India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூரில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கலில் நாளை காலை 8.30 வரை அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தனக்கு ஜாமின் கிடைப்பதை பல வழிகளில் மோடி தடுக்க முயன்றதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். அனுமன் ஆசி தனக்கு இருந்ததால் சிறையில் இருந்து வெளிவந்ததாக கூறிய அவர், மோடியின் சர்வாதிகாரம் இந்திய ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை என்றார். ஒட்டுமொத்த கட்சிகளும் ஒன்றாக இணைந்து பாஜகவை தோற்கடித்து, இந்திய மக்களை சர்வாதிகாரிகளிடம் இருந்து காக்க வேண்டும் என சூளுரைத்தார்.
பிளாக்அவுட் ரேஜ் கேலன் (BORG) என்ற வார்த்தை அமெரிக்காவில் உள்ள மணவர்களிடம் பிரபலமாக உள்ளது. ஒரு பெரிய அளவிலான கேலனில், வோட்கா அல்லது பிற காய்ச்சி வடிகட்டிய ஆல்கஹால், தண்ணீர், சுவையை அதிகரிக்கும் மற்றும் எலக்ட்ரோலைட் தூளை பயன்படுத்தி, அதீத போதை தரும் புதிய பானத்தை தயாரித்து அருந்துகிறார்கள். மதுவை விட பலமடங்கு அதிக பாதிப்புகளை BORG கொடுக்கும் என மருத்துவர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டது இந்தியாவின் நற்பெயரை உலக அளவில் கெடுத்துள்ளதாக டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குறைந்த பட்ச பொறுப்புடன் கூட நடந்து கொள்ளவில்லை என்ற அவர், பெண்களின் பாதுகாப்பில் அவரின் அக்கறையற்ற தன்மையை இது வெளிப்படுத்துகிறது என்றார். தோல்வி பயத்தில் பாஜக ஸ்வாதி மலிவால் மூலம் அவதூறு பரப்புவதாக ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது.
இந்திய குடியுரிமை இல்லாததால் பாலிவுட் பிரபலங்கள் பலர் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆலியா பட், கத்ரீனா கைஃப் (பிரிட்டிஷ் குடியுரிமை) இலியானா (போர்ச்சுகல்), ஜாக்குலின் பெர்னாண்டஸ் (இலங்கை), நோரா ஃபதேஹி (கனடா) உள்ளிட்டவர்கள் இந்திய குடியுரிமை பெறவில்லை. கனடா குடிமகனாக இருந்த அக்ஷய் குமார், சமீபத்தில் இந்திய குடியுரிமை பெற்று தற்போது முதல் முறையாக வாக்களித்துள்ளார்.
தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான (டிடெட்) மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ள பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதள வழியில் மே 30-ம் தேதிக்குள் பெற்று, அவற்றின் மீதான பரிசீலனையை ஜூன் 3-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை, நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் ரூ.95 கோடிக்கு வாங்கியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் 700 ஊழியர்களுடன், 3 செட்டுகள் அமைத்து நடைபெற்று வருகிறது. அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
KKR-க்கு எதிரான Qualifier 1 போட்டியில், SRH வீரர் ராகுல் திரிபாதி கண்ணீர் விட்டு அழுதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. SRH வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறி வந்த போது, ராகுல் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இந்நிலையில், சுனில் நரைன் வீசிய 14ஆவது ஓவரில், எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டானார். இதனை சற்றும் ஏற்றுக்கொள்ளாத அவர், படிக்கட்டில் அமர்ந்தபடி கண் கலங்கினார்.
ஓபிஎஸ் அணியின் எந்த மிரட்டலுக்கும்
அஞ்ச மாட்டேன் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். 2 முறை அமைச்சராக இருந்த என்னை இபிஎஸ்ஸின் அடியாள் என ஓபிஎஸ் தரப்பினர் விமர்சிப்பதாக வருத்தப்பட்ட அவர், கடைசி வரை அதிமுகவுக்கு விசுவாசமாக இருப்பேன் என்றார். மு.க.அழகிரி மதுரையில் இருந்த பொழுது கிராமம் கிராமமாக சென்று இளைஞர் பாசறையை உருவாக்கி சாதித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஒயினோதெரபி என அழைக்கப்படும் புதிய அழகு சிகிச்சை முறை தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. ரெட், ஒயிட் அல்லது ரோஸ் ஒயின், மூலிகைகள், எசன்ஷியல் ஆயில்கள் போன்றவற்றை பயன்படுத்தி சருமத்தை சீரமைத்து, முதுமை தோற்றத் தடுப்பு சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. ஒயின்களில் இயற்கையான அழற்சி தடுப்பு உட்பொருள்கள் இருப்பதாகவும், இவை சரும சுருக்கங்களை சரிசெய்து, முதுமை தோற்றத்தைத் தடுப்பதாகவும் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.