News May 15, 2024

குறுகிய காலத்தில் லாபம் ஈட்ட எண்ணும் FII! – 2/2

image

அதாவது, நிகர குறுகிய நிலை ஒப்பந்தங்கள் (ஷார்ட் பொசிஷன் ) 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக 2,13,224-ஐ எட்டியுள்ளது. பங்கு மதிப்பு குறையும் என்ற எதிர்ப்பார்ப்பில், ஒரு தரகரிடம் இருந்து கடன் வாங்கிய பங்குகளை மற்றொரு நபருக்கு விற்று, பின் அதே அளவு பங்குகளை மீண்டும் வாங்கி தரகரிடம் ஒப்படைப்பதே ஷார்ட் பொசிஷனாகும். இதே தந்திரத்தின் மூலம் FIIகள் லாபம் ஈட்டலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

News May 15, 2024

சூர்யா படத்தில் இணைந்த சந்தோஷ் நாராயணன்

image

தற்போது ‘கங்குவா’ படத்தில் நடித்துவரும் சூர்யா, அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் #சூர்யா44 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று சந்தோஷ் நாராயணன் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இந்த தகவலை உறுதிப் படுத்தியுள்ளது. சூர்யா – சந்தோஷ் நாராயணன் இணைவது இதுவே முதல்முறை.

News May 15, 2024

ராகுல் பிரதமரா? மழுப்பலாக பதிலளித்த அகிலேஷ்

image

INDIA கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராகுல் காந்தி பிரதமராவாரா? என்ற கேள்விக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மழுப்பலாக பதிலளித்துள்ளார். சரியான நேரத்தில் எங்கள் பிரதமர் வேட்பாளர் யாரென்பதைச் சொல்வோம் எனக் கூறிய அவர், முன்கூட்டி எதையும் சொல்ல முடியாது என மழுப்பலாகக் கூறினார். மேலும், பாஜகவுக்கு 140 இடங்கள் கூட கிடைக்காது; மத்தியில் INDIA கூட்டணி ஆட்சி அமைவது உறுதி எனவும் அவர் தெரிவித்தார்.

News May 15, 2024

‘ஓ’ கொஞ்சம் ஸ்பெஷலானது!

image

சமத்துவத்தை வெளிப்படுத்த ‘எல்லோரது உடம்பிலும் ஓடுவது ஒரே ரத்தம்தான்’ என்று சொல்வார்கள். ஆனால், அது உண்மையல்ல. மனிதனின் (A, B, AB, O) ரத்தப் பிரிவுகளில் ‘ஓ’ மிகவும் ஸ்பெஷலானது. இப்பிரிவு ரத்தம் சிறிதும் ஆபத்தில்லாதது. எனவே மிக அவசரமான சூழலில், ரத்தம் தேவைப்படும் யார் உடலிலும் இந்த ரத்தத்தை உட்செலுத்த முடியும். உலக மக்களில் பாதிப்பேர் ‘ஓ’ ரத்தத்தைக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

News May 15, 2024

70 கோடி இளைஞர்களுக்கு வேலை இல்லை

image

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது போன்ற பொய்யான வாக்குறுதிகள் பாஜகவின் வரலாறாக உள்ளது என பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாட்டில் 70 கோடி இளைஞர்கள் வேலை இல்லாமல் இருப்பதே இதற்கு உதாரணம் எனக் கூறிய அவர், கருப்பு பணத்தை மீட்டு மக்களுக்கு 15 லட்சம் கொடுப்பதாகக் கூறிய மோடி கடைசியில் கையை விரித்துவிட்டார் என விமர்சித்துள்ளார்.

News May 15, 2024

இதுபோன்ற ஆராய்ச்சிகளில் இந்தியா ஈடுபட வேண்டும்!

image

லித்தியம் பேட்டரிகளுக்கு மாற்றாக இரு மடங்கு அதிக ஆற்றலைக் கொண்ட நீர் பேட்டரியை
சீன விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனைப் படைத்துள்ளனர். வாட்டர் பேட்டரிகள், அன்ஹைட்ரஸ் லித்தியம் பேட்டரிகளை விட பாதுகாப்பானவை என்றும் இவற்றை மின்சார வாகனங்களில் பயன்படுத்தலாம் என்றும் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இதுபோன்ற ஆராய்ச்சிகள் நடக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

News May 15, 2024

அனைத்துத் துறைகளும் தயாராக இருக்க உத்தரவு

image

கனமழை எச்சரிக்கையால், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கோவை, நீலகிரி உள்பட 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மே 19 வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சேதம் ஏற்படுவதை தவிர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கவும், அத்தியாவசிய நடவடிக்கைகளை உடனே துரிதப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

News May 15, 2024

பாண்டியாவுக்கு ஆதரவாக பேசிய கம்பீர்

image

பிளே ஆஃப் வாய்ப்பை மும்பை அணி இழந்ததற்கு ஹர்திக்கின் கேப்டன்சிதான் காரணம் என்று முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபிடி வில்லியர்ஸ் விமர்சித்திருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த கௌதம் கம்பீர், “வில்லியர்ஸ் கேப்டனாக இருக்கும்போது சாதித்தது என்ன? அவரது கேப்டன்சி வரலாற்றை எடுத்து பாருங்கள், மற்றவர்களின் கேப்டன்சியைவிட மிகவும் மோசமானதாக இருக்கும்” எனக் காட்டமாக கூறினார்.

News May 15, 2024

விக்ரம் உடன் புதிய படத்தில் இணையும் சுதா கொங்காரா?

image

சுதா கொங்காரா, சூர்யா கூட்டணியில் ‘புறநானூறு’ என்ற படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. சூரரைப்போற்று படத்திற்கு பிறகு மீண்டும் இக்கூட்டணி இணைவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. எனினும், இப்படம் தொடங்க தாமதமாகும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, நடிகர் விக்ரமை வைத்து புதிய படத்தை இயக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

News May 15, 2024

CAA சட்டத்தின் கீழ் 14 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது

image

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் 14 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கியுள்ளது உள்துறை அமைச்சகம். குடியுரிமை வேண்டி விண்ணப்பித்து, இந்தியாவில் அகதிகளாக வசித்துக் கொண்டிருக்கும் 14 பேருக்கு உள்துறை செயலர் அஜய் குமார் பல்லா குடியுரிமைக்கான சான்றிதழை வழங்கினார். CAA சட்டத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், தற்போது முதன்முறையாக CAA சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!