India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுடன் புறநகரில் உள்ள 50 ஊராட்சிகளை இணைக்க முடிவு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 200 வார்டுகள், 15 மண்டலங்களாக சென்னை மாநகராட்சி தற்போது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்போரூர், மாதவரம், பொன்னேரி தொகுதிகளில் சில ஊராட்சிகளை சென்னையுடன் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வார்டுகளின் எண்ணிக்கை 250 ஆக உயருகிறது.
பல்வேறு கட்சியிலிருந்து வந்த 106 பேருக்கு, தேர்தலில் போட்டியிட பாஜக சீட் வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 435 இடங்களில் பாஜக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இந்தியாவில் அதிக தொகுதிகளில் போட்டியிடும் கட்சி என்ற சிறப்பை தற்போது அக்கட்சி பெற்றுள்ளது. அதிகபட்சமாக உ.பியில் 74 வேட்பாளர்களை பாஜக நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் 326 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
மே – 16 | வைகாசி- 3
▶கிழமை: வியாழன்
▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM
▶கெளரி நேரம்: 12:30 AM – 01:30 PM, 06:30 PM – 07:30 PM
▶ராகு காலம்: 01:30 PM – 03:00 PM
▶எமகண்டம்: 06:00 AM – 07:30 AM
▶குளிகை: 09:00 AM – 10:30 AM
▶சூலம்: தெற்கு
▶பரிகாரம்: தைலம்
▶ திதி : நவமி
பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழில் என் சகியே, முத்திரை உள்ளிட்ட படங்களில் நடனமாடியுள்ள அவர், கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு இதய பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் இருப்பது போன்று வெளியான புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் அட்சய திருதியை நாளில் விற்பனையான தங்கத்தின் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு ₹500 கோடி வருவாய் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அட்சய திருதி நாளில் மட்டும் ₹16,750 கோடிக்கு தங்கம் விற்பனை ஆகியுள்ளது. 25 ஆயிரம் கிலோ தங்கத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றுள்ளனர். நகை விலை உச்சத்தை தொட்ட நிலையிலும், கடந்த ஆண்டை விட தற்போது விற்பனை அதிகரித்துள்ளது.
மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பாஜக அத்துமீறலில் ஈடுபடும் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். பாஜகவின் தோல்வி உறுதியான காரணத்தால் அக்கட்சி அச்சமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், இதனால் பாஜகவினர் எந்த எல்லைக்கும் செல்லுவார்கள் எனக் கூறினார். பாஜகவை அதிகாரத்தில் இருந்து தூக்கியெறிய அடுத்த 15 நாட்கள் INDIA கூட்டணியினர் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பஞ்சாப்புக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தின் மூலம், ராஜஸ்தான் அணி தொடர்ச்சியாக 4 தோல்வியை கண்டுள்ளது. ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில், சிம்ம சொப்பனமாக இருந்த அந்த அணி, கடந்த சில போட்டிகளாக திணறி வருகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு அந்த அணி ஏற்கெனவே, தகுதி பெற்றிருந்தாலும், தற்போதைய தொடர் தோல்வியால், அந்த அணியின் ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர். கடைசி 15 நாட்களில் மட்டும் அந்த அணி 4 தோல்விகளை சந்தித்துள்ளது.
➤ அறிவு எப்பொழுதும் அறியாமையை ஆளும்
➤ஆசிரியர்கள் கதவைத் திறக்கிறார்கள், ஆனால்
நீங்கள் தான் உள்ளே செல்ல வேண்டும்
➤ நீங்கள் நாளையே இறந்துவிடுவீர்கள் என்பது போல வாழுங்கள். நீங்கள் என்றென்றும் வாழ்வீர்கள் என்பது போல கற்றுக்கொள்ளுங்கள்
➤ தோல்வியில் இருந்தே கற்றல் தொடங்குகிறது, முதல் தோல்வியே கல்வியின் ஆரம்பம்
➤ கற்றறிந்தவர்களாக இருப்பது மட்டுமல்ல, நல்லொழுக்கத்துடன் இருப்பதும் மிகவும் முக்கியமானது
●இந்துப்பு கலந்த இளஞ்சூடான நீரில் வாய்க் கொப்பளித்து வர வாய் துர்நாற்றம் நீங்கிப் பல்வலி, ஈறுவீக்கம் போன்றவை குணமாகும்.
●ரத்த அழுத்தத்தை சீராக்கும் தன்மை இதற்கு உண்டு.
●உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கவும், ரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
●தைராய்டு பிரச்சனையை தீர்க்க உதவுகிறது.
●இதய பாதுகாப்பிற்கு பேருதவி புரிகிறது.
காங்கிரஸ் கட்சி தொகுதிகளை அடுத்தவர்களுக்கு பிரித்து கொடுக்கும் நிலைக்கு வர வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 1967க்கு பிறகு 57 ஆண்டுகாலமாக காங்கிரஸ் வளராமல் அதே இடத்தில் உள்ளதாக கூறிய அவர், இந்த நிலை மாறி விரைவில் காங்கிரஸ் ஆட்சி என்ற நிலைக்கு கட்சியை வளர்க்க வேண்டும் என்றார். பதவியை அனுபவித்த பலர் கட்சிக்காக உழைக்காமல் ஓய்வெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.