News May 16, 2024

பால் மழை கேள்விப்பட்டு இருக்கீங்களா?

image

2015ஆம் ஆண்டு அமெரிக்காவின் ‘ஆரிகன்’ நகரில் வெள்ளை நிறத்தில் பால் மழை பெய்தது. அதனை ஆய்வு செய்த அறிஞர்கள், மழைத் துளிகளில் அதிகளவிலான சோடியம் இருப்பதை கண்டுபிடித்தனர். மழை பெய்த பகுதியில் இருந்து சுமார் 800 கி.மீ., தொலைவில் வறண்ட ஏரி இருப்பதை சுட்டிக் காட்டிய ஆய்வாளர்கள், அப்பகுதியில் புயல் வீசியபோது சோடியம் தூசுக்கள் மேகத்தில் கலந்திருக்கலாம் என்று கண்டறிந்தனர்.

News May 16, 2024

சென்னையில் நாய் கடித்ததில் 6 வயது சிறுவன் படுகாயம்

image

சென்னையில் தினசரி நாய் கடி சம்பவம் அரங்கேறி வருகிறது. இன்று காலை நடைபயிற்சிக்காக அழைத்து வந்த வளர்ப்பு நாய், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் ஹரிஷ்குமாரின் மார்பு, கை, கால்களில் கடித்து குதறியுள்ளது. உடனே அங்கிருந்தவர்கள் சிறுவனை மீண்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுதொடர்பான புகாரில், வளர்ப்பு நாயின் உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News May 16, 2024

ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்தது

image

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ₹54 ஆயிரத்தை கடந்ததால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 உயர்ந்து ₹54,360க்கும், கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹6,795க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ₹1.50 அதிகரித்து ₹92.50க்கும், கிலோ வெள்ளி ₹1,500 அதிகரித்து ₹92,500க்கும் விற்பனையாகிறது.

News May 16, 2024

தட்டித் தூக்கும் தங்கம்

image

கடந்த 5 ஆண்டுகளில், ஆண்டுக்கு 18% லாபத்துடன் தங்கம் சிறப்பான முதலீடு என்ற பெயரை பெற்றிருக்கிறது. பங்குச்சந்தைகளில் நிஃப்டி இண்டெக்ஸ் 15% லாபத்தை மட்டுமே கொடுத்த நிலையில் தங்கம் அதனை முந்தியிருக்கிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் தங்கம் 10% வளர்ச்சியடைந்த நிலையில் நிஃப்டி 14% வளர்ந்திருக்கிறது. நீங்கள் எந்த வகை முதலீட்டை தேர்வு செய்வீர்கள்?

News May 16, 2024

சென்னையில் இரட்டை வானவில்

image

சென்னையில் இன்று காலை முதல் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, சென்னையின் பல பகுதிகளில் இரட்டை வானவில் தென்பட்டது. சூரிய ஒளிக் கதிர்கள் மழைத் துளிகளில் பட்டு சிதறும்போது வானவில் தென்படுகிறது. பொதுவாக 7 அல்லது அதற்கும் குறைவான வண்ணங்களில் வான குடையை அமைக்கும் வானவில், இன்று இரட்டையாக தெரிந்தால் மக்கள் அதனை ஆச்சரியத்துடன் கண்டுகளித்தனர்.

News May 16, 2024

பாஜகவின் சாதனைகளை பட்டியலிட்ட நிதியமைச்சர்

image

பாஜக ஆட்சியின் 10 ஆண்டுகால சாதனைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்டியலிட்டுள்ளார். கிராமங்களில் 3.74 லட்சம் கி.மீ. தூரத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், நெடுஞ்சாலைகள் அமைக்கும் வேகம் நாளுக்கு 34 கி.மீ. ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மின் உற்பத்தி 193 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளதாகவும், மெட்ரோ ரயில் சேவையை 20 நகரங்களுக்கு விரிவுப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News May 16, 2024

இந்த மாவட்டங்களில் இனி அடிக்கடி விடுமுறை?

image

கோடை மழை பெய்து வரும் நிலையில், தென்மேற்கு பருவமழை மே 31ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 10க்கு பிறகு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பருவமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக தேனி, திண்டுக்கல், குமரி, நெல்லை, நீலகிரி, கோவையில் கனமழை வெளுக்கும் என்பதால், பள்ளி திறப்புக்கு பின்பு இம்மாவட்டங்களுக்கு அடிக்கடி விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது.

News May 16, 2024

CAAவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்?

image

CAA சட்டத்தை பயன்படுத்தி முதல் முறையாக 300 பேருக்கு குடியுரிமை வழங்கியிருக்கிறது மத்திய அரசு. அச்சட்டத்தின் கீழ், இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என்பதால் பாரபட்சமான சட்டம் என்று எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றனர். இச்சட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இச்சட்டத்தின்கீழ், இலங்கை தமிழர்களும் குடியுரிமை பெற முடியாது. CAA குறித்து உங்களது கருத்தை சொல்லுங்க.

News May 16, 2024

இலங்கையிலும் இனி Phonepe பயன்படுத்தலாம்

image

இந்தியாவின் Fintech நிறுவனமான Phonepe UPI, இலங்கையில் தனது கிளையை தொடங்கியுள்ளது. Phonepe நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளதால், பயனர்கள் இனி QR code பயன்படுத்தி UPI பரிவர்த்தனை செய்ய முடியும். இது சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் தொடக்க நிகழ்ச்சியில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

News May 16, 2024

3 உயிர்களைக் காப்பாற்றிய மகான்

image

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த கருணாகரன் (30) மே 11ஆம் தேதி விபத்தில் சிக்கினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். பின்னர், அவருடைய குடும்பத்தினரின் ஒப்புதலின்பேரில் அவருடைய இரண்டு சிறுநீரகங்களும் இருவேறு நபர்களுக்கு, கல்லீரல் ஒருவருக்கு என தானம் செய்யப்பட்டது. அனைவரும் நலமாக இருக்கின்றனர்.

error: Content is protected !!