India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
CSK-RCB இடையேயான ஐபிஎல் போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதன் பிறகு, CSK வீரர் மொயின் அலி டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக நாடு திரும்ப உள்ளார். ஒருவேளை, நாளைய போட்டியில் CSK அணி வெற்றி பெற்று ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டால், அவர் இல்லாதது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். ஏற்கெனவே, பதிரனா, தீபக் சாஹர், முஸ்தஃபிசூர் ஆகியோர் அணியில் இல்லை.
4 கட்ட தேர்தலில் இதுவரை 45 கோடி பேர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில், 23 மாநிலங்களை உள்ளடக்கிய 379 தொகுதிகளில் இதுவரை தேர்தல் நடைபெற்றுள்ளதாகவும், அதில் 66.95% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. விரைவில் மேலும் 3 கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்கு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
ஐபிஎல் தொடரில் மும்பை – லக்னோ அணிகள் இன்று மோதுகின்றன. மும்பை இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 9 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. லக்னோ அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 7 தோல்வி, ஒரு முடிவில்லை என 12 புள்ளிகள் பெற்றுள்ளது. கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் ஏற்கெனவே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடப்பு கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இடைநிலை, பட்டதாரி, தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முறைமை இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம். இதுவரை தொடக்கக் கல்வி மற்றும் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் சுமார் 13,000 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன.
கோவிஷீல்டு தடுப்பூசியை தொடர்ந்து கோவேக்சினும் பக்க விளைவுகளை ஏற்படுத்தி வருவது ஆய்வில் தெரியவந்தது. 926 பேரை ஆய்வு செய்ததில் பாதியளவு பேருக்கு சுவாசக்கோளாறு உள்ளிட்ட தொற்றுகளும், 1% பேருக்கு பக்கவாதம் போன்ற தீவிர பாதிப்புகள், 10.5% இளம்பருவத்தினரிடம் தோல் சார்ந்த பிரச்னை, 4.7% பேருக்கு நரம்பு மண்டலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. பெண்களிடம் சீரற்ற மாதவிலக்கு உள்ளிட்ட பிரச்சினை பொதுவாக காணப்படுகின்றன.
➤ செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
➤ மம்தாவை காங்கிரஸ் கட்சி நம்பாது – ஆதிர் ரஞ்சன் செளத்ரி
➤ மக்களை ஒருபோதும் பிரித்து பார்க்க மாட்டோம் – மோடி
➤ காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் தண்டனை அளிப்பார்கள் – அமித் ஷா
➤ தோனி தொடர்ந்து சென்னை அணிக்கு விளையாடுவார் – மைக் ஹஸ்ஸி
➤ 35 நாள்களில் சிம்ஃபொனி எழுதிய இசைஞானி
24 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் நவீன் பட்நாயக்கிற்கு மக்கள் ஓய்வு தர உள்ளதாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்த உடனே ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் ஆட்சியை இழக்கப்போவது கண் கூடாத தெரிவதாக கூறிய அவர், தேர்தல் முடிவு வந்த 3 நாள்களில் பாஜக தன்னுடைய முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்றார். ஒடிசாவில் 28 சட்டமன்ற தொகுதிகளுக்கு இதுவரை தேர்தல் நடைபெற்றுள்ளது.
கடினமான காலக்கட்டத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்ததாக ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளராக 7 ஆண்டு நிறைவாக பணியாற்றியதாக கூறிய அவர், மீண்டும் ஐபிஎல் அணிக்கோ அல்லது இந்திய அணிக்கோ பயிற்சியாளராக வருவதற்கு விரும்பவில்லை என்றார். இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் விரைவில் விலக உள்ள நிலையில், புதிய பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆந்திராவில் 151 எம்எல்ஏ, 22 எம்பி இடங்களில் YSRCP வெற்றி பெறும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஜூன் 4ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள், இந்தியாவுக்கே ஆச்சரியமளிக்கும் வகையில் இருக்கும் என்ற அவர், கடவுள் அருளால் கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியை மீண்டும் பெறுவோம் என்றார். ஆந்திராவில் 25 மக்களவை மற்றும் 175 சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் நிறைவடைந்துள்ளது.
பிரதமர் மோடி அனைத்து மக்களுக்குமான பிரதமராக இருக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ஜாதி, மதம், இனம் பாகுபாடின்றி பொதுவானவராக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், தமிழக முதல்வர் ஸ்டாலினை போல் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார். மேலும், ஜூன் 6ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், அதுவரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறாது எனக் கூறினார்.
Sorry, no posts matched your criteria.