India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கால் தசை நார் அறுவை சிகிச்சைக்காக தோனி லண்டன் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனுடன் அவர் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2 மாதங்களுக்குப் பின் முடிவை அறிவிப்பதாக சிஎஸ்கே நிர்வாகத்திடம் கூறியிருந்தார். ஆகையால், அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் தனது ஓய்வு குறித்த முக்கிய முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தண்ணீருக்குப் பின் உலகளவில் அதிகம் அருந்தப்படும் பானம் தேநீர்தான். அதனைக் கொண்டாடும் விதமாக இன்று (மே 21) சர்வதேச ‘டீ’ தினம் கடைபிடிக்கப்படுகிறது. சோர்வைப் போக்க டீ, தூக்கத்தைப் போக்க டீ, மகிழ்ச்சியைக் கொண்டாட டீ, நண்பர்களுடன் சந்திப்புக்கு டீ, ஓய்வு நேரத்தில் டீ என்று தேநீர் குடிப்பதற்கு எந்தவொரு கால நேரமும் தேவையில்லை. டீ குடிப்போம்., உற்சாகத்தைப் பரப்புவோம்.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான வரலாற்றுப் பகையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேல் இந்த சதியை செய்திருக்கலாம் என யூகிக்கப்பட்டது. இந்நிலையில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்ளிட்டோர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்ததற்கும், தங்களுக்கும் தொடர்பில்லை என இஸ்ரேல் அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் கேசவ விநாயகம், எஸ்.ஆர்.சேகர் இன்று ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில், தேர்தல் பணிக்காக வெளி மாநிலத்தில் இருப்பதால் ஆஜராக அவகாசம் வழங்க வேண்டும் என இருவரும் கேட்டுக் கொண்டுள்ளனர். தேர்தல் செலவுக்காக இப்பணம் கொண்டு செல்லப்பட்டதா என்ற கோணத்தில் சிபிசிஐடி விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் இன்று தனது 64ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு, பிருத்திவிராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘L2 – எம்புரான்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டு வெளியாகி, மிகப்பெரிய வெற்றிப் பெற்ற ‘லூசிபர்’ படத்தின் 2ஆம் பாகமாக இப்படம் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
கோடை கால மின் தேவையை சமாளிக்க தமிழக மின்வாரியம் ₹2,755 கோடிக்கு தனியாரிடம் மின்சாரம் வாங்கியிருக்கிறது. உற்பத்தியை விடவும் அதிக மின் தேவை ஏற்பட்டதால் கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதாக மின்சார ஒழுங்குமுறை வாரியத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருக்கிறது. தற்போது, வெயில் குறைந்துவிட்டதால் மின் தேவை குறைந்து தமிழகம் சமநிலையை அடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் ₹320 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 குறைந்து ₹54,880க்கும், கிராமுக்கு ₹40 குறைந்து ₹6,860க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ₹2 குறைந்து ₹99க்கும், கிலோ வெள்ளி ₹2,000 குறைந்து ₹99,900க்கு விற்பனையாகிறது.
தலைநகர் டெல்லியில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 47.4 செல்சியசாக பதிவானது. இது வரலாற்று உச்சமாகும். இதன் தொடர்ச்சியாக டெல்லி, ஹரியானா, பஞ்சாப், சண்டிகர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு அதிவெப்பத்துக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் மழை சக்கைப் போடு போடும் அதே வேளையில் வட மாநிலங்களில் வெயில் தகிக்கிறது. இவை காலநிலை மாற்றத்துக்கான விளைவுகள் என்கிறனர் அறிஞர்கள்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னை அருகே படுகொலை செய்யப்பட்ட கறுப்பு தினம் இன்று. 1991ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரைக்காக ஸ்ரீபெரும்புதூருக்கு வந்த அவர், குண்டு வைத்துக் கொல்லப்பட்டார். அவருடன் சேர்ந்து 14 அப்பாவி உயிர்களும் பலியானது. 40 வயதில் இந்தியாவின் இளம் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ராஜீவ் காந்தி, அவரது தாயைப் போலவே படுகொலை செய்யப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.