India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
RCB-DC இடையேயான ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இது விராட் கோலியின் 250ஆவது ஐபிஎல் போட்டி ஆகும். இதுவரை எந்தவொரு அணிக்கும் மாறாமல், ஒரே அணிக்காக 250 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை இன்று அடையப் போகிறார் விராட் கோலி. நடப்பு ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி வரும் அவர், இன்று சதம் அடிப்பாரா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகரும், தவெக தலைவருமான விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் வாழ்த்துக் குறிப்பில், “அன்பின் முழு உருவமாய் திகழ்ந்து, குழந்தைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும் தம் வாழ்நாளையே தியாகம் செய்யும் தாய்மார்களுக்கு என் அன்னையர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னையரை இன்று மட்டுமல்ல, எந்நாளும் போற்றி வணங்குவோம்” என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
புகழின் உச்சத்தில் இருந்தபோது ODI, T20 போட்டிகள் விளையாட மாட்டேன் என்று அறிவித்தவரை பார்த்திருக்கிறீர்களா? அவர்தான் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் (ஜிம்மி) ஆண்டர்சன். டெஸ்ட் கிரிக்கெட்டின் மீது கொண்டிருந்த காதல் காரணமாக 2015ஆம் ஆண்டுமுதல் அவர் ODI விளையாடவில்லை. கிரிக்கெட்டின் அழகான அம்சமான ஸ்விங் பவுலிங்கை ஜிம்மி போல நேர்த்தியாக கையாண்டவர்கள் மிகக்குறைவு.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ₹3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து மாநில அரசு புதிய சாதனை படைத்துள்ளது. திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 37,720 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில், 92 திட்டப் பகுதிகளில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகளை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கியதாகக் கூறப்பட்டுள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி, இடைக்கால ஜாமினில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், தீவிர பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். அதற்கு முன்னதாக, அவர் ஆம் ஆத்மி எல்எல்ஏக்கள் உடன் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். காலை 11 மணியளவில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், தேர்தல் பிரசாரம் குறித்து பல்வேறு வியூகம் வகுக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையரசி ஊட்டியின் மணிமகுடமாம் மலை ரயிலுக்கு 125 வயது ஆகிறது. 45 ஆண்டுகாலம் போராடி குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே அமைக்கப்பட்ட ரயில் பாதை 1899ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. ஸ்விட்சர்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறப்பு ரயில் இஞ்சின் இந்த பயணத்திற்கு பயன்படுத்தப்பட்டது. இன்றுவரை குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே நீராவி இஞ்சின்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன.
ரஞ்சித் நடிப்பில் உருவாகியுள்ள ‘குழந்தை C/O கவுண்டம்பாளையம்’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு கலந்து கொண்டார். அப்போது அவர், “நாடகக் காதல் பண்றதும் ஒன்னுதான். ஒரு பெண்ணை சீரழிப்பதும் ஒன்றுதான்” என்று ஆவேசமாக பேசினார். “எந்த ஜாதியாக இருந்தாலும் பெண்ணை ஏமாற்றுகின்றவன் மனித ஜாதியே இல்லை. அநியாயத்தை தட்டிக் கேட்க ஜாதி எதுவும் தேவையில்லை” என்று பேரரசு கருத்து தெரிவித்தார்.
தமிழகத்தில் இன்று பிற்பகல் 1 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏற்கெனவே, இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
டெல்டாவில் ஒருபோக சாகுபடிக்குக்கூட தண்ணீர் இல்லாமல் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக, விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வேதனை தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு பிடிவாதம் பிடிப்பதாகக் கூறிய அவர், காவிரியின் உரிமையைப் பெற தமிழ்நாடு அரசு தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் திமுக அரசு அலட்சியம் காட்டுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் தொடங்கியதில் இருந்து, பங்குச்சந்தை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக, தேர்தல் முடிவுகள் குறித்த சமீபத்திய சமிக்ஞை, பங்குகளின் சரிவுக்கு வித்திட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எந்த கட்சி ஆட்சியை பிடித்தாலும், சந்தை சற்று சரிந்து பின் உயர வாய்ப்பிருப்பதாகவும், பெரும்பான்மை கிடைக்காதபட்சத்தில் பெரும் சரிவை எதிர்பார்க்கலாம் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.