India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குற்றச்சாட்டுக்கு பயந்து முதல்வர் பதவியை ராஜினமா செய்தால் தவறான முன்னுதாரணமாகிவிடும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பணம் வாங்கிக் கொண்டு எந்த தவறையும் தான் செய்யவில்லை என்று கூறிய அவர், ஒருவேளை தவறு செய்திருந்தால் பாஜகவுக்கு சென்று தவறுகளை மறைத்திருக்கலாமே என்றார். எங்கெல்லாம் பாஜக தோற்கிறதோ அங்கெல்லாம் மாநில முதல்வர்களை பாஜக கைது செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தினேஷ் கார்த்திக் கிரிக்கெட்டை விட்டுக் கொடுத்ததில்லை என அவரது மனைவி தீபிகா கண்ணீர் மல்க கூறினார். போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை என்றால், அவரை அணியில் இருந்து நீக்கிவிடுவார்கள். வீட்டில் 2, 3 நாள்கள் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் பயிற்சியைத் தொடங்கி விடுவார். நானும் ஒரு விளையாட்டு வீரர் தான், ஆனால், அவரிடத்தில் நான் இருந்திருந்தால் நிச்சயம் கிரிக்கெட்டை விட்டிருப்பேன்” எனத் தெரிவித்தார்.
ஆண்டுதோறும் மே 24ஆம் தேதி உலக சகோதரர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2005ஆம் ஆண்டு அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த சி.டேனியல் ரோட்ஸ் தான், முதல்முதலாக சகோதரர்கள் தினத்தை உருவாக்கினார். இது சகோதரர்களுக்கு இடையேயான பிணைப்பை மேலும் வலுப்படுத்தவும், சிறப்பாக்கவும் உதவும். சகோதரர், சகோதரிகளைக் கடந்து, உங்கள் நண்பர்களுக்கும் சகோதரர்கள் தின வாழ்த்துக்களைத் தெரிவித்து அன்பை வெளிப்படுத்துங்கள்.
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பள்ளிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும், கழிப்பறைகள் சரியாக இருக்கிறதா, தண்ணீர் தொட்டிகள் முறையாகப் பராமரிக்கப்பட்டுள்ளதா, வகுப்பறைகள் பாடம் நடத்த ஏதுவாக இருக்கிறதா உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
துணை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. பிஎஸ்சி நர்சிங். பி.பார்ம் உள்ளிட்ட 19 வகை துணை மருத்துவப் படிப்புகளுக்கு ஜூன் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கைக்கு www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org-இல் விண்ணப்பிக்கலாம். அரசு மருத்துவக் கல்லுாரிகளில் 2,200, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் 15,000க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.
2015ஆம் ஆண்டு இதே நாளில், மும்பை அணி 2ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியது. அந்த சீசனில், தொடர் தோல்விகளை சந்தித்து வந்த MI அணி, அடுத்த 10 போட்டிகளில் 9இல் வெற்றி பெற்று அதிரடியான கம்பேக்கை கொடுத்தது. இறுதிப்போட்டியில், 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய CSK அணியை, தங்களது அசாதாரண பந்துவீச்சால் 161 ரன்களுக்குள் சுருட்டி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சுயநலக்காரர்கள், சந்தர்ப்பவாதிகளால் கட்டமைக்கப்பட்டது தான் இந்தியா கூட்டணி என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். வகுப்புவாதம், ஜாதி பெருமை, குடும்ப நலன் பேசுபவர்களாக இந்தியா கூட்டணி தலைவர்கள் உள்ளனர். குறிப்பாக இந்தியத் தாயை அவமதிக்கும் செயலை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து செய்கிறது என விமர்சித்த அவர், வலுவான இந்தியாவை கட்டமைக்க மக்களின் ஆசிர்வாதம் எனக்கு தேவைப்படுகிறது எனத் தெரிவித்தார்.
பசியோடு இருப்போருக்கு கோபம் அதிகம் வருவதை பார்த்திருப்போம். இதற்கு பல காரணங்களை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பசியோடு இருக்கையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதால், ஹார்மோன் அட்ரிலின், கார்டிசோல் சுரந்து அதை சரி செய்யும், அப்போது எரிச்சல் ஏற்படும் என அவர்கள் கூறுகின்றனர். சர்க்கரை அளவு குறைகையில் மூளை நியூரோபெப்டைட் ஒய் ரசாயனத்தை சுரப்பதாலும் கோபம் வருவதாக தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்தல் முடிவு, வெப்பம் அதிகரிப்பு காரணமாக ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான உடன் ஜூன் 6ஆம் தேதியே பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.
டி20 உலகக்கோப்பையை வெல்லும் அளவிற்கு இந்திய அணி பலமானதாக இல்லை என இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் லாயிடு விமர்சித்துள்ளார். இந்திய அணியில் தற்போது இடம் பெற்றிருக்கும் வீரர்கள் அனைவரும் தரமான வீரர்கள் என்றாலும், அவர்கள் பேட்டிங் அல்லது பந்துவீச்சில் ரிஸ்க் எடுக்க யாருமே தயாராக இல்லை எனக் கூறினார். உலகக் கோப்பைக்கான இந்திய அணியை பல முன்னாள் வீரர்கள் பாராட்டிய நிலையில், இவர் விமர்சித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.