India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நம்மில் பலருக்கும் கோடீஸ்வரராக மாற வேண்டும் என்பது கனவாக இருக்கும். தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம் எளிதாக அந்த கனவை எட்ட முடியும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். குறிப்பாக, அதற்கு 15 – 15 – 30 விதி தெரிந்திருக்க வேண்டும். 30 ஆண்டுகளுக்கு 15% ரிட்டர்ன் தரும் மியூச்சுவல் ஃபண்டில் மாதம் ₹15,000ஐ முதலீடு செய்து வந்தால், இறுதியில் ₹10 கோடி என்ற இலக்கை அடைய முடியும் எனக் கூறுகின்றனர்.
CSK-க்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், RCB வீரர் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்த அவர், 3 சிக்சர்கள் விளாசி அசத்தினார். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள் (37 சிக்சர்கள்) அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். நிகோலஸ் பூரன்- 36, அபிஷேக் ஷர்மா- 35, சுனில் நரைன்- 34 சிக்சர்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன், 2022இல் தி லெஜண்ட் என்ற படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்தார். அதில் விஞ்ஞானியாக அவர் நடித்திருந்தார். இதையடுத்து அவரது அடுத்த திரைப்படம் குறித்து ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் சசிகுமாரை வைத்து கருடன் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் அவர் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும், பட வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
CSK-க்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், RCB கேப்டன் டு பிளசி அரைசதம் விளாசினார். தொடக்கம் முதலே பொறுப்புடன் விளையாடி வந்த அவர், 3 Four, 3 Six என விளாசி அசத்தினார். இதனால் 35 பந்துகளில் 50* ரன்கள் அடித்த அவர், தனது 37ஆவது ஐபிஎல் அரை சதத்தை பதிவு செய்தார். அவருடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த விராட் கோலி, 47(29) ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால், RCB அணி 200+ ரன்களுக்கு மேல் அடிக்க வாய்ப்புள்ளது.
பிச்சை பாத்திரத்தை ஏந்தியபடி பாகிஸ்தான் சுற்றுவதாக மோடி விமர்சித்துள்ளார். பிரசார கூட்டத்தில் பேசிய அவர், கையில் வெடி குண்டுகளை வைத்து கொண்டு, 70 ஆண்டுகளாக பிரச்னை கொடுத்த பாகிஸ்தான், மத்தியில் பாஜக தலைமையில் வலுவான அரசு இருப்பதால் கையில் பிச்சை பாத்திரத்தை ஏந்தி சுற்றுவதாகவும், இந்தியாவுக்கு தொந்தரவு அளிக்கும் முன்பு 1,000 முறை எதிரிகள் தற்போது யோசிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி எம்.பி பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிராக பெங்களூரு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. சிறப்பு குழு மனுவை ஏற்று வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அவருக்கு எதிராக புளூ கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றம் மூலம் கைது வாரண்ட் பெறப்பட்டுள்ளது.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிச்சுற்றுக்கு, இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி முன்னேறியுள்ளது. ஆடவருக்கான இரட்டையர் பிரிவின் அரையிறுதி போட்டியில், இந்தியா-தைவான் நாடுகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 21-11, 21-12 என்ற நேர் செட் கணக்கில் சாத்விக்-சிராக் ஜோடி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில், இந்தியா சீனாவை எதிர்கொள்ள உள்ளது.
கஜகஸ்தானில் நடைபெற்று வரும் 2024 எலோர்டா கோப்பை பாக்ஸிங் போட்டியில், இந்தியா 2 தங்கம் வென்றுள்ளது. மகளிருக்கான 52 கிலோ எடை பிரிவு இறுதிப்போட்டியில், நிகாத் ஜரீன் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் கஜகஸ்தான் வீராங்கனையை வீழ்த்தினார். அதேபோல், 48 கிலோ எடை பிரிவு இறுதிப்போட்டியில், மீனாட்சி 4-1 என்ற புள்ளிக் கணக்கில் மற்றொரு கஜகஸ்தான் வீராங்கனையை வீழ்த்தினார். இந்தியா மொத்தம் 12 பதக்கங்களை வென்றுள்ளது.
பிரதமர் மோடியின் ‘பயோபிக்’ படத்தில் சத்யராஜ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, பெரியாரை பின்பற்றும் சத்யராஜ் எப்படி மோடியாக நடிக்க ஒப்புக்கொண்டார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், இந்த தகவல் உண்மையில்லை என மறுப்பு தெரிவித்துள்ள அவர், வாய்ப்பு வந்தால் பார்க்கலாம் என்றும் கூறினார். மேலும், நாத்திகம் பேசிய எம்.ஆர்.ராதா ஆன்மிகவாதியாக நடித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனிருத்தின் இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன், விழாவை பிரமாண்டமாக நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புரமோஷனுக்கான பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. மேலும், ஜூலை 2ஆவது வாரத்தில் படத்தை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.