India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆம் ஆத்மி கட்சியினருக்கு நல்ல குணாதிசயங்கள் கிடையாது என பாஜக பிரமுகரும் நடிகையுமான கங்கனா ரனாவத் விமர்சித்துள்ளார். சுவாதி மாலிவால் விவகாரம் குறித்து பேசிய அவர், “சுவாதி தாக்கப்பட்டது சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறைக்கு செல்லும் நபர்கள் தார்மீக அடிப்படையில் தங்கள் பதவியை விட்டு விலகி இருக்க வேண்டும். ஆனால், சில நபர்கள் பதவி விலகி நேர்மையாக நடப்பதில்லை” என்றார்.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பிரான்சில் நடந்த கான் திரைப்பட விழாவில் பெரிய கட்டுடன் காணப்பட்டார். இதனால் ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆனது. எப்படிக் காயம் ஏற்பட்டது என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். தற்போது அதற்கு விடை கிடைத்து இருக்கிறது. கடந்த 11 ஆம் தேதி மும்பை வீட்டிலிருந்தபோது எதிர்பாராத விதமாகத் தடுக்கி விழுந்த நடிகை ஐஸ்வர்யா ராயின் இடது கை உடைந்துவிட்டதாம்.
➤1218 – ஐந்தாவது சிலுவைப் போர் வீரர்கள் எகிப்து நோக்கிப் புறப்பட்டனர். ➤1738 – ஜோன் உவெஸ்லி மெதடிசம் மத இயக்கத்தை தோற்றுவித்தார். ➤1883 – நியூயோர்க்கில் புரூக்ளின் பாலம் மக்கள் பயன்பட்டிற்குத் திறக்கப்பட்டது. ➤1993 – எத் தியோப்பியாவிடம் இருந்து எரித்திரியா விடுதலை பெற்றது. ➤2000 – நோர்வே தூதரகம் மீது இலங்கை ராணுவம் குண்டு வீசியது. ➤2021 – மார்க்சிய சிந்தனையாளர் எஸ்.என்.நாகராசன் மறைந்த நாள்.
ஷார்ஜா சேலஞ்சர் செஸ் தொடரில் இந்திய வீராங்கனை திவ்யா சாம்பியன் வென்றுள்ளார். ஷார்ஜாவில் நடந்த செஸ் தொடரின் 9 சுற்று முடிவில் இந்தியாவின் திவ்யா, லேயா (ரஷ்யா), சினா (ஈரான்) தலா 7 புள்ளிகளைப் பெற்றனர். வெற்றியாளரை முடிவு செய்ய ‘டை-பிரேக்கர்’ சுற்று நடந்தது. இதில் சிறப்பாக செயல்பட்ட திவ்யா (47 புள்ளி) வென்று சாம்பியன் ஆனார். லேயா (45 புள்ளி), சினா (41 புள்ளி) அடுத்த இரு இடங்களைப் பிடித்துள்ளனர்.
சத்தீஸ்கரின் எல்லையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நாராயண்பூரில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 7 நக்சல்கள் உயிரிழந்தனர். படுகொலை செய்யப்பட்ட மாவோயிஸ்ட்களின் அருகில் கிடந்த ஏகே-47 ரக துப்பாக்கிகள், நவீன ஆயுதங்களும் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டன.
தேர்தல் முடிவுக்கு பின் முல்லைப் பெரியாறு அணை குறித்து பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்துவேன் என்று ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “காமராஜர் காலத்தில் தான் அணைகள் கட்டப்பட்டன. 57 ஆண்டுகளில் திமுக, அதிமுக ஆட்சியில் அணைகள் எதுவும் கட்டப்படவில்லை. திமுக ஆட்சியில் 41 அணைகள் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அவற்றை அணைகள் என சொல்ல முடியாது. அதில், ஒரு டி.எம்.சி கொள்ளளவுகூட இல்லை” என்றார்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: வான்சிறப்பு ▶ எண்: 12
▶குறள்:
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
▶பொருள்:
உண்பவருக்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோருக்குத் தானும் ஓர் உணவாகவும் ஆகி, அரிய தியாகத்தைச் செய்கிறது மழை.
2023-24ஆம் நிதியாண்டின் 4ஆவது காலாண்டில், இந்தியாவின் ஹோட்டல் துறை 11.4% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக ஜே.எல்.எல். இந்தியா தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், மதிப்பீட்டுக் காலாண்டில், சென்னை நகரின் சராசரி தினசரி வருவாய் (ஏடிஆர்) 22% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. திருமண நிகழ்வுகள், தொழில்முறைப் பயணம், மாநாடுகள் ஆகியவை அந்நகரில் அதிகரித்ததே இந்த வளர்ச்சிக்குக் காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆசிய வாலிபால் சேலஞ்ச் கோப்பை தொடரின் 2ஆவது லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது. பிலிப்பைன்ஸில் ஆசிய வாலிபால் சேலஞ்ச் கோப்பை தொடர் நடந்து வருகிறது. அதன் 2ஆவது போட்டியில், 46ஆவது இடத்திலுள்ள சீன தைபே அணியுடன் இந்திய அணி (62) மோதியது. அதில், இந்திய அணி 3-0 (25-19, 25-13, 25-16) என்ற செட் கணக்கில் வென்று 3ஆவது லீக் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
வாக்குப்பதிவு விவரம் அடங்கிய படிவம் 17சி-ஐ பொதுவில் வெளியிடுவது தீங்குக்கு வழிவகுக்கும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் (ECI) தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் ECI தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், “வலைதளத்தில் வெளியிட்டால், 17சி படிவத்தை போன்ற போலி பிரதிகளை வஞ்சக நோக்கம் கொண்டவர்கள் உருவாக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன. இது மக்கள் இடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.