India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வைகை அணையில் இருந்து விநாடிக்கு 1500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, மதுரையில் பாசன கண்மாய்களில் தண்ணீரை பெருக்குவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணிர் திறக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று முதல் 4 நாள்களுக்கு, விநாடிக்கு 1500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
ரேபரேலியில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை ஆதரித்து சகோதரி பிரியங்கா ஆதரவு திரட்டினார். அப்போது பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் ஒருமுறை கூட பொதுமக்களை மோடி நேரில் சந்திக்கவில்லை. ஆனால், தனது பாட்டி இந்திரா காந்தி நடைபயணமாக வந்து மக்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார் என்று கூறினார். இந்து-முஸ்லிம்களை வைத்து மோடி அரசியல் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
டெல்லியில் இருந்து குஜராத்தின் வதோதராவிற்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமான ஊழியர் ஒருவர் கழிவறைக்குச் சென்ற போது, அங்கிருந்த டிஷ்யூ பேப்பரில் ‘Bomb’ என எழுதி இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அதிகாரிகளிடம் தெரிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக பயணிகள் வேறொரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
‘கேஜிஎஃப்’ படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாறிய நடிகர் யாஷ் தற்போது ‘டாக்ஸிக்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கீது மோகன்தாஸ் இயக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. KVN புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படம், போதைப் பொருள் கடத்தும் கும்பலை மையப்படுத்திய ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கிய போட்டிகளை நேரலையாக திரையிட PVR Inox நிறுவனம் ஆலோசித்து வருகிறது. நடப்பு ஆண்டில் பெரிய அளவிலான பாக்ஸ் ஆஃபிஸ் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், அந்நிறுவனத்தின் வருவாய் கணிசமாக சரிந்துள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில், டி20 உலகக்கோப்பை போட்டிகளை திரையிட்டால் கிரிக்கெட் பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்கலாம் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.
தமிழகத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்டை வானிலை மையம் விடுத்துள்ளது. கடந்த டிசம்பரில் திடீரென்று பெய்த கனமழையால் நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதுபோன்ற நிகழ்வு மீண்டும் நடந்தால் தமிழகம் தாங்காது. எனவே, அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களில் உணவு, தங்கும் வசதி ஏற்படுத்தவும், பேரிடர் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமர் ராபர்ட் பிகோ (59) மீது நேற்று மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் காயமடைந்த அவர் சிகிச்சைபெற்று வருகிறார். இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இது ஒரு கோழைத்தனமான தாக்குதல் என விமர்சித்துள்ளார். மேலும், பிகோ விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்த அவர், அந்நாட்டு மக்களுடன் இந்தியா துணை நிற்கும் என்றார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு MP சையது முஸ்தஃபா கமல், இந்தியாவை ஒப்பிட்டு பேசிய விவகாரம் வைரலாகி வருகிறது. “இந்தியா நிலவில் தரையிறங்கிவிட்டது. ஆனால் நமது குழந்தைகள் திறந்த கால்வாயில் விழுந்து இறக்கிறார்கள்” என்று அவர் ஆக்ரோஷமாக பேசினார். இந்தியாவை ஒப்பிடுகையில் பாகிஸ்தான் போதுமான வளர்ச்சியை பெறவில்லை என்று அவர் பேசியதை ஆளுங்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
2020 முதல் தோனியின் ஓய்வு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்படுகிறது. 2020 – “கண்டிப்பாக இல்லை”, 2021 – “என்னால் விட்டுவிட்டு போக முடியாது”, 2022 – “கடைசிப் போட்டியை சென்னையில் விளையாடாமல் போனால் நன்றாக இருக்காது”, 2023 – “நான் எனது ரசிகர்களுக்கு பரிசாக இருப்பேன்” என்று கூறியிருக்கிறார். இந்த ஆண்டு என்ன சொல்வார் தோனி என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் பக்க விளைவுகளை ஏற்படுத்துவது பனாரஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த ஓராண்டில் 635 இளைஞர்கள் மற்றும் 291 முதியோர்களிடம் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், 304 இளம் வயதினர் (47.9%) மற்றும் 124 முதியோர்களுக்கு (42.6%) சுவாசப் பிரச்னை, 4.6% பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னை, 2.7% பேருக்கு கண் பிரச்னையும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.