India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶ஜூலை 8 – ஆனி 24 ▶ கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶ எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶ குளிகை: 12:00 PM – 1:30 PM ▶ திதி: த்ரயோதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶ பிறை: வளர்பிறை.
நாம் வாழும் பூமி, மணிக்கு 1,600 கிமீ வேகத்தில் தன்னைத்தானே சுற்றிச் சுழல்கிறது. இந்நிலையில், வரும் ஜூலை 9, ஜூலை 22, ஆகஸ்ட் 5 ஆகிய 3 நாள்களிலும் சற்று அதிகமான வேகத்தில் பூமி சுற்றப் போவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஒரு நாளில் 1.51 மில்லி செகண்ட் குறையுமாம். பூமியின் வேகத்துக்கு காரணம் இதுவரை தெளிவாக தெரியவில்லை. எனினும், இதனால், எந்த பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி தொடங்கிய புதிய கட்சிக்கு எதிராக வழக்குத் தொடர உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன் தெரிவித்துள்ளார். தவெக கொடியில் யானை சின்னம் இருப்பதாக பகுஜன் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆம்ஸ்ட்ராங் மனைவி தொடங்கிய கட்சியின் கொடியிலும் யானை படம் இருப்பதாக த.வெ.க. சார்பில் வாதிடப்பட்டது. அதற்கு எதிராகவும் வழக்கு தொடரப்படும் என பகுஜன் பதில் அளித்தது.
இன்று (ஜூலை 8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (ஜூலை 8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
*அலைகள் ஓய்ந்த பிறகு தான், கடலில் குளிப்பதென்பது முடியாது. நீந்தத் தெரிந்த பிறகே, நீரில் இறங்குவது என்பதும் இயலாது. வாழ்க்கையும் அப்படித்தான்.
*ஆசைகளை அடியோடு ஒழிப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அதற்கு தேவையும் இல்லை. பதிலாக, நம் உள்ளத்தில் எழும் ஆசைகளை சீரமைத்து வளமான வாழ்க்கை வாழ்வதே அறிவுடைமை.
பெட்ரோல், கேஸ் விலை தொடங்கி மளிகைப் பொருள்கள், காய்கறிகள், பால், போன், போக்குவரத்து என அத்தியாவசியமான பொருள்கள், சேவைகளின் விலைகள் அதிவேகத்தில் உயர்கின்றன. ஏன், அரசாங்கம் விதிக்கும் வரிகளும் இருமடங்காகிவிட்டது. ஆனால், சாதாரண மக்களின் வருமானமோ ஏறவே இல்லை அல்லது குறைந்து வருகிறது. விலையேற்றத்துக்கு காரணம் சொல்லும் அரசு, மக்களின் வருமானம் உயராததற்கு காரணம் சொல்வதில்லை. மக்கள் என்ன செய்வார்கள்?
➤ மேஷம் – அன்பு ➤ ரிஷபம் – ஆக்கம் ➤ மிதுனம் – இன்பம் ➤ கடகம் – குழப்பம் ➤ சிம்மம் – அசதி ➤ கன்னி – பரிவு ➤ துலாம் – பாசம் ➤ விருச்சிகம் – நற்சொல் ➤ தனுசு – சாந்தம் ➤ மகரம் – சிந்தனை ➤ கும்பம் – விவேகம் ➤ மீனம் – சினம்.
ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க கேப்டன் வியான் முல்டர் 367 ரன்களை குவித்து பிரம்மிக்க வைத்தார். உண்மையில் அவரால் பிரையன் லாரா அடித்த 400 ரன்களை கடந்து உலக சாதனை படைத்திருக்க முடியும். ஆனால் அவர் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தார். மேலும் லாரா போன்ற லெஜண்டின் சாதனை, வரலாற்றில் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதால் டிக்ளேர் செய்ததாக முல்டர் தெரிவித்துள்ளார். யார் சாமி இவன்?
*கழிப்பறை சீட், குழாய், கைப்பிடி மீதுள்ள கிருமிகள் செல்போனில் ஒட்டிக்கொள்ளும் *இதனால் UTI, வயிற்றுப்போக்கு பாதிப்புகள் ஏற்படலாம் *போனில் தொற்றும் கிருமி, குழந்தைகளுக்கும் தொற்றலாம் *20-30 mins போன் பார்த்துக் கொண்டிருந்தால் மலம் கழித்தலில் பிரச்சனை ஏற்படும் *மலச்சிக்கல் ஏற்படும் *மூலம் ஏற்படும் ஆபத்து *உங்கள் நேரம் வீணாகும் *போன் தவறி டாய்லெட்டில் விழலாம் *மேலும், போனுக்கும் அடிமையாவீர்கள்.
Sorry, no posts matched your criteria.