India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெங்களூருவில் மே 18ம் தேதி மழை பெய்ய உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, அன்றைய தினம் பெங்களூருவில் நடைபெற உள்ள சிஎஸ்கே – ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டி பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அவ்வாறு, மழையால் போட்டி பாதிக்கப்பட்டால், இரு அணிகளும் பிளேஆஃப் செல்வதில் சிக்கல் ஏற்படலாம்.
தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் 103 கூட்டங்களில் பங்கேற்றுள்ள நிலையில், ராகுல் 40 கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். தொலைக்காட்சிகள், நாளேடுகளுக்கு மொத்த 24 பேட்டிகளை மோடி அளித்துள்ளார். ராகுல் காந்தி சிறப்பு பேட்டிகள் எதுவும் அளிக்கவில்லை. 21 ரோடு ஷோக்களில் பங்கேற்ற பிரதமர், நூற்றுக்கணக்கான கோயில்களில் தரிசனம் செய்துள்ளார். நியாய யாத்திரை மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களை ராகுல் சந்தித்தார்.
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பதினொன்றாம் வகுப்புக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப்பையே அதிகம் தேர்வு செய்வதாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். முன்பெல்லாம் மருத்துவப் படிப்புக்கு பயன்படும் பயாலஜி குரூப்பை தேர்வு செய்யவே மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுவர். தற்போது நீட் தேர்வு அழுத்தம் காரணமாக கம்ப்யூட்டர் சயின்ஸ் பக்கம் மாணவர்களின் கவனம் திரும்பியிருக்கிறது.
மோடி மீண்டும் ஆட்சியமைத்தால் தலித்துகள், தாழ்த்தப்பட்டவர்கள் அடிமைகளாக மாறுவார்கள் என கார்கே தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பை மாற்ற வேண்டும் என்ற கொள்கை உடைய பாஜக, மீண்டும் ஆட்சிக்கு வருவது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்ற அவர், பொய்களை மட்டுமே பேசும் மோடி மீண்டும் தேவையில்லை என்றார். விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதற்கு பதிலாக, அவர்களின் உற்பத்தி செலவை மோடி அதிகரித்துள்ளதாகவும் விமர்சித்தார்.
2000 ஆண்டுகளுக்கு மேலாக சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதியை ஒழிக்க கொண்டு வரப்பட்டதே இடஒதுக்கீட்டு முறை. ஆனால், சாதியை ஒழிக்க இட ஒதுக்கீட்டையும், சாதி சான்றிதழ்களையும் தூக்கிப் போட வேண்டும் என்று இயக்குநர் பேரரசு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சாதியை ஒழிக்க இட ஒதுக்கீடா? இட ஒதுக்கீட்டால் சாதியா? உங்களது கருத்தை கமெண்ட்டில் சொல்லுங்க.
சிறுமியுடன் விருப்பத்துடன் உறவு வைத்துக் கொண்டாலும் அது குற்றம்தான் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் சிக்கிய வாலிபர் சதீஷ் குமாருக்கு (25) 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது. 15 வயது சிறுமியும், சதீஷ்குமாரும் காதலித்து வந்ததாகவும் விருப்பத்தின் பேரிலேயே உறவு வைத்துக் கொண்டதாகவும் வழக்கறிஞர் வாதாடினார். ஆனால், அதனை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இந்தியாவில் இருந்து ஹஜ் யாத்திரை செல்வோருக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வசதிகளைச் செய்து வருகின்றன. இந்தாண்டு சுமார் 1.75 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு மருத்து முகாம் மற்றும் தடுப்பூசி முகாமை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று முதல் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
நேற்று மதியம் நடந்த போட்டியில் RR அணியை வீழ்த்தி CSK ப்ளே ஆஃப்-க்கு தகுதிபெறும் வாய்ப்பை தக்கவைத்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் ஆரம்பத்தில் இருந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் RR, நேற்றையை போட்டியில் மிக மோசமாக விளையாடியது. இதனால், இப்போட்டி முழுக்க முழுக்க Fixing செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கும் நெட்டிசன்கள், #Fixing என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.
ஆந்திராவில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முக்கிய அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, நடிகர்கள் ஜுனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் தங்களது ஜனநாயக கடமையாற்றினர்.
தமிழ் சினிமாவுலகில் அரசியல் ரீதியான இரண்டு அணிகள் உருவாகி வருகின்றன. பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், வெற்றி மாறன் போன்ற தலித் அரசியல் பேசும் இயக்குநர்கள் ஒருபுறம். பேரரசு, நடிகர் ரஞ்சித், மோகன். ஜி, RB. உதயகுமார், கனல் கண்ணன், பிரவீன் காந்தி என அவர்களுக்கு எதிரான அரசியல் பேசுபவர்கள் ஒருபுறம் என இரு அணியாக பிரிந்து நிற்கின்றனர். இதுகுறித்து உங்களது கருத்து என்ன?
Sorry, no posts matched your criteria.