India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘G.O.A.T’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், நடிகர் அஜ்மல் தன்னுடைய பகுதிகளை நிறைவு செய்துள்ளார். இப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து உற்சாகம் தெரிவித்துள்ள அவர், தன்னுடைய அடுத்தப்பட கேரக்டரும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும், அதை விரைவில் வெளிப்படுத்தவுள்ளதாகவும் கூறினார்.
கோடை காலங்களில் வீட்டை குளுமையாக வைக்க அனைவராலும் ஏசி வாங்க முடிவதில்லை. இதற்கு மாறாக, சமயலறை உள்ளிட்ட வெப்பமான அறைகளில் எக்சாஸ்ட் மின் விசிறிகளைப் பயன்படுத்தலாம். சூரிய ஒளி நேரடியாக அறைகளுக்கு வராமல் தடுக்க ஜன்னல்களில் திரைச்சீலைகள் பயன்படுத்தலாம். இரவில் ஜன்னல்களைத் திறந்து வைக்கலாம். மொட்டை மாடியில் வெப்பத்தை தணிக்கும் பெயின்ட் அடிக்கலாம்.
உலகக் கோப்பை தொடர்களில் உள்ள செமி ஃபைனல் போட்டி முறையில் குறைகள் இருப்பதால் ப்ளே ஆஃப் முறையை IPL பின்பற்றுகிறது. அதன்படி புள்ளிப் பட்டியலில் இருக்கும் முதல் இரு அணிகள், முதல் குவாலிஃபையர் போட்டியில் வெற்றி பெற்றால் நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும். தோற்கும் அணிக்கு குவாலிஃபையர் 2இல் விளையாடும் இரண்டாம் வாய்ப்பு கிடைக்கும். இன்றைய KKR – SRH போட்டியில் தோற்கும் அணிக்கு இரண்டாம் வாய்ப்பு உண்டு.
நாடாளுமன்றத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில், வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. நேற்று இரவு நிலவரப்படி ஐந்தாம் கட்டத்தில் 60.09% மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 2019ஆம் ஆண்டு இத்தொகுதிகளில் 62.5% வாக்குகள் பதிவாகியிருந்தன. வாக்குப்பதிவை அதிகரிக்க என்ன செய்யலாம்?
நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் 10,3192 கோடி ரூபாய் சைபர் மோசடி மூலம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 6,94,000 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், சைபர் மோசடி தொடர்பாக 18 லட்சம் சிம் கார்டுகளைத் தடை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மறு சரிபார்ப்புக்கு பின், அடையாளம் காணப்பட்ட சிம் கார்டுகள் பிளாக் செய்யப்படவுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவில் 60.09% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 8 மாநிலங்களில் நடந்த வாக்குப்பதிவில், அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 74.65% வாக்குகளும், குறைந்தபட்சமாக மகாராஷ்டிராவில் 54.29% வாக்குகளும் பதிவாகியுள்ளன. பிஹார்- 54.85%, காஷ்மீர்- 56.73%, ஜார்கண்ட்- 63.07%, லடாக்- 69.62%, ஒடிஷா- 67.59%, உ.பி. – 57.79% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான மேற்கு இந்தியத் தீவுகள் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில், ப்ராண்டன் கிங் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆண்ட்ரே ரஸல், ரூதர்ஃபோர்டு, ரோமன் பவல், ஹெட்மயர், அல்ஜாரி ஜோசஃப் ஆகியோர் ஐபிஎல் தொடரில் விளையாடி வருவதால் உலகக் கோப்பை அணியில் இடம்பெறவில்லை. மே.இ.தீவுகள் அணி வீரர்கள் சர்வதேச போட்டியை விட ஐபிஎல் தொடருக்கே அதிக முக்கியத்துவம் தருகின்றனர்.
சினிமா ஆசையில் சென்னை வந்த 17 வயது சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய நதியா (37) என்ற புரோக்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அச்சிறுமியிடம் சென்னையைச் சேர்ந்த 70 வயது முதியவர், பஞ்சாப்பில் இருந்து விமானத்தில் வரும் சிங் உள்ளிட்ட பலர் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். அவர்கள் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும், நதியாவுக்கு துணையாக இருந்த சகோதரி, அவரது கணவர், நேபாள பெண் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோடி 250 ஜோடி ஆடைகளை வைத்திருப்பதாக குஜராத் முன்னாள் முதல்வர் அமர்சிங் சவுத்ரி முன்பு விமர்சித்திருந்தார். இதை தற்போது நினைவுக்கூர்ந்த பிரதமர், ₹250 கோடி கொள்ளையடித்தவர் வேண்டுமா அல்லது 250 ஆடை வைத்திருப்பவர் வேண்டுமா என மக்களிடம் கேட்டதாகவும், குஜராத் மக்கள் தன்னை தேர்ந்தெடுத்ததாகவும் கூறினார். மேலும், சவுத்ரியின் கணக்கு தவறு எனவும், தன்னிடம் 25 – 50 ஆடைகளே இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
9 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய நாய் மேருவை கௌரவிக்கும் விதமாக ரயிலில் முதல் வகுப்பில் அதற்கு பெர்த் ஏற்பாடு செய்திருந்தது இந்திய ராணுவம். எல்லையில் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்ற மேரு, மீரட்டில் உள்ள நாய்கள் காப்பகத்துக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. மேருவின் இத்தனை ஆண்டுகால அர்ப்பணிப்பை பாராட்டுவதாக இந்திய ராணுவம் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.