News May 12, 2024

அன்னையர் தின சிறப்புத் திரைப்படங்கள்

image

அன்னையர் தினத்தில் பார்க்க வேண்டிய உணர்வுப்பூர்வமான தமிழ் படங்கள்: ▶தியாகராஜன் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘அன்னை ஓர் ஆலயம்’, ▶மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’, ▶அமீர் இயக்கத்தில் ஜீவா நடித்த ‘ராம்’, ▶சசிகுமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’, ▶மணிரத்னம் இயக்கத்தில் மாதவன் நடித்த ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ▶தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி’.

News May 12, 2024

Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பாபா ராம்தேவ்?

image

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை பாபா ராம்தேவ் புகழ்ந்து பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ராகுலின் உடற்தகுதி குறித்து அவர் பாராட்டி பேசுகிறார். இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சி அமைக்கப்போவதை உணர்ந்து, ராகுலை பாஜக ஆதரவாளரான பாபா ராம்தேவ் பாராட்டியுள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், வீடியோவை ஆராய்ந்ததில், அது பழைய வீடியோ எனத் தெரியவந்துள்ளது.

News May 12, 2024

சென்னையில் குழந்தைகளை கொன்ற தந்தை

image

சென்னை மேற்கு மாம்பலத்தில் பெற்ற குழந்தைகளையே கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரும்பு வியாபாரம் செய்துவந்த மோகன் ராஜ்க்கு (47) மனைவி யமுனா (37) மீது சந்தேகப் பார்வை இருந்துள்ளது. அது பூதாகரமாகவே, 14 வயது மகளையும், 6 வயது மகனையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டார் மோகன் ராஜ். இதுபற்றி மோகன்ராஜ் எழுதிய கடிதம் சிக்கியுள்ளது.

News May 12, 2024

‘G.O.A.T’ பட இசை வெளியீட்டு விழாவால் ரசிகர்கள் சோகம்

image

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் விஜய்யின் ‘G.O.A.T’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் 2ஆவது பாடல் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்நிகழ்ச்சியில் நேரில் பங்கேற்க முடியாத ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

News May 12, 2024

வனப்பகுதி மக்கள் மீதான வன்முறை கண்டனத்திற்குரியது

image

ஒகேனக்கல் அருகே வனப்பகுதி மக்களை தாக்கிய காவல்துறையின் செயலுக்கு இபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பூர்வகுடி மக்களை வெளியேற்ற அவர்களின் வீடுகளை உடைத்து வனத்துறை, காவல்துறை அராஜகம் செய்துள்ளதாக சாடிய அவர், மனிதாபிமானம் இன்றி வன்முறையில் ஈடுபடுவது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல என்று கண்டித்தார். மேலும், பூர்வகுடி மக்கள் அச்சுறுத்தலின்றி வாழ அரசு நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தினார்.

News May 12, 2024

சண்டே சமையல் டிப்ஸ்…

image

* இறைச்சியை வேக வைக்கும்போது சிறிது பாக்கு சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும். *புளிக்குழம்பு வைக்கும் போது கடைசியில் மிளகு, சீரகத்தை அரைத்து சேர்த்தால் சுவையாக இருக்கும். *சீடை செய்யும்போது அதை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது. *வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.

News May 12, 2024

நாளை களம் காணும் நட்சத்திர வேட்பாளர்கள்

image

மக்களவைத் தேர்தலுக்கான 4ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. இதில், உ.பி. கன்னோஜ் – சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், உ.பி. கேரி – பாஜக சார்பில் அஜய் மிஸ்ரா, மே.வங்கத்தின் கிருஷ்ணாநகர் – TMC சார்பில் மஹுவா மொய்த்ரா, மே.வங்கத்தின் பஹரம்பூர் – காங்., சார்பில் ஆதிர் ரஞ்சன், ஹைதராபாத் – ஓவைசி, ஆந்திராவின் கடப்பா – காங். சார்பில் ஒய்.எஸ்.ஷர்மிளா உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

News May 12, 2024

மகிழ்ச்சியில் ‘ஸ்டார்’ படக்குழு

image

கவினின் ‘ஸ்டார்’ படம் மீது கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், திரையரங்குகளில் கூட்டம் அதிகரித்துள்ளது. தற்போது திரைக்கு வந்துள்ள மற்ற படங்களுடன் ஒப்பிடுகையில், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழ்நாட்டில் 180க்கும் அதிகமான காட்சிகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

News May 12, 2024

சென்னை வந்தடைந்தார் ‘தல தோனி’

image

CSK-RR இடையேயான ஐபிஎல் போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்காக, CSK வீரர்கள் இன்று விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த தோனியை, ரசிகர்கள் “தல..தல…” என்று ஆரவாரம் செய்து உற்சாகமாக வரவேற்றனர். பின்னர், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தபடி தோனி பேருந்தில் ஏறிச் சென்றார். இன்றைய போட்டியில் சென்னை வெற்றி பெறுமா?

News May 12, 2024

அதிமுக தலைமை மாறலாம்: அமைச்சர் ரகுபதி

image

தேர்தலுக்கு பின் செங்கோட்டையன் அல்லது வேலுமணி தலைமையில் அதிமுக இயங்கும் என செய்திகள் வருவதாகக் கூறி அமைச்சர் ரகுபதி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அதிமுகவில் பிளவை உண்டாக்கும் வேலையை திமுக செய்யாது என்று கூறிய அவர், பாஜக தான் அதைச் செய்யும் எனவும் சாடினார். ஏற்கெனவே, செங்கோட்டையன், வேலுமணி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!