News May 17, 2024

IPL: மழையால் ஆட்டம் பாதிப்பு

image

லக்னோ – மும்பை இடையேயான ஐபிஎல் போட்டியில் 3.5 ஓவர்கள் முடிவில் மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த LSG அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. MI அணி 3.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 33 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 20*, ப்ரிவிஸ் 9* ரன்களுடன் களத்தில் உள்ளனர். மழை குறைந்தபின் போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News May 17, 2024

24% மக்களுக்கு உயர் ரத்த அழுத்தம்

image

சமுதாயத்தில் 24% மக்களுக்கு உயர் ரத்த அழுத்தம், 10% மக்களுக்கு ரத்த அழுத்தம் இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார். அதிக உப்பு சேர்த்த உணவுகளை சாப்பிட்டால் ரத்த அழுத்த நோய் உருவாகும் என்றும், அதனைத் தவிர்க்க பருப்பு, பழங்கள், காய்கறிகளை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், தினமும் 8 மணி நேர தூக்கம், 8 கி.மீ., நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.

News May 17, 2024

கோவை – மங்களூருக்கு 7 நாள்களுக்கு சிறப்பு ரயில்

image

கூட்ட நெரிசலை தவிர்க்க கோவையிலிருந்து மங்களூரு சென்ட்ரலுக்கு 7 வாராந்திர சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையிலிருந்து நாளை, 25ஆம் தேதி, அடுத்த மாதம் 1,8,15,22,29 தேதிகளில் இரவு 10.15 மணிக்கு ரயில் புறப்பட்டு, மறுநாள் காலை மங்களூருக்கு 6.55 மணிக்கு செல்லும். இதேபோல், மறுமார்க்கத்தில் நாளையும், வருகிற 25 மற்றும் அடுத்த மாதம் 1,8,15,22, 29 தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

News May 17, 2024

யோகி பாபு படத்தின் புதிய பெயர் இதுதான்

image

யோகி பாபு நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு “ஜோரா கையை தட்டுங்க” எனப் பெயரிடப்பட்டுள்ளது. லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர், திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த யோகி பாபு, தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். வினீஸ் மில்லினியம் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கான டைட்டில் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

News May 17, 2024

இந்திய அணிக்கு கெளதம் கம்பீர் பயிற்சியாளராகிறாரா?

image

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிளமிங், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பெயர்கள் முதலில் அடிபட்ட நிலையில், தற்போது கெளதம் கம்பீர் பெயர் அப்பதவிக்கு முதலிடத்தில் இருப்பதும், அவருடன் ஐபிஎல்லுக்கு பிறகு பேச்சு நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News May 17, 2024

வேலைவாய்ப்புகளை பறிக்கும் திமுக அரசு: ஓபிஎஸ்

image

மூன்றரை லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பாமல், இளைஞர்களின் வேலைவாய்ப்பினை பறிக்கும் செயலில் திமுக அரசு ஈடுபடுவதாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் விமர்சித்துள்ளார். படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கும் நிலையில், அனைத்துத் துறைகளிலும் கடைநிலை ஊழியர் முதல் உயர் பதவி வரையிலான பணியிடங்களை ஒப்பந்தம் & வெளிமுகமை மூலம், திமுக அரசு பணியமர்த்துவதாக ஓபிஎஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

News May 17, 2024

மும்பை அணிக்கு இமாலய இலக்கு

image

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 214 ரன்கள் குவித்துள்ளது. மும்பை அணியின் பந்துவீச்சை சிதறடித்த பூரண் 77, KL. ராகுல் 55 ரன்கள் அடித்தனர். கடைசியில் க்ருனால் பாண்டியா 12, பதோனி 22 ரன்கள் எடுக்கவே LSG 20 ஓவர்கள் முடிவில் 214/6 ரன்கள் எடுத்தது. MI சார்பில் நுவான் துஷாரா 3, பியூஷ் சாவ்லா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, MIக்கு 215 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News May 17, 2024

ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய மும்பை அணி

image

வான்கடே மைதானத்தில் நடைபெற்றுவரும் லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளது. நுவான் துஷாரா வீசிய 17ஆவது ஒவரில், கடைசி 2 பந்தில் பூரண், அர்ஷத் கான் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து, பியூஷ் சாவ்லா வீசிய 18ஆவது ஓவரின் முதல் பந்தில், கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தார். இதன்மூலம், தொடர்ந்து 3 பந்துகளில் LSG அணி முக்கியமான 3 விக்கெட்டுகளை இழந்தது.

News May 17, 2024

விஜய் சேதுபதியின் புதிய படத்தின் பெயர் “ஏஸ்”

image

ஜவான் திரைப்படத்துக்கு பிறகு விஜய் சேதுபதி, கத்ரினா கைஃபுடன் இணைந்து மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்தார். இதையடுத்து விடுதலை 2, மஹாராஜா படங்களில் நடித்து வருகிறார். இதேபோல், ஏற்கெனவே அவரது நடிப்பில் 51ஆவது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருந்தது. அந்த படத்தின் ஹீரோயினாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். படத்தை ஆறுமுக குமார் இயக்கியுள்ளார். படத்திற்கு “ஏஸ்” என படக்குழு பெயரிட்டுள்ளது.

News May 17, 2024

கே.எல்.ராகுல், பூரண் அடுத்தடுத்து அரை சதம்

image

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி வீரர்கள் கே.எல்.ராகுல், பூரண் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிரடியாக ஆடிய பூரண் அர்ஜுன் டெண்டுல்கர் வீசிய ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் பறக்கவிட்டு 19 பந்துகளில் அரை சதம் கடந்தார். பொறுமையாக ஆடிவந்த கே.எல்.ராகுல் 37 பந்துகளில் அரை சதம் அடித்தார். தற்போது வரை LSG 16 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்துள்ளது.

error: Content is protected !!