India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெண் போலீசாரை தவறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இன்று திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பெண் போலீசார் அழைத்து வந்தனர். அவர்கள் வாகனத்தில் வைத்து, தாக்கப்பட்ட இடத்திலேயே தாக்கியதாக சவுக்கு சங்கர் நீதிபதியிடம் முறையிட்டார். அதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கரின் கையை ஸ்கேன் செய்துவிட்டு வருமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த 6 மாதங்களில் 8 உயிர்பலிகள் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டிருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், இதனை கண்டுகொள்ளாமல் அரசு தூங்கி வருவதாக சாடியுள்ளார். அவருடைய அறிக்கையில், “அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், ஆன்லைன் சூதாட்ட மோகம் எப்போது ஒழியுமோ? என்று ஏங்கித் தவிப்பதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அறிமுக இயக்குநர் ஸ்வினீத் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் ரியோ ராஜ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக, ‘ஜோ’ படத்தில் நடித்த மாளவிகா மனோஜ் மற்றும் அயோத்தி படத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்தப் படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
9, 10ஆம் வகுப்புகளை தொடர்ந்து 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்திலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது. பெண் உரிமை சார்ந்த திட்டங்கள் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள பாடப்பகுதியில், அவர் கொண்டுவந்த பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டம் குறித்து இடம்பெற்றுள்ளது. கை ரிக்க்ஷா ஒழிப்புத் திட்டம், மதிய உணவுத் திட்டம், சுயமரியாதை திருமணம் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன.
Fixed Deposit (FD) என்று சொல்லப்படும் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 0.75% வரை உயர்த்தி அறிவித்திருக்கிறது SBI வங்கி. இன்று (மே 15) முதல் இந்த உயர்வு அமலுக்கு வந்துள்ளது. 46 முதல் 179 நாள்கள் வரையிலான FDக்களுக்கு ஆண்டு வட்டி 0.75% உயர்த்தப்பட்டு, 5.5%ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கான FD வட்டி 0.25% உயர்த்தப்பட்டு, 6.25%ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சச்சின் டெண்டுல்கரின் விவிஐபி பாதுகாப்பு காவலர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். சச்சினின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாநில ரிசர்வ் போலீஸ் படை வீரர் பிரகாஷ் கப்டே, ஜாம்னர் நகரில் உள்ள அவரது சொந்த வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்ற அவர், தனிப்பட்ட பிரச்னையில் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அல்ஜீரியாவில் 26 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர், பக்கத்து வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். 1998ஆம் ஆண்டு உள்நாட்டு போர் நடைபெற்று வந்தபோது, ஒமர் என்ற 19 வயது இளைஞர் காணாமல் போனார். அவர் கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தார் கருதினர். ஆனால், அவரது வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள வீட்டில் முதியவரால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
2024 தேர்தல் 2 சித்தாந்தங்களுக்கு இடையேயான தேர்தல் என ராகுல் கூறியுள்ளார். ஒடிசாவில் பரப்புரை மேற்கொண்ட அவர், நாட்டில் முதல்முறையாக ஒரு அரசியல் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் அரசியல் அமைப்பை முடிவுக்கு கொண்டு வருவோம் என கூறுவதாக சாடினார். இந்த அரசியலமைப்பே ஏழைகள், பழங்குடியினர், சிறுபான்மையினருக்கான உரிமைகளை வழங்கியுள்ளதாகவும், உலகில் எந்த சக்தியாலும் இதைத் தொட முடியாது எனவும் அவர் எச்சரித்தார்.
தமிழ்நாட்டில் மே 19ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை (மே 16) 10 மாவட்டங்களிலும், மே 17, 18 தேதிகளில் 26 மாவட்டங்களிலும், மே 19ஆம் தேதி 28 மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாவட்டங்களைத் தவிர பெரும்பாலான மாவட்டங்கள் அடுத்த 5 நாள்களுக்கு கனமழையை பெற இருக்கின்றன. இதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ராகுல் டிராவிட்டின் பதவி காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைவதால், இந்திய அணிக்கு யார் புதிய தலைமை பயிற்சியாளராக வருவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அந்த வகையில், ஃப்ளெமிங், கம்பீர், ஆண்டி ஃப்ளவர், ஜஸ்டின் லாங்கர், ஷேவாக், ரிக்கி பாண்டிங் ஆகியோர் பிசிசிஐயின் விருப்பப் பட்டியலில் இருப்பதாகவும், இதுகுறித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முனைப்பு காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.