India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கூட்டணி ஆட்சியா? தனிப்பெரும்பான்மை ஆட்சியா? என்ற கோணத்தில் அதிமுக – பாஜக கூட்டணிக்குள் குழப்பம் இருந்தது. கோவையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இபிஎஸ், பாஜக தலைவர்கள் முன்னிலையிலேயே அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் எனக் கூறினார். இதனை வரவேற்கும் விதமாக, நாளைய முதல்வர் இபிஎஸ் என நயினார் நாகேந்திரனும் பேசி இருக்கிறார். திடீர் திருப்பமாக பிரச்னை சீக்கிரமே முடிவுக்கு வந்திருக்கிறது.
இந்தியாவுக்கு எதிரான U19 ODI போட்டியில் இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இந்தியாவில், அம்பிரீஷ்(66) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். இதனால் 210 ரன்களை மட்டுமே இந்தியா சேர்த்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்தில், பென் மேயஸ் 82 ரன்கள் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஆனால் தொடரை இந்தியா 3-2 என கைப்பற்றியது.
இதே வேகத்தில் போனால், 2050-க்குள் கடலில் மீன்களைவிட பிளாஸ்டிக் அதிகமாக இருக்கும் நிலை ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். ஆம், நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களில் 85 சதவீதம், நிலம் (அ) கடலில் எறியப்படுகிறது. இவை கடலையும், காற்றையும் மாசுப்படுத்துகின்றன. மேலும், மீன்களின் உடலிலும் சேர்வதால், அவற்றை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்களை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக்கை தவிர்க்கலாமே!
இந்தோனேசியாவில் இந்த விநோத சம்பவம் நடந்துள்ளது. 21 வயது மனைவியுடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திவந்த நபர், திடீரென விவாகரத்து செய்துள்ளார். மாமியாரின் வயிற்றில் இவரின் குழந்தை வளர்வது தெரிய வந்ததால் ஏற்பட்ட குடும்ப சிக்கலே இதற்கு காரணம். மனைவிக்கு இப்போது இவர் வளர்ப்பு தந்தை. இதனால் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, மாமியாரை திருமணம் செய்துகொண்டார். இப்போது குழந்தையும் பிறந்துவிட்டதாம்.
ரஷ்யாவில் அதிபர் புதினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் சில மணிநேரங்களிலேயே தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உக்ரைனின் தாக்குதல் காரணமாக ரஷ்யாவில் விமான சேவை பாதிக்கப்பட்டதால் அந்த துறையின் அமைச்சர் ரோமன் ஸ்டாரோவாய்ட்டை புதின் பதவி நீக்கம் செய்தார். இதனையடுத்து, காருக்குள் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தன்னைத்தானே சுட்டு ரோமன் தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இதில் விஜய் சேதுபதியுடன் இணைந்து தபு, சம்யுக்தா, துனியா விஜய், நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த படம் தமிழ் உட்பட 5 மொழிகளில் வெளியாக உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என இபிஎஸ் வாக்குறுதி அளித்துள்ளார். கோவையில் பொதுமக்களை நேரில் சந்தித்த அவர், அத்திக்கடவு – அவிநாசி திட்டமும் விரிவுப்படுத்தப்படும் என்றார். அதிமுக ஆட்சியில் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டதாகவும், திமுக ஆட்சியில் இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டு, மும்முனை மின்சாரத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
உங்கள் PF இருப்பை SMS மூலம் சரிபார்க்க, உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு “EPFOHO UAN TAM” என்ற வடிவத்தில் ஒரு செய்தியை அனுப்பவும். UAN என்ற இடத்தில் உங்களுக்கான யுனிவர்சல் கணக்கு எண்ணை பதிவிட வேண்டும். TAM என்பது தமிழ்நாட்டை குறிக்கும். Try பண்ணி பாருங்க மக்களே..
மதுரை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டல தலைவர்களும் பதவி விலக வேண்டும் என CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மதுரை மேயர் இந்திராணியின் கணவன் பொன் வசந்தை கடந்த மே மாதம் கட்சியில் இருந்து நீக்கிய நிலையில், தற்போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மதுரையின் நிழல் மேயராக பொன் வசந்த் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகம், புதுச்சேரியில் வெப்பநிலை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இன்று சென்னை, வேலூர், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 இடங்களில் வெயில் சதமடித்து (100 டிகிரி பாரன்ஹீட்) மக்களை வாட்டி வதைத்துள்ளது. இந்நிலையில், மேலும் 2 நாள்களுக்கு வெயில் 2 – 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது. இதனால், வீட்டில் இருந்து பகல் 11 மணி – மதியம் 3 வரை வெளியே செல்வதை தவிருங்கள் நண்பர்களே..!
Sorry, no posts matched your criteria.