News May 23, 2024

ஷேன் வார்னே சாதனையை சமன் செய்த சஞ்சு சாம்சன்

image

ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக அதிக வெற்றிகளைப் பதிவு செய்த வீரர்கள் வரிசையில் ஷேன் வார்னேவின் சாதனையை சஞ்சு சாம்சன் சமன் செய்துள்ளார். ஷேன் வார்னே 31 வெற்றிகளுடன் முதலிடம் பிடித்திருந்த நிலையில், நேற்றைய பெங்களூருவுக்கு எதிரான வெற்றியின் மூலம் சஞ்சு சாம்சன் அதை சமன் செய்துள்ளார். முன்னதாக, ராகுல் டிராவிட் 18 வெற்றிகளை பெற்று இந்தப் பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ளார்.

News May 23, 2024

மாட்டிறைச்சி தான் பிடிக்கும்; அண்ணாமலைக்கு EVKS பதிலடி

image

கமலாலயத்தில் மாட்டிறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகளை தயார் செய்து வைக்குமாறு அண்ணாமலைக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார். தங்களுக்கு அசைவ உணவுகள் தான் பிடிக்கும் என்ற அவர், கமலாலயம் வரும் தேதியை 2 நாள்களுக்கு முன் அறிவிக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, பாஜக அலுவலகத்தை காங்கிரசார் முற்றுகையிட வந்தால், வரும் 10 பேருக்கு உணவு அளிப்பதாக அண்ணாமலை கூறியிருந்தார்.

News May 23, 2024

ஜூன் 1இல் விண்ணில் பறக்கிறார் சுனிதா வில்லியம்ஸ்

image

போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம், வரும் ஜூன் 1ஆம் தேதி பகல் 12.25 மணிக்கு சுனிதா வில்லியம்ஸ் விண்ணில் பறக்க உள்ளார். ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுனிதாவின் விண்வெளி பயணம் 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஆக்சிஜன் குழாய் புதிதாக மாற்றப்பட்டு, ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து பறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

News May 23, 2024

அதிமுக ஓரணியாகும் என ஓபிஎஸ் நம்பிக்கை

image

அதிமுக தற்போது இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா ஆகிய 3 அணிகளாகப் பிரிந்து நிற்கிறது. இதில் ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் ஒரே அணியாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களை டிடிவி தினகரனும் ஆதரித்து வருகிறார். இந்நிலையில், இபிஎஸ் தலைமையிலான அதிமுகவையும், ஓபிஎஸ், சசிகலா அணிகளையும் இணைக்கப் பேச்சு நடப்பதாகவும், விரைவில் அதிமுக ஒன்றுபடும் என்று ஆதரவாளர்களிடம் ஓபிஎஸ் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News May 23, 2024

காட்பாடி- திருப்பதி ரயில்கள் 4 நாள்கள் ரத்து

image

திருப்பதி-காட்பாடி இடையே உள்ள பொம்மசமுத்திரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், வரும் 27- 30ஆம் தேதி வரை திருப்பதி-காட்பாடிக்கு காலை 10.35 மணி, மாலை 6.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் காட்பாடி- திருப்பதிக்கு மதியம் 2.50 மணி, இரவு 9.15 மணிக்கு இயக்கப்படும் ரயில்களும், காட்பாடி-ஜோலார்பேட்டை இடையேயான ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

News May 23, 2024

பங்குச் சந்தை உச்சத்தை எட்டியதன் காரணங்கள்

image

இந்திய பங்குச் சந்தை உச்சத்தை எட்டியதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றாலும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து வாங்கி வருகின்றனர். மத்திய அரசுக்கு RBI ₹2.11 லட்சம் கோடி ஈவுத்தொகை தருவதாக அறிவித்தது சந்தையில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. Technical Factorஇன் படி 22,800 என்ற வலுவான தடையை நிஃப்டி உடைத்ததும் காரணமாக சொல்லப்படுகிறது.

News May 23, 2024

புதிய உச்சத்தில் பங்குச்சந்தை

image

மும்பை பங்குச்சந்தை இதுவரை இல்லாத வகையில் 75,000 புள்ளிகளை கடந்து வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 1,227 புள்ளிகள் உயர்ந்து 75,448ஆகவும், நிஃப்டி 349 புள்ளிகள் உயர்ந்து 22,947ஆகவும் வர்த்தகமாகி வருகின்றன. சர்வதேச அளவில் சாதகமான சூழல் நிலவியது பங்குச்சந்தை உயர்வுக்கு முக்கிய காரணம். இதனால், ஐ.டி., வங்கித்துறை பங்குகள் கணிசமாக உயர்ந்துள்ளன.

News May 23, 2024

400க்கும் குறைவான இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ்

image

எம்.பி தேர்தலில் காங்கிரஸ் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 328 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. இதுவரை நடைபெற்றுள்ள அனைத்து தேர்தல்களிலும் 400 இடங்களை தாண்டியே அக்கட்சி போட்டியிட்டுள்ளது. 2004இல் குறைந்தபட்சமாக 417 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், தற்போது கூட்டணி கட்சிகளுக்காக அந்த எண்ணிக்கையை வெகுவாக குறைத்துக் கொண்டுள்ளது. 1996இல் காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 529 தொகுதிகளில் போட்டியிட்டது.

News May 23, 2024

விஜய் அழைப்புக்காக காத்திருக்கும் சீமான்

image

நாம் தமிழர் கட்சி தொடங்கிய நாள் முதல் தனித்துப் போட்டியிட்டு வருகிறது. அண்மையில் விஜய் ஆரம்பித்த த.வெ.க. கட்சியும் கூட்டணி சேராமல் உள்ளது. இதை கவனித்த சீமான், விஜய் கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்டால் கணிசமானத் தொகுதிகளில் வெற்றி பெறலாம் என நினைப்பதாகவும், ஆனால் வழிய சென்று பேசி, விஜய் மறுத்துவிட்டால் தர்மசங்கடமாகி விடும், ஆதலால் விஜய் அழைக்கட்டும் எனக் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

News May 23, 2024

பிஹார் மக்கள் நம்பிக்கையை இழக்கும் நிதிஷ் குமார்

image

பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதிஷ் குமார், மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டார். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இதுபோல அவர் 3 முறை அணி மாறி முதல்வராகியுள்ளார். இந்த நிலைப்பாட்டை கண்டு அவர் மீதான நம்பிக்கையை பிகார் மக்கள் இழந்து வருவதாகவும், அது மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

error: Content is protected !!