

உலக அளவில் வரவேற்பை பெற்ற “SPY” திரைப்படங்கள்

image

உலக அளவில் வரவேற்பை பெற்ற “SPY” திரைப்படங்களை தெரிந்து கொள்ளலாம். *தி பார்ன் சுப்ரிமேஷி *தி பார்ன் அல்டிமேட்டம் *கேசினோ ராயல் *தி பார்ன் ஐடென்டி *ஸ்கை பால் *தி டே ஆப் த ஜேக்கல் *ஸ்பை கேம் *டாக்டர் நோ *கோல்ட் பிங்கர் *ஸ்பெக்டர் *பேட்ரியாட் கேம்ஸ் *தன்டர்பால் *ட்ரூ லைஸ் *எனிமி ஆப் தி ஸ்டேட் *டைமண்ட்ஸ் ஆப் பார்எவர் *சால்ட் *மிஷன் இம்பாசிபிள் *ரோனின் *முனிச் *ஆர்கோ *ஹானா

News May 11, 2024

தோனியை சந்திக்க அத்துமீறிய மாணவர் கைது

image

சிஎஸ்கே வீரர் தோனியை சந்திக்க அத்துமீறி மைதானத்துக்குள் புகுந்த இளைஞரை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர். அகமதபாத்தில் குஜராத் டைடன்ஸ், சென்னை அணிக்கு இடையேயான போட்டி இடைவேளையின்போது, மைதானத்துக்குள் இளைஞர் புகுந்து ஓடினார். அவரை அங்கிருந்த காவலர் ஒருவர் மடக்கிப் பிடித்தார். விசாரணையில் அவர் கல்லூரி மாணவர் என்பதும், தோனியை பார்க்க அத்துமீறி மைதானத்துக்குள் புகுந்ததும் தெரிய வந்தது.

News May 11, 2024

விண்ணை முட்டும் இளநீர் விலை

image

ஏழைகளின் குளிர்பானம் என்று அழைக்கப்படும் இளநீரின் விலை, விண்ணை முட்டும் அளவுக்கு எகிறியது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. கோடைகாலத்தில் உடல் சூட்டை தணிக்க, மக்கள் அதிகளவு இளநீரை பருகுவர். இந்நிலையில், ₹20-₹40 வரை விற்பனையான இளநீர், தற்போது ₹60-₹80 வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக, செவ்விளநீர் ₹100 வரை விற்பனையாகிறது. இந்த விலையேற்றம் பணச் சுமையை மேலும் அதிகரிப்பதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

News May 11, 2024

மோடியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார்

image

பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தான் தயாராக இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் பொது அழைப்பை விடுத்திருந்தனர். இதனை ஏற்பதாகக் கூறிய ராகுல் காந்தி, மக்களுக்கு முன்பாக அரசியல் கட்சிகள் தங்களின் பார்வைகளை முன்வைக்கும் ஆக்கப்பூர்வமான நல்ல முன்னெடுப்பாக இந்த விவாதம் அமையட்டும் என்று வரவேற்றுள்ளார்.

News May 11, 2024

F.D. டெபாசிட் வட்டியை மாற்றியமைத்த வங்கிகள்

image

ரூ.2 கோடி வரை 400 நாள்கள் F.D. செய்யும் சாதாரண மக்களுக்கு 5%- 7.25% வரையும், மூத்த குடிமக்களுக்கு 5%- 7.75% வரை வட்டி வழங்கப்படுமென CUB தெரிவித்துள்ளது. 18 முதல் 24 மாதங்களுக்கு ரூ.2 கோடி வரை டெபாசிட் செய்யும் சாதாரண மக்களுக்கு 8%, மூத்த குடிமக்களுக்கு 8.50% வட்டி வழங்கப்படுமென RBL தெரிவித்துள்ளது. உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி, கேபிடல் ஸ்மால் பைனான்ஸ் வங்கியும் F.D. வட்டியை மாற்றியுள்ளன.

News May 11, 2024

கொல்கத்தா அணி பேட்டிங்

image

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் விளையாடுகிறது. ஈடன் கார்டன் மைதானத்தில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 8இல் வெற்றி பெற்றுள்ள KKR அணி, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 12 போட்டிகளில் விளையாடி 4இல் வெற்றி பெற்ற MI பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்ததால், இது அந்த அணிக்கு சம்பிரதாய ஆட்டம் தான்.

News May 11, 2024

ஒடிஷா முதல்வருக்கு மோடி சவால்

image

ஒடிஷா மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களின் பெயர்களை தெரிவிக்க முடியுமா என்று ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு மோடி சவால் விடுத்துள்ளார். பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், ஒடிஷா முதல்வராக நீண்டகாலம் நவீன் பட்நாயக் பதவி வகிப்பதாகவும், அப்படியிருக்கும் அவரால் குறிப்புகள் இல்லாமல் மாவட்டங்களின் பெயர்களையும், அதன் தலைநகர்களின் பெயர்களையும் தெரிவிக்க முடியுமா என்று சவால் விடுத்தார்.

News May 11, 2024

ஐபிஎல் போட்டி 16 ஓவர்களாக குறைப்பு

image

மும்பை-கொல்கத்தா அணிகள் இடையிலான ஐபிஎல் போட்டி 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது. கொல்கத்தா மைதானத்தில் போட்டி நடைபெற இருந்த நிலையில், மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதமானது. தற்போது மழை நின்றுள்ளதால் டாஸ் போடுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெறுகிறது. இந்நிலையில், நேரமின்மை காரணமாக 20 ஓவர் ஐபிஎல் போட்டி தற்போது 16 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்?

News May 11, 2024

கெஜ்ரிவாலுக்கு சட்டத்தை பற்றிய புரிதல் இல்லை

image

உச்ச நீதிமன்றம் தனக்கு அளித்த இடைக்கால ஜாமினை, நற்சான்றிதழாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கருதுகிறார் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “கெஜ்ரிவாலுக்கு சட்டத்தை பற்றிய புரிதல் இல்லை. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடத்தான் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டதே தவறு என்று நீதிமன்றம் சொல்லவில்லை” என்றார்.

News May 11, 2024

ஒழுங்கு நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை

image

2024-25 கல்வியாண்டில், பொது மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களில் தவறு இருந்தால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என கல்வித்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையில், மே 13 – 17ஆம் தேதி மாலை 6 மணி வரை EMIS மூலம் பொதுமாறுதல் கோரி விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பங்களில் தவறு இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!