News May 24, 2024

நபிகள் நாயகனாரின் பொன்மொழிகள்

image

✍ அன்புதான் இறைவனின் உரைவிடம் என்பதை அறியாதே அறிவே இறைவனின் உறைவிடத்தை தேடி அலைகிறது. ✍உழைப்பாளியின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியைக் கொடுத்து விடுங்கள். ✍இறைவன் நம் உருவத்தையே செல்வதையோ பார்ப்பதில்லை மாறாக உள்ளத்தையும் செயலையும் பார்க்கிறான். ✍நாம் யாருக்கும் மேலோரல்ல; நமக்கு யாரும் மேலோர் அல்ல. ✍மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்து தான் பிறக்கின்றன.

News May 24, 2024

வேறு அணிக்காக விராட் கோலி விளையாட வேண்டும்

image

ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் விராட் கோலி வேறு அணிக்காக விளையாட வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் அறிவுறுத்தியுள்ளார். டெல்லியில் பிறந்த கோலி DC அணிக்காக விளையாட வேண்டும் எனக் கூறிய கெவின், இந்த முடிவை அவர் எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார். அத்துடன், ரொனால்டோ தனது அணி விட்டுச் சென்று வேறு அணிக்காக விளையாடியுள்ளார் என விளக்கமளித்துள்ளார்.

News May 24, 2024

பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டுவந்த டி.ஆர்

image

‘கொரோனா குமார்’ படத்தை முடித்துவிட்டுத்தான் நடிகர் சிம்பு அடுத்த படத்தில் நடிக்க வேண்டுமென வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் கூறியது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த விவகாரம் மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு வரை சென்றதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, ஐசரி கணேஷிடம் பேச்சுவார்த்தை நடத்திய டி.ஆர், “சிம்பு அடுத்து உங்கள் படத்தில் நடிப்பார்” என்று எழுதிக் கொடுத்து பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளார்.

News May 24, 2024

ஜனநாயகத்தை காக்கும் போரில் மக்கள் பங்கேற்க வேண்டும்

image

ஜனநாயகத்தை காக்கும் போரில் டெல்லி மக்கள் பங்கேற்க வேண்டும் என வாக்காளர்களிடம் சோனியா காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், இது மிகவும் முக்கியமான தேர்தல். நாட்டின் ஜனநாயகத்தை, அரசியலமைப்பை காப்பாற்றுவதற்கான தேர்தல். வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் மீதான தாக்குதல் போன்ற பிரச்சினைகளை முன்வைத்து இந்த தேர்தலை சந்திக்கிறோம் எனக் கூறியுள்ளார்.

News May 24, 2024

இன்றைய நல்ல நேரம்!

image

▶மே – 24 ▶வைகாசி – 11
▶கிழமை: வெள்ளி ▶திதி: பிரதமை
▶நல்ல நேரம்: காலை 09:30 – 10:30 வரை, மாலை 02:00 – 03:00 வரை
▶கெளரி நேரம்: காலை 12:00 – 01:30 வரை, மாலை 06:30 – 07:30 வரை
▶ராகு காலம்: பகல் 10:30 – 12:00 வரை
▶எமகண்டம்: காலை 03:00 – 04:30 வரை
▶குளிகை: காலை 07:30 – 09:00 வரை
▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்
▶சந்திராஷ்டமம்: ரேவதி, அசுபதி

News May 24, 2024

அகதிகள் முகாம் மாணவியின் கல்விக்கு உதவிய முதல்வர்!

image

+2 தேர்வில் 468 மதிப்பெண் எடுத்த தேக்காட்டூர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் மாணவி ஷரினாகிறிஸ்டுக்கு பட்டப்படிப்பை படிக்க முதல்வர் ஸ்டாலின் உதவி செய்துள்ளார். கடிதம் மூலம் உதவிய கோரிய அந்த மாணவிக்கு, தனியார் மருத்துவ அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி., மயக்க மருந்தியல் பிரிவில் படிக்க சேர்க்கை ஆணையினை அவர் முகாம் அலுவலகத்தில் வழங்கினார். முதல்வரின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் பாராட்டு வருகின்றனர்.

News May 24, 2024

பிரஜ்வாலை வெளிநாட்டுக்கு அனுப்பியதே தேவகவுடாதான்

image

பாலியல் பலாத்கார வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா உடனடியாக இந்தியாவுக்கு திரும்பி வேண்டும் என்று தேவகவுடா எச்சரிக்கை விடுத்திருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் சித்தராமையா, “பாலியல் பலாத்கார வழக்கில் பிரஜ்வால் ரேவண்ணாவை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தே தேவகவுடா தான். கோபத்தில் மக்களிடம் அனுதாபத்தை சம்பாதிக்கவே அவர் இப்படி பேசியுள்ளார்” என்றார்.

News May 24, 2024

ஐ.சி.சி., என்றால் சர்வதேச திருடர்கள் ஆணையம்

image

ஐ.சி.சி., கவுன்சிலை சர்வதேச திருடர்கள் கவுன்சில் என்றுதான் அழைக்க வேண்டுமென ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி காட்டமாக விமர்சித்துள்ளார். தனது எக்ஸ் பதிவில், “டி20 உலகக் கோப்பைத் தொடரின் இந்தியா – பாகி., போட்டிக்கான டிக்கெட்டுகளை 20,000 டாலருக்கு விற்பனை செய்வது அதிர்ச்சி அளிக்கிறது. அமெரிக்காவில் போட்டிகளை நடத்துவது ரசிகர்களை திரட்டத்தானே ஒழிய லாபம் ஈட்ட அல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.

News May 24, 2024

தலைவலியில் இருந்து விடுபட…

image

எறும்பு போல சுறுசுறுப்பாக ஓடும் மனிதர்களை கூட எந்த வேலையையும் செய்ய முடியாத அளவுக்கு ஓரமாக உட்கார தலைவலி வைத்துவிடும். தொல்லை தரும் தலைவலியை நொடி பொழுதில் விரட்டி அடிக்கும் வீரியம் கொண்டது சுக்கு. சுக்கை நெருப்பில் சுட்டு, பொடித்து எடுத்து அதனை தேன் குழைத்து சாப்பிட்டால் தலைவலி குறையும் என மருத்துவர் சுகா கூறுகிறார். உங்களுக்கு தலைவலி ஏற்பட்டால், இந்த எளிய மருத்துவத்தை செய்து பாருங்கள்.

News May 24, 2024

வினாடிக்கு ₹2.53 லட்சம் ஈட்டிய ‘ஆல்பபெட்’

image

2023-24ஆம் நிதியாண்டின் 4ஆவது காலாண்டில், கூகுளின் தாய் நிறுவனமான ‘ஆல்பபெட்’ நிறுவனம் ஒரு வினாடிக்கு ₹2.53 லட்சத்தை வருவாயாக ஈட்டியுள்ளது. அதாவது, ஆல்பபெட் நிறுவனத்தின் நிகர வருவாய், இதே காலாண்டில், ₹1.95 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதே போல இந்நிறுவனத்தின் வருவாய் கடந்த 10 ஆண்டுகளில், 615% அதிகரித்துள்ளது. இது ஆப்பிள் & மைக்ரோசாப்ட் நிறுவனங்களைவிட முறையே 8% மற்றும் 2% அதிக வருவாயை அதிகமாகும்.

error: Content is protected !!