News May 15, 2024

12 ராசிகளுக்கான பலன்கள்

image

*மேஷம் – சுபம் உண்டாகும்
*ரிஷபம் – நட்பு வட்டம் பெருகும்
*மிதுனம் – இன்பம் கிடைக்கும்
*கடகம் – ஆதாயம் ஏற்படும்
*சிம்மம் – செயலில் தாமதம்
*கன்னி – விருப்பம் நிறைவேறும்
*துலாம் – தடை உண்டாகும்
*விருச்சிகம் – வெற்றி கிடைக்கும்
*தனுசு – அலைச்சல் ஏற்படும்
*மகரம் – வெற்றிகரமான நாள் *கும்பம் – நன்மை நிகழும் *மீனம் – பக்தி அதிகரிக்கும்

News May 15, 2024

RCB பட்டத்தை வெல்ல இதை செய்ய வேண்டும்!

image

‘ஈ சாலா கோப்பை நம்தே’ என்ற முழக்கம் உண்மையாக வேண்டுமானால், RCB நிர்வாகம் அந்த அணியில் உள்ள இந்திய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “ஒவ்வொரு சீசனிலும் வெளிநாட்டு வீரர்களுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும் RCB அணி எதிர்காலத்திலாவது இந்திய வீரர்களுக்கு செலவு செய்ய வேண்டும். அப்போதுதான் பட்டம் வெல்ல முடியும்” என்றார்.

News May 15, 2024

ரசிகர்களை சந்திக்கும் ரஜினி?

image

நடிகர் ரஜினிகாந்த், விரைவில் தனது ரசிகர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய படம் ரிலீசாவதற்கு முன்பாக ரசிகர்களை சந்திப்பதை ரஜினி வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில், வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததால், ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து அவர்களிடம் நேரில் கலந்துரையாட ரஜினி திட்டமிட்டுள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

News May 15, 2024

ஊழல் குற்றச்சாட்டில் பாதுகாப்பு துறை இயக்குநர் கைது

image

ரஷ்ய பாதுகாப்பு துறையில் இயக்குநரக தலைவராக பணியாற்றிவரும் லெப். ஜெனரல் யூரி குஸ்னெட்சோவ். கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த பதவி வகித்து வரும் இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அதன் பேரில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இதற்கிடையே அவரது வீடு & தொடர்புடைய பல்வேறு இடங்களிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் ₹8 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.

News May 15, 2024

நான்காவது இடத்தில் கலக்கும் ரியான் பராக்

image

ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் ரியான் பராக் 4ஆவது இடத்தில் களமிறங்கி அதிரடியாக ஆடி வருகிறார். ஐபிஎல்லில் 4ஆவது வீரராக களமிறங்கி 500 ரன்களுக்கும் மேல் குவித்த வீரர்களின் பட்டியலில் ரிஷப் பண்ட்(579), ரோஹித் ஷர்மாவுக்கு (538) அடுத்தபடியாக 531 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். அதுமட்டுமின்றி நடப்பு தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் கோலி, ருத்ராஜுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.

News May 15, 2024

25 மாவட்டங்களில் மழை பெய்யும்

image

தமிழகத்தில் 25 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, வேலூர், சேலம், நாமக்கல் உள்பட 21 மாவட்டங்களில் மிதமான மழையும். செங்கல்பட்டு, காஞ்சி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இரவு 1 மணி வரை இடியுடன் லேசான மழையும் பெய்யக் கூடும். இதனால் சாலை தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

News May 15, 2024

ஆசியாவிலேயே மிகப்பெரிய மியூசிக் ஸ்டூடியோ

image

ஆசியாவிலேயே மிகப்பெரிய மியூசிக் ஸ்டூடியோ ஒன்றை துபாயில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அமைந்துள்ளார். உலகின் விலையுயர்ந்த இசைக் கருவிகள், ரெக்கார்டர்கள், மிக்ஸர்கள், தேவைக்கேற்றவாறு அறையின் அளவினை அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் வகையில் அதிநவீனமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்டூடியோவுக்கு ‘ஃபிர்தவுஸ் ஸ்டூடியோ’ என அவர் பெயரிட்டுள்ளார். ஃபிர்தவுஸ் என்ற பெர்சியா சொல்லுக்கு சொர்க்கம் என்று பொருளாம்.

News May 15, 2024

ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: ஓம் பிர்லா

image

முதல்வர் நவீன் பட்நாயக்கின் தவறான ஆட்சியால் சோர்ந்துவிட்ட மக்கள், ஒடிஸாவில் மாற்றத்தை ஏற்படுத்த தயாராகிவிட்டதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். புவனேஷ்வரில் பேசிய அவர், “கடந்த 25 ஆண்டுகளாக தங்கள் நலனுக்காக செயல்படாத அரசை மக்கள் இம்முறை தூக்கியெறிய முடிவெடுத்துள்ளனர். ஒரே நேரத்தில் நடக்கும் மக்களவை & சட்டப்பேரவை தேர்தலில் பிஜேடி கட்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவர்” என்றார்.

News May 15, 2024

ராஜஸ்தான் அணி மோசமான சாதனை

image

கவுகாத்தியில் நடைபெற்றுவரும் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இப்போட்டியில் முதல் 10 ஓவர்கள் முடிவில் RR 4 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்கள் எடுத்தது. இதுவே நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் 10 ஓவர்களுக்கு எடுக்கப்பட்ட குறைவான ரன்களாகும். முன்னதாக SRH அணி, LSG அணிக்கெதிரான போட்டியில் 57 ரன்கள் எடுத்ததே குறைவான ரன்களாக இருந்தது.

News May 15, 2024

₹830 கோடி செலவில் ராமாயணம் முதல் பாகம்

image

ரன்பீர் கபூர் & சாய்பல்லவி நடிப்பில் உருவாகிவரும் ராமாயணம் படத்தின் முதல் பாகத்துக்கு ₹830 கோடி செலவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், இந்தி உள்ளிட்ட 6 மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தின் தொழில் நுட்ப பணிகளுக்காக மட்டும் ஒரு ஆண்டை படக்குழு ஒதுக்க இருப்பதாக கூறப்படுகிறது. உலகளவில் ரசிகர்களை கவரும் நோக்கில் உயர்ந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுக்கின்றனர்.

error: Content is protected !!