India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உடல்நலம் சார்ந்த அறிகுறிகளை கொண்டு அதற்குரிய நோயைக் கண்டறிய இணையத்தை நாடுபவரா நீங்கள்? அப்படியானால், உங்களுக்கு IDIOT சிண்ட்ரோம் இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இணையத்தில் இருந்து மருத்துவ தகவல்களை பெறுவது மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை அதிகரிப்பதாக கூறும் மருத்துவர்கள், இணைய தகவல்களை கொண்டு மருந்துகளை சுயமாக உட்கொள்வது விபரீதமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர்.
மலேசியா மாஸ்டர் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிச் சுற்றில், பி.வி.சிந்து அபார வெற்றி பெற்றுள்ளார். சீன வீராங்கனை ஹான்யூவிற்கு எதிரான இப்போட்டியில், சிந்து அபாரமாக விளையாடி முதல் செட்டை கைப்பற்றினார். அதன்பின், 2ஆவது செட்டில் தோல்வி அடைந்த அவர், 3ஆவது செட்டில் 21-12 என்ற புள்ளிக் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். கடந்த மாதம், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இவரிடம் சிந்து தோல்வி அடைந்தார்.
விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதி மாணவர் சேர்க்கைக்கானத் தேர்வுகள் இன்று தொடங்குகிறது. மழையால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் மறு அட்டவணை தயாரிக்கப்பட்டு மே 30ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. நீச்சல், கிரிக்கெட், ஹாக்கி, கபாடி உள்ளிட்ட விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கைத் தேர்வு குறித்த கூடுதல் விவரங்களை tntalent.sdat.in மற்றும் sdat.tn.gov.in ஆகிய இணையதளங்களில் அறியலாம்.
பசுபதிபாண்டியன் ஆதரவாளர் தீபக்ராஜா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இச்சம்பவத்தால் தென்மாவட்டங்களில் பதற்றமான சூழல் நிலவிய நிலையில், கொலை தொடர்பாக சரவணன், ஐயப்பன், தம்பன், ஐயப்பன் ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நவீன் பெயர் இடம்பெறவில்லை. இதனால், அவர் கைது செய்யப்பட்டாரா? இல்லையா? என்று கேள்வி எழுந்துள்ளது.
பஞ்சாப் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று மோடி பேசினார். அப்போது அவர், பிரிவினையின்போது சீக்கியர்களின் புனித பகுதியான கர்தார்பூர் சாஹிப் பாகிஸ்தானிடம் விடப்பட்டதால் 70 ஆண்டுகளாக அப்பகுதியை பைனாகுலரில் பார்க்கும் நிலை உள்ளதாகவும், 1970 போரின் போது தான் பிரதமராக இருந்திருந்தால், வங்கதேசப் போரில் சரணடைந்த 90,000 பாகிஸ்தான் வீரர்களை ஒப்படைத்து அப்பகுதியை கைப்பற்றியிருப்பேன் எனக் கூறினார்.
INDIA கூட்டணிக்கு மக்களின் ஆசிர்வாதம் இருப்பதாக ஆர்ஜேடி கட்சித் தலைவரும், பிஹார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான INDIA கூட்டணிக்கு தொடர்ந்து நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது என்றும், 300 தொகுதிகளுக்கும் மேல் தங்களது கூட்டணி வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருப்பூர், கோவை, தென்காசி, நெல்லை ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட், குமரி, புதுக்கோட்டை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மேற்குத் தொடர்ச்சி மாவட்டச் சுற்றுலாத் தலங்களுக்கு செல்வோர் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் 71 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் ஒவ்வொரு கல்லூரியிலும் தலா 153 பேர் வீதம், 11,000க்கும் அதிக மருத்துவக் கல்வி இடங்கள் உள்ளன. தற்போது 6 மாவட்டங்களில் புதிதாக கல்லூரிகள் தொடங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் புதிதாக 918 மருத்துவ இடங்கள் உருவாகின்றன. இதனால், இனி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 12,000 மருத்துவ மாணவர்கள் தமிழ்நாட்டில் உருவாவார்கள்.
அமெரிக்கா சென்றுள்ள வங்கதேச அணி, அந்நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் அமெரிக்கா வென்ற நிலையில், 2வது போட்டி நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த அமெரிக்கா 144 ரன்கள் எடுத்தது. பிறகு பேட் செய்த வங்கதேச அணி, 138 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, போட்டித் தொடரை அமெரிக்க அணி கைப்பற்றியது.
பெங்களூரு பண்ணை வீட்டில் நடந்த விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்திய தெலுங்கு நடிகைகள் ஹேமா, ஆஷி ராய் கர்நாடக போலீசாரால் கைது செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பண்ணை வீட்டில் பிடிபட்ட 103 பேரின் ரத்த மாதிரிகள் குற்றப்பிரிவு போலீசாரால் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில், நடிகைகள் ஹேமா, ஆஷி ராய் உள்ளிட்ட 86 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.