News May 23, 2024

இந்த ஆண்டின் முதல் புயல் ‘ரெமல்’

image

வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை மறுநாள் புயலாகவும், மே 26ஆம் தேதி தீவிர புயலாகவும் வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இது இந்த ஆண்டில் உருவாகும் முதல் புயலாகும். இதற்கு ‘ரெமல்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்பெயரை ஓமன் நாடு பரிந்துரைத்துள்ளது. இதற்கு ‘மணல்’ என்பது அர்த்தமாகும்.

News May 23, 2024

கெஜ்ரிவால் பெற்றோரை விசாரிக்க போலீஸ் அழைப்பு

image

AAP பெண் எம்பி மாலிவாலை தாக்கியதாக கெஜ்ரிவாலின் உதவியாளர் விபவ் குமார் மீது வழக்கு பதிந்து டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அதிஷி, இந்த வழக்கு குறித்து விசாரிக்க கெஜ்ரிவாலின் வயதான பெற்றோரை போலீஸ் விசாரணைக்கு அழைத்திருப்பதாகக் குற்றம்சாட்டினார்.

News May 23, 2024

+2வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு

image

+2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த SC, ST பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் துணைத் தேர்வு எழுத உதவும் வகையில் சிறப்பு வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பழங்குடியினர் நலப் பள்ளி மாணவர்கள் 100% உயர்கல்வியில் சேரும் வகையில் இந்நடவடிக்கையை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க உதவுமாறு ஆசிரியர்களிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News May 23, 2024

தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை

image

தேர்தல் ஆணையத்தின் மீது அரசியல் கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் பிரதமர் மோடி, அமித் ஷா பேசுவதாகவும், அவர்களுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், தான் கடவுளால் பூமிக்கு அனுப்பப்பட்டவன் எனக்கூறும் மோடி, கடவுள் பணியே செய்யட்டும் என்றும் அவர் சாடினார்.

News May 23, 2024

ஆஸ்கர் ஸ்கிரிப்ட் நூலகத்தில் ‘பார்க்கிங்’

image

ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பார்க்கிங்’ பட திரைக்கதையை, அகாடமி விருதுகளின் ஸ்கிரிப்ட் நூலகத்தில் வைக்க அழைப்பு வந்துள்ளதாக படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது X பதிவிட்ட அவர், இந்த செய்தியை கேட்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும், மிகப்பெரிய படைப்புகளுக்கு மத்தியில் தங்கள் படைப்பும் இடம்பெறுவது பெருமையாக இருக்கிறது” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

News May 23, 2024

எஸ்.ஆர்.சேகரிடம் மீண்டும் விசாரிக்கத் திட்டம்

image

தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் மீண்டும் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஆஜராக அவகாசம் கோரிய நிலையில் கடந்த 21ஆம் தேதி கோவை கணபதி பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்ற அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணானத் தகவல் அளித்ததால், மீண்டும் சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

News May 23, 2024

அதிமுகவில் மாற்றம் வரலாம்: ராஜன் செல்லப்பா

image

அதிமுகவில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் எப்போது வேண்டுமானாலும் இருக்கும் என அக்கட்சியின் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியுள்ளார். தேர்தல் முடிவுக்கு பின் அதிமுக தலைமை மாறும் என்பதற்கு கிஞ்சித்தும் இடமில்லை என்றும், பொதுச்செயலாளர் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் மாற்றம் வரலாம் எனவும் அவர் தெரிவித்தார். தேர்தலின்போது சரியாக பணியாற்றாத நிர்வாகிகள் மாற்றப்பட உள்ளதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News May 23, 2024

‘இந்தியன் 2’ இசை வெளியீட்டு விழாவில் ரஜினி?

image

இந்தியன் 2′ படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் ஜூன் 1ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ரஜினி, ராம் சரண், சிரஞ்சீவி, ரன்வீர் சிங், மோகன்லால், மணிரத்னம் உள்ளிட்டோர் கலந்து கொள்ளப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடலான ‘பாரா’, ரசிகர்களிடையே கலவையான வரவேற்பையே பெற்றுள்ளது.

News May 23, 2024

ஜுன் 2ஆவது வாரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா

image

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜுன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளதால், அது வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும். இதனால் கட்சி நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் உள்ள திமுக, கலைஞர் நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாக ஜுன் 2ஆவது வாரத்தில் நடத்த முடிவு செய்திருப்பதாகவும், திமுக பொதுக்குழு கூட்டத்தையும் அண்ணா பிறந்தநாள் விழாவுக்கு முன்பு நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

News May 23, 2024

மருத்துவ பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

image

பி.எஸ்.சி நர்சிங், பி பார்ம் உள்ளிட்ட 19 மருத்துவ பட்டப்படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் அறிவித்துள்ளார். ஜூன் 21ஆம் தேதி மாலை 5 மணி வரை <>tnmedicalselection.net<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தை அணுக முடியாத மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களுடன் அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!