India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரேபரேலி தொகுதியை காங்கிரஸ் சொந்தம் கொண்டாடுவதை ஏற்க முடியாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மழை, பயல் என ரேபரேலியில் எந்த பாதிப்பு வந்தாலும் மக்களை சந்திக்க வராத காங்கிரஸ் கட்சி எந்த அடிப்படையில் குடும்ப தொகுதி என்று கூறுகிறது என அவர் கேள்வி எழுப்பினார். முன்னதாக உ.பி-யில் பரப்புரை மேற்கொண்ட பிரியங்கா காந்தி, ரேபரேலி தொகுதியை காங்கிரஸின் குடும்பத் தொகுதி என கூறியிருந்தார்.
ஐபிஎல் தொடரில் சென்னை-பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன. சென்னை இதுவரை 13 ஆட்டங்களில் 7 வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. பெங்களூரு 13 ஆட்டங்களில் 6 வெற்றி, 7 தோல்வி என 12 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்த போட்டியில் வென்றால் சென்னை எளிதாக பிளே ஆஃப் செல்லும். ஆனால், பெங்களூரு அணி சென்னையை குறிப்பிட்ட வரையறைக்குள் வென்றால் மட்டுமே பிளே ஆஃப்க்கு செல்ல முடியும்.
அரசின் நலத்திட்டங்கள் குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரிவிப்பதற்காக எமிஸ் என்ற இணையதளத்தை பள்ளி கல்வித்துறை தொடங்கியுள்ளது. இதில் பெற்றோர்கள் மொபைல் எண்கள் இணைக்கப்பட்டு, பள்ளி விடுமுறை, சீருடை வழங்கும் தேதி உள்ளிட்ட தகவல்கள் பெற்றோர்களுக்கு அனுப்பப்படும். இந்த மொபைல் எண்களை சரிபார்ப்பதற்காக அனுப்பப்படும் ‘OTP’யை பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் தெரிவிக்க பள்ளி கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
➤ பாஜக 200 இடங்களை கூட வெற்றி பெறாது – கெஜ்ரிவால்
➤ 400 தொகுதிகளில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும் – அமித் ஷா
➤ காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா வளர்ச்சி பாதையில் சென்றது – சோனியா காந்தி
➤ ராகுல் காந்தியால் இந்தியாவை வழி நடத்த முடியாது – ராஜ்நாத் சிங்
➤ சந்தானம் படத்தின் புதிய பாடல் வெளியீடு
➤ மும்பைக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி வெற்றி
5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. உ.பி, மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ராகுல் போட்டியிடும் ரேபரேலி தொகுதியிலும் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதுவரை நடைபெற்ற 4 கட்ட மக்களவைத் தேர்தலில் 379 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.
பாஜக ஆட்சியில் மக்கள் கடும் கோபத்துடன் இருப்பதாக பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். விலைவாசி உயர்வும், வேலை வாய்ப்பின்மையும் மக்களை கடுமையாக பாதித்துள்ளதாக தெரிவித்த அவர், இது குறித்து மக்களிடம் எந்த விளக்கத்தையும் இதுவரை பாஜக கூறவில்லை என்றார். வீட்டை எரிப்பது பாஜகவின் இந்துத்துவா, வீட்டில் அடுப்பை எரிய வைப்பது தங்களின் இந்துத்துவா என அவர் தெரிவித்தார்.
அடுத்த 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் நீலகிரி வருவதை தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார். நீலகிரிக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மே 18, 19, 20 உள்ளிட்ட 3 நாள்களும் பொதுமக்கள் சுற்றுலா வருவதை தவிர்க்க வேண்டும் என்ற அவர், பயணிகள் ஒருவேளை நீலகிரிக்கு வந்தாலும் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்றார். நீலகிரி செல்ல இ-பாஸ் பெறுவது அவசியமாகும்.
ஏழைகளுக்கு எது கொடுத்தாலும் மோடிக்கு வயிறு எரிவதாக கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இலவச பேருந்து திட்டத்தால் மெட்ரோவில் கூட்டம் குறைவதாக தெரிவித்த மோடியின் பேச்சை விமர்சித்த அவர், தமிழகத்தில் எந்த நலத்திட்டம் கொண்டு வந்தாலும் அது மோடியின் கண்களை உறுத்துவதாக தெரிவித்தார். 2ஆம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கு இந்த காரணத்துக்காகத்தான் இதுவரை மோடி நிதி ஒதுக்கவில்லையா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மே.வங்க ஆளுநர் ஆனந்த போஸ் பதவி விலக கோரி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினர். மே.வங்க ஆளுநருக்கு எதிராக, ராஜ்பவனில் பணிபுரியும் பெண் சில நாட்களுக்கு முன்பு பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்த நிலையில், ஆளுநர் தன் மீதான புகாரை மறுத்தார். இதனை கண்டித்து மம்தா கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
பாஜகவில் அதிமுக நிர்வாகிகள் இணைவார்கள் என்பது திட்டமிட்டு பரப்பப்படும் கட்டுக்கதை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை என்று தெரிவித்த அவர், எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுக வீறு நடை போட்டு சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். பாஜகவில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இணைவார்கள் என்பது திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி என்று குற்றம் சாட்டினார்.
Sorry, no posts matched your criteria.