News May 18, 2024

ஜூனில் ‘இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா

image

கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனிருத்தின் இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன், விழாவை பிரமாண்டமாக நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புரமோஷனுக்கான பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. மேலும், ஜூலை 2ஆவது வாரத்தில் படத்தை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

News May 18, 2024

3,000 ரன்களை கடந்து விராட் கோலி புதிய சாதனை

image

CSK அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், RCB வீரர் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்த அவர், 1 Four, 2 Six என விளாசி அசத்தினார். இதனால், ஐபிஎல் வரலாற்றில் ஒரே மைதானத்தில் 3,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற புதிய மைல் கல்லை எட்டினார். அவருக்கு அடுத்தபடியாக ரோஹித் ஷர்மா – 2295 (வான்கடே), டிவில்லியர்ஸ் – 1960 (சின்னசாமி) ரன்களுடன் உள்ளனர்.

News May 18, 2024

CSKvsRCB: போட்டி மீண்டும் தொடங்கியது

image

CSK-RCB இடையேயான ஐபிஎல் போட்டி மீண்டும் தொடங்கியது. 3 ஓவர்கள் நிறைவடைந்த நிலையில், திடீரென மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து, மைதான ஊழியர்கள் கவர்கள் கொண்டு மைதானத்தை மூடினர். 15 நிமிடங்கள் தொடர் மழைக்கு பிறகு, மழை லேசாக குறைய தொடங்கியது. பின், முற்றிலும் மழை நின்றதால், போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது. கோலி 19, டு பிளசி 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

News May 18, 2024

அயலக தமிழர்கள் பதிவு செய்ய தமிழக அரசு அழைப்பு

image

அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி, திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி எண்கள்: 1800 309 3793 (இந்தியா), 80690 09901 (அயல்நாடு) புகைப்பட அடையாள அட்டைக்கு https://nrtamils.tn.gov.in இணையத்தில் பார்வையிடுமாறு கூறப்பட்டுள்ளது.

News May 18, 2024

இந்தியாவில் 40% வாகனங்கள் காப்பீடு இல்லாதவை

image

இந்தியாவில் 40% வாகனங்களுக்கு காப்பீடு இல்லை என்ற புதுத்தகவல் வெளியாகியுள்ளது. விதிகளை மீறும் வாகனங்களுக்கு காப்பீடு மூலம் அபராதம் விதிப்பதை உறுதி செய்யக்கோரும் மனு, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 60% வாகனங்களுக்கு மட்டுமே காப்பீடு உள்ளது. இதனால் விபத்தில் சிக்குவோர் தேர்ட் பார்டி காப்பீடு மூலம் நிதி கூட பெற முடிவதில்லை என்று மத்திய அரசு தரப்பில் விளக்கப்பட்டது.

News May 18, 2024

இனி பேட்டி கொடுக்க மாட்டேன்: சுசித்ரா

image

யூடியூப் சேனல்கள் தவறுதலாக திரித்து வெளியிடுவதாக பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார். அவரது நேர்காணலொன்று இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து வீடியோ வெளியிட்ட அவர், இனிமேல் தனது யூடியூப் சேனலில் மட்டும் பேச உள்ளதாகவும், அதில் சினிமா, தத்துவம் சார்ந்த வீடியோக்களை வெளியிடப் போவதாகவும் கூறினார். மேலும், மற்ற யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளிக்க மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

News May 18, 2024

CSKvsRCB: மழையால் போட்டி தற்காலிகமாக ரத்து

image

CSK-RCB இடையேயான ஐபிஎல் போட்டி, மழையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன்பு லேசாக சாரல் வீசிய நிலையிலும், டாஸ் போடப்பட்டு போட்டி தொடங்கப்பட்டது. 3 ஓவர்கள் முடிந்த நிலையில், திடீரென மழை பெய்ய தொடங்கியதால், நடுவர்கள் போட்டியை நிறுத்த உத்தரவிட்டனர். மழை நின்றதும் போட்டி தொடங்கப்படும் மீண்டும் என்றும், இல்லையென்றால் ஓவர்கள் குறைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

News May 18, 2024

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ரஷ்மிகா?

image

‘டான்’ பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் புதிய படத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் மீண்டும் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது. பாஷன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், ஒரு சில மாதங்களில் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

News May 18, 2024

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் காலமானார்

image

புகழ்பெற்ற வங்கியாளரும், ICICI வங்கியின் முன்னாள் தலைவருமான நாராயணன் வகுல் (88) சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலமானார். இந்தியாவின் 2வது தனியார் துறை வங்கியாக ICICI வளர்ச்சி பெற இவரே முக்கிய காரணமாக இருந்தார். மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்த போது மேற்கொள்ளப்பட்ட நிதித்துறை சீர்திருத்தங்களில், நாராயணனும் முக்கிய பங்கு வகித்ததாக காங்., மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் நினைவுகூர்ந்துள்ளார்.

News May 18, 2024

வெளியீட்டை நிறுத்தியது Reader Digest

image

பிரிட்டனில் இருந்து 85 ஆண்டுகளாக Reader Digest பத்திரிகை வெளியிடப்பட்டது. அதில் இடம்பெறும் குடும்பத்தினரை கவரும் செய்திகள், துணுக்குகள், உடல்நலக் குறிப்புகள் மிகவும் பயன் உள்ளதாக இருந்ததால் உலகம் முழுவதும் ஏராளமான வாடிக்கையாளர்கள் இருந்தனர். இந்நிலையில், தனது வெளியீட்டை அந்நிறுவனம் மே மாதத்துடன் நிறுத்தியுள்ளது. நிதி நெருக்கடியால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!