India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குஜராத் மாநிலம் மோர்பியை சேர்ந்த ஹீர் கெதியா (16) என்ற சிறுமி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.70% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்திருந்தார். எனினும், இந்த மகிழ்ச்சி சிறுமியின் பெற்றோருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. மருத்துவராக விரும்பிய அச்சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. அதற்கான அறுவை சிகிச்சை செய்தபோதும், அது பலனளிக்காமல் அவர் மரணமடைந்ததாக அவரது பெற்றோர் உருக்கமாக கூறினர்.
ரேபரேலியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசினார். அப்போது பேசிய சோனியா, தனது குடும்பத்துக்கும் ரேபரேலிக்கும் இடையேயான தொடர்பு மண்ணுக்கும் வேறுக்குமான தொடர்பு போன்றது என்றார். தனது மாமியார் இந்திரா காந்தி, ரேபரேலியை தன்னிடம் அளித்ததாகவும், அதை ராகுலிடம் தான் அளிப்பதாகவும் கூறிய சோனியா, எனது மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன், அவரை ஏற்றுக் கொள்ளுங்கள், அவர் ஏமாற்ற மாட்டார் என்றார்.
வெயில் பட இயக்குநர் வசந்த பாலன் இயக்கியுள்ள தலைமை செயலகம் வெப் சீரிஸ் ஜீ5 ஓடிடியில் வெளியாகியுள்ளது. இதில் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன் நடித்துள்ளனர். இதுகுறித்து பேட்டியளித்த ஸ்ரேயா ரெட்டி, ஜெயலலிதா வீடு அருகே 25 ஆண்டுகளாக தான் வசிப்பதாகவும், அவர்தான் தனது ரோல் மாடல், அவர் மாதிரி இருக்க வேண்டும் என்பது தனது ஆசை என்றும் தெரிவித்தார்.
பாஜகவின் முதல்வர்கள் முதலில் உங்கள் மாநிலத்தை கவனியுங்கள் என ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பல மாநில பாஜகவின் முதல்வர்கள், அமைச்சர்கள் இங்கு வந்து ஒடிஷாவை நம்பர் 1 மாநிலமாக மாற்றுவேன் எனக் கூறிவருகின்றனர். ஆனால், பாஜக ஆளும் அசாம் மாநிலத்தின் தனி நபர் கடன், ஒடிஷாவை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது என நவீன் பட்நாயக் சுட்டிக்காட்டினார்.
திருமணமாகி கணவர் இல்லத்திற்கு சென்ற பெண்கள், ஆதாரில் திருத்தம் செய்த பிறகு வழங்கப்படும் அட்டையில் கணவர் பெயருக்கு முன்பு W/O என்பதற்கு பதில் C/O என வருகிறது. அதாவது, பெண்ணின் பெயருக்குப் பின் தந்தை பெயரும், அதன்கீழ் C/O எனக் குறிப்பிட்டு கணவர் பெயரும் உள்ளது. தெரியாத இடங்களுக்கு ஆதாருடன் செல்கையில் இது பல கேள்விகளுக்கு வழிவகுப்பதாக இல்லத்தரசிகள் புலம்புகின்றனர். இதற்கு தீர்வு தருமா ஆதார் ஆணையம்?
டெல்லி மெட்ரோ ரயிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், லட்சுமி நகருக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது உடன் வந்த பயணிகள் இருக்கையில் அமர்ந்திருக்க, ரயிலில் அவர் நின்றபடியே பயணித்தார். நிர்மலா சீதாராமன் தங்களுடன் மெட்ரோ ரயிலில் பயணித்ததை கண்ட டெல்லிவாசிகள், அவரிடம் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். அந்த கோரிக்கைகளை அவரும் நிதானமாக கேட்டறிந்தார்.
ஃபோர்ப்ஸ்-24 வெளியிட்ட அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் கால்பந்து நட்சத்திர வீரர் ரொனால்டோ முதலிடம் பிடித்துள்ளார். அவர் ஆண்டுக்கு $260 மில்லியன் சம்பாதிக்கிறார். முதல் 10 இடங்களில் ஜான் ரஹ்ம் ($218M), மெஸ்ஸி ($135M), ஜேம்ஸ் ($128M), கியானிஸ் ($111M), எம்பாப்பே(110M), நெய்மர் ($108M), பென்செமா ($106M), ஸ்டீபன் கரி ($102M), லாமர் ஜாக்சன் ($100 M) ஆகியோர் உள்ளனர்.
ரஷ்யாவுக்கு வடகொரியா எந்த ஆயுதமும் வழங்கவில்லை என்று அந்நாட்டு அதிபர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார். பல கோடி மதிப்பிலான ஆயுதங்களை 7,000 கொள்கலன்களில் மாஸ்கோவுக்கு வடகொரியா அனுப்பியதாக அமெரிக்கா குற்றம்சாட்டி இருந்தது. இதனை மறுத்த கிம் யோ ஜாங், “வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். பியொங்யாங்கில் இருந்து எந்தவொரு ஆயுதமும் ஏற்றுமதி செய்யப்படவில்லை” எனக் கூறியுள்ளார்.
நாட்டிலேயே முதல் முறையாக 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1,761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில், தமிழில் 100% மதிப்பெண் பெற்ற 43 மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் விரைவில் இந்த விழா நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான், நயன்தாரா நடிப்பில் வெளியான ‘ஜவான்’ படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், தற்போது ஷாருக் தயாரிக்கும் ‘கிங்’ படத்திற்கு தீம் மியூசிக் கம்போஸிங்கிற்காக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் மூலம் ஷாருக்கின் மகள் சுஹானா கான் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
Sorry, no posts matched your criteria.