India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் மாதவி ராஜே இன்று காலை காலமானார். நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த சில நாள்களாக வென்டிலேட்டர் உதவியுடன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இவர் குவாலியரை ஆட்சிசெய்த குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், ராஜமாதா என்றே மக்களால் அழைக்கப்பட்டார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள மேனேஜர், சீனியர் ஆபிசர், ரிப்போர்ட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 14ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இங்கே <
பிரதமர் மோடி தனது பிரமாணப் பத்திரத்தில் ₹3.02 கோடி சொத்து உள்ளதாகவும், அதில் 2.86 கோடி (95%) FD வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதுதவிர்த்து, பங்குச்சந்தைகளில் எந்த முதலீடுகளையும் அவர் மேற்கொள்ளவில்லை. பொதுவாகவே, FD நம்பகமான முதலீடாக கருதப்படுகிறது. குறிப்பாக, மூத்த குடிமக்களுக்கு கேட்கவே வேண்டாம். மோடியின் முதலீடும், FDயின் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு போன்ற நம்பிக்கையையே காட்டுகிறது.
தமிழ்நாட்டில் இன்று தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. அதோடு, குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர் & கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மோடி போட்டியிடும் வாரணாசியில் தன்னை போட்டியிட விடாமல் தடுத்ததாக அய்யாக்கண்ணு தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். “தமிழ்நாட்டைச் சேர்ந்த அய்யாக்கண்ணுவுக்கு வாரணாசியில் என்ன வேலை? விளம்பரம் செய்து கொள்வதற்காக தேர்தலை பயன்படுத்தாதீர்கள். சமூக ஆர்வலர் என்றால் தமிழ்நாட்டில் சென்று போட்டியிடுங்கள்” என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.
கிரெடிட் கார்டு பேமெண்ட்டுகளை செலுத்த உதவும் ‘CRED’ என்ற கேட்வே App-ஐ நெட்டிசன் ஒருவர் வறுத்தெடுத்துள்ளார். கிரெடிட் கார்டு கட்டணத்திற்கு ஏற்ப நிறைய கேஷ்பேக்குகள் கிடைக்கும் என நம்பி, டெல்லியைச் சேர்ந்த ஒருவர் ₹87,000 கிரெடிட் கார்டு கட்டணத்தை செலுத்தியுள்ளார். அதற்கு கேஷ்பேக்காக வெறும் ₹1 வந்ததால், இந்த App-ஐ யாரும் பயன்படுத்தாதீர்கள் என்றும், இது ஏமாற்று வேலை என்றும் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் சிறப்புக்குழு ஆய்வு செய்யும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பட்டாசு ஆலை விபத்துகளுக்கு பாதுகாப்பு குறைபாடே காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை சரி செய்ய, வருவாய், தீயணைப்பு, தொழிலக பாதுகாப்பு ஆகிய துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
PBKS-SRH இடையேயான ஐபிஎல் போட்டி, வரும் மே 19ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில், ஷிகர் தவான், ரபாடா, சாம் கரண், லிவிங்ஸ்டன், பேர்ஸ்டோ, கிறிஸ் வோக்ஸ் ஆகிய 6 வீரர்கள் பங்கேற்கப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய பஞ்சாப் அணி, தற்போது 6 முக்கிய வீரர்கள் இல்லாமல் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
லக்னோவுக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், டெல்லி வீரர் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் புதிய சாதனை படைத்துள்ளார். 3 Four, 4 Six என விளாசிய அவர், 25 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில், கடைசி 5 ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்.
▶ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (DC) – 252 ▶தினேஷ் கார்த்திக் (RCB)- 226 ▶நிகோலஸ் பூரன் (LSG) – 211 ▶டிம் டேவிட் (MI) – 205.
தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நுழைந்து, தரம் தாழ்த்தி பேசுவது ஏற்புடையது அல்ல என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். தனது மனைவி சைந்தவியை பிரிந்தது குறித்து அறிக்கை வெளியிட்ட அவர், அனைவரிடமும் கலந்தாலோசித்து, இருவரும் பரஸ்பரமாக தான் பிரிந்தோம் என்றும், ஆதங்கமான விமர்சனங்கள் எங்கள் மனதை காயப்படுத்துகிறது என்பதால், தனி மனிதனின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள் என்றும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.