News May 12, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

◾பால்: பொருட்பால்
◾அதிகாரம்: அறிவுடைமை
◾குறள்: 421
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.
◾விளக்கம்:
பகையால் அழிவு வராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.

News May 12, 2024

பாகிஸ்தானை காட்டி காங்கிரஸ் அச்சுறுத்த பார்க்கிறது

image

பயங்கரவாதிகளுடன் காங்கிரஸ் கட்சி கைகோர்த்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். பொக்ரானில் அணு ஆயுத சோதனை செய்து இந்தியா சாதனை படைத்ததாக கூறிய அவர், பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சி மக்களை அச்சுறுத்துவதாக விமர்சித்தார். பாகிஸ்தான், தான் வைத்திருக்கும் அணுகுண்டை பராமரிக்க கூட பணம் இல்லாமல் திண்டாடி வருவதாகவும் பிரதமர் மோடி அந்நாட்டை கிண்டலடித்தார்.

News May 12, 2024

முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு சென்ற கொல்கத்தா

image

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக கொல்கத்தா பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று அதிகாலை மும்பைக்கு எதிராக போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் இந்த சாதனையை அந்த அணி படைத்தது. 12 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 9 வெற்றி, 3 தோல்விகளுடன் 18 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான், ஹைதராபாத், சென்னை அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

News May 12, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மே 12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News May 12, 2024

மத்திய அரசின் மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள்

image

பிரதமரின் பேச்சில் இருந்த கர்வம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பின்மை மற்றும் பணவீக்கத்தால் மத்திய அரசின் மீது மக்கள் கோபத்தில் இருப்பதாக தெரிவித்த அவர், மோடி மீண்டும் தேர்தலில் வென்று ஆட்சியமைப்பது மிகவும் கடினம் என்றார். நாட்டில் உள்ள ஏழை மக்களின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாக்க பாஜக தவறவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

News May 12, 2024

கொல்கத்தா அணி அசத்தல் வெற்றி

image

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா 157/7 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் வெங்கடேஷ் ஐயர் 42 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடி மும்பை அணி, ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறியது. அந்த அணி 20 ஒவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் இஷான் கிஷன் 40 ரன்கள் எடுத்தார்.

News May 12, 2024

மனச்சோர்வை போக்கும் உணவுகள்…

image

நவீன வாழ்க்கை முறையின் பல நோய்களுக்கு முக்கிய காரணியாக இருப்பது மனச்சோர்வு. மனநலம் கெடுவதால் உடல்நலமும் கெட்டுப்போகிறது. ஆகவே துரித உணவுகளை தவிர்த்து வால்நட், தானியங்கள், கிரின் டீ, பால் பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை உட்கொள்வதன் மூலம் மனச்சோர்வில் இருந்து விடுபடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த உணவுகளை பின்பற்றி மனச்சோர்வில் இருந்து விடுபடுங்கள்.

News May 12, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மே 12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News May 12, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ எதிர்க்கட்சியாக கூட காங்கிரஸ் வராது – மோடி
➤ ஜூன் 4-க்கு பிறகு மோடி ஓய்வு பெறுவார் – ஜெக்ரிவால்
➤ முஸ்லிம் இட ஒதுக்கீடு திரும்ப பெறப்படும் – ஹிமந்த பிஸ்வா ஷர்மா
➤ மோடியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் – ராகுல்
➤ ‘எலெக்‌ஷன்’ படத்தின் டிரைலர் வெளியீடு
➤ தோனியுடன் விளையாடுவதே பெருமை – ரஷீத் கான்

News May 12, 2024

உக்ரைனுக்கு 400 மில்லியன் டாலர் ராணுவ உதவி

image

ரஷ்யாவுடன் போர் நடத்தி வரும் உக்ரைனுக்கு 400 மில்லியன் டாலர் ராணுவ உதவிகளை அமெரிக்க வழங்கவுள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட குறிப்பில், உக்ரைனுக்கு உதவ அதிநவீன ஆயுதங்கள், ஏவுகணைகள், டாங்கிகள் வழங்கவுள்ளோம். அத்துடன், உக்ரைன் வீரர்களுக்கு ராணுவ கல்வி & பயிற்சிகளை அமெரிக்க பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் வழங்குவதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது

error: Content is protected !!