News May 12, 2024

கோடை மழையால் குறையும் வெயிலின் தாக்கம்

image

ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழ்நாட்டில் கொளுத்திய வெயில் தற்போது தணியத் தொடங்கியிருக்கிறது. கோடை மழை பெய்து வருவதால் நேற்று ஈரோட்டில் மட்டுமே வெயில் 40 டிகிரி சென்டிகிரேட்டை தொட்டது. வழக்கமாக அதிக வெப்பம் பதிவாகும் வேலூரில் 37.6 டிகிரி, கரூர் பரமத்தியில் 38.2 டிகிரி என வெப்பம் பதிவாகியிருந்தது. சென்னையில் அதிகபட்ச வெப்பம் 35 டிகிரி என்ற அளவில் மட்டுமே பதிவாகியிருந்தது.

News May 12, 2024

சித்தராமையாவை பாராட்டிய எடியூரப்பா

image

கர்நாடக முதல்வர் சித்தராமையாவை, எடியூரப்பா புகழ்ந்து பேசியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவை சேர்ந்த சீனிவாச பிரசாத் எம்.பி. கடந்த மாதம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் சித்தராமையாவும், எடியூரப்பாவும் ஒன்றாக கலந்து கொண்டனர். இதில் பேசிய எடியூரப்பா, சித்தராமையாவை ‘ஜனபிரிய’ (மக்கள் நேசிக்கும்) முதல்வர் எனக் கூறி வியப்பை ஏற்படுத்தினார்.

News May 12, 2024

96 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

image

நான்காம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (மே 13) நடைபெறவுள்ளது. ஆந்திரா, தெலங்கானா, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதோடு சேர்த்து ஆந்திராவில் உள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இவற்றுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது.

News May 12, 2024

IPL: இன்று தோற்றால் வீட்டிற்கு!

image

நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி இன்று தோல்வியை தழுவினால் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது என்ற நிலை உருவாகியிருக்கிறது. 12 போட்டிகளில் விளையாடியிருக்கும் அந்த அணி, 10 புள்ளிகளுடன் இன்று டெல்லி அணியை எதிர்கொள்கிறது. ஆனால், தொடர் வெற்றிகளை RCB பதிவு செய்து வருவதால் இன்றும் கோலியின் ருத்ர தாண்டவம் இருக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

News May 12, 2024

சேலத்தில் 5 செ.மீ மழை

image

நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 5.30 மணி வரை நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 5.5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அடுத்தபடியாக சேலத்தில் 5 செ.மீ மழையும் கோயம்புத்தூரில் 2.2 செ.மீ மழையும் பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை, திருச்சி, ஏற்காடு, திருப்பத்தூர், கமுதி, வாழப்பாடி ஆகிய பகுதிகளிலும் குறிப்பிடத்தகுந்த அளவு மழை பெய்துள்ளது.

News May 12, 2024

சொந்த வீடு அமைய வணங்க வேண்டிய தெய்வம்

image

ஒருவருக்கு சொந்த வீடு அமையுமா என்பதை லக்னத்திலிருந்து, நான்காவது வீட்டை ஆராய்ந்து பார்த்து அதன் பிறகு முடிவு எடுக்க வேண்டும். நான்காவது வீட்டின் அதிபதி பலமாக இருந்தால் கண்டிப்பாக அவருக்கு சொந்த வீடு அமையும். செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சார்த்தி, எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து அக்கம் பக்கத்தாருக்கு வழங்கினால், வீடு மனை யோகம் கிடைக்கும் வாய்ப்பு அமையும்.

News May 12, 2024

ஆசிரியர்கள் பொது இடமாறுதலுக்கு கட்டுப்பாடு

image

பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள் தற்போதைய பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24 முதல் நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மே 13 – 17 வரை எமிஸ் தளத்தில் பதிவேற்ற வேண்டும். மாறுதல் ஆணை பெற்றவர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது என்றும் கூறப்பட்டுள்ளது.

News May 12, 2024

பலாப்பழத்தை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?

image

பலாப்பழத்தில் சர்க்கரையின் அளவு சற்று அதிகமாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகளும், கர்ப்பக் காலத்தில் அதிக சர்க்கரையால் அவதிப்படும் பெண்களும் இதை தவிர்க்க வேண்டும். பலாப்பழம் ரத்தம் உறைதலை விரைவுபடுத்த கூடியது எனக் கூறப்படுவதால், ரத்த சம்பந்தமான நோய்கள் இருப்பவர்கள், பலாப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பலாப்பழம் மிகச்சிறந்த மலமிளக்கியாக இருப்பதால், அதை அளவோடு சாப்பிடுவதே நல்லது.

News May 12, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ பாஜகவின் தோல்வி முடிவு செய்யப்பட்ட ஒன்று – உத்தவ் தாக்கரே
➤கெஜ்ரிவாலுக்கு இந்தியாவின் அரசியல் சாசன சட்டம் தெரியாது – அமித் ஷா
➤ மே.வங்க ஆளுநருக்கு எதிராக வீடியோ உள்ளது – மம்தா
➤ மோடி சொல்வது அனைத்தும் பொய் – பிரியங்கா காந்தி
➤ YSR கட்சிக்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஆதரவு
➤ கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் மும்பை அணி தோல்வி

News May 12, 2024

காங்கிரஸை கடுமையாக விமர்சித்த யோகி ஆதித்யநாத்

image

மக்களவைத் தேர்தல் ராம பக்தர்களுக்கும், ராம துரோகிகளுக்கும் இடையிலானது என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்புக்கு எதிராக, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்து மத அடிப்படையில் நாட்டை காங்கிரஸ் பிளவுப்படுத்தியதாக தெரிவித்த அவர், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினால், ஓபிசிக்கள் எங்கே போவார்கள் என்று கேள்வி எழுப்பினார். மேலும், ராமரின் தேசத்தில் பிரிவினைவாதிகளுக்கு இடமில்லை என்றார்.

error: Content is protected !!