News May 24, 2024

ஆளுநரின் பிடிவாதத்திற்கு மருந்தில்லை: அமைச்சர் ரகுபதி

image

ஆளுநர் தனது தவற்றை எப்போதும் திருத்திக்கொள்ள போவதில்லை என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். திருவள்ளுவருக்கு மீண்டும் ஆளுநர் காவி சாயம் பூசியுள்ளதாக விமர்சித்த அவர், குரங்கு கையில் பூ மாலை கிடைத்தால் அது பிய்த்து கொண்டு தான் இருக்கும். ஆளுநரின் பிடிவாதத்திற்கு எந்த மருந்துமில்லை என்று அவர் கூறினார். முன்னதாக, காவி நிறத்திலான திருவள்ளுவர் படத்தை ஆளுநர் மாளிகை வெளியிட்டிருந்தது.

News May 24, 2024

பிரதமர் மோடியிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்

image

பிரதமர் மோடியிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டதாக மண்டி தொகுதி பாஜக வேட்பாளரும், இந்தி நடிகையுமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இமாச்சலில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்கீழ் அரசியலுக்கு வந்ததை அதிர்ஷ்டமாக தாம் நினைப்பதாகவும், அவரது தலைமையில் மக்களுக்கு தாம் ஏராளமாக தொண்டாற்ற இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

News May 24, 2024

மனைவியை பிரிந்தாரா ஹர்திக் பாண்டியா?

image

ஹர்திக் பாண்டியா-நடாஷா தம்பதி பிரிந்து வாழ்வதாக வெளியான தகவல், ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்திய அணியின் ஆல்ரவுண்டரான பாண்டியா, நடாஷா என்பவரை 2020இல் மணம் முடித்தார். இந்நிலையில், பாண்டியாவுடன் எடுத்த போட்டோக்களை நடாஷா தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். மேலும், அவரது பெயரையும் நீக்கியுள்ளார். இதனால், இருவரும் பிரிந்தது உண்மையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

News May 24, 2024

‘நான்வயலன்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

image

ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் ‘நான்வயலன்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஷிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு நடித்துள்ள இப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால், இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும். மெட்ரோ, கோடியில் ஒருவன் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

News May 24, 2024

திருவள்ளுவருக்கு காவிச் சாயமா? அதிமுக எதிர்ப்பு

image

காவி நிறத்தில் திருவள்ளுவர் புகைப்படம் வெளியானதற்கு அதிமுக நிர்வாகி வைகை செல்வன் கண்டனம் தெரிவித்துள்ளார். வான்புகழ் கொண்ட வள்ளுவனுக்கு காவிச் சாயமா? என்று விமர்சித்துள்ள அவர், சாயாத சரித்திரத்தை காவி சாயம் என்ன செய்துவிட போகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுநர் மாளிகை காவி நிறத்தில் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

News May 24, 2024

முன்னாள் ஆஸி., வீரர்களை பிசிசிஐ அணுகவில்லை

image

இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு, முன்னாள் ஆஸி., வீரர்களை அணுகவில்லை என ஜெய் ஷா கூறியுள்ளார். பயிற்சியாளர் பதவியை ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லாங்கர் ஆகியோர் நிராகரித்ததாக தகவல் வெளியானது. இதற்கு விளக்கமளித்த அவர், இந்திய அணிக்கு சரியான பயிற்சியாளரைத் தேர்ந்தெடுப்பது மிக முக்கியமானது என்றும், இந்திய கிரிக்கெட் கட்டமைப்பைப் பற்றிய புரிதல் உள்ளவர்களையே நாங்கள் தேர்ந்தெடுப்போம் எனவும் தெரிவித்தார்.

News May 24, 2024

நேற்று ‘நோ பார்க்கிங்’, இன்று ‘சீட் பெல்ட்’

image

காவல்துறையினர் பேருந்துகளில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, போலீசாருக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. ‘நோ பார்க்கிங்’ பகுதியில் நிற்கும் அரசுப் பேருந்துகளுக்கு நேற்று போலீசார் அபராதம் விதித்த நிலையில், இன்று வள்ளியூரில் அரசுப் பேருந்தில் சீட் பெல்ட் அணியவில்லை எனக் கூறி 3 ஓட்டுநர்களுக்கு ₹500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News May 24, 2024

அண்ணாமலை மீண்டும் நடைபயணம்

image

தமிழகத்தில் பாஜகவை வலிமைப்படுத்த மீண்டும் பாத யாத்திரை செல்ல உள்ளதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு பாஜக தயாராக உள்ளதாகத் தெரிவித்த அவர், தற்போதே அனைத்து தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க தலைமையிடம் வலியுறுத்த உள்ளதாகக் கூறினார். மோடிக்கு ஓய்வு என்பதே இல்லை என்றும், ராகுல், கெஜ்ரிவாலை விட சிறப்பாக பணியாற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.

News May 24, 2024

WI எதிரான டி20 போட்டியில் SA அணி தோல்வி

image

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. முதலில் களமிறங்கிய WI அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் பிராண்டன் கிங் 79 ரன்கள் குவித்தார். தொடர்ந்து விளையாடிய SA அணி, 19.5 ஓவரில் 147 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. 3 போட்டி கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் WI முன்னிலையில் உள்ளது.

News May 24, 2024

கடல் அலைகள் 4 மீட்டர் வரை உயரும்

image

தமிழக கடல் பகுதிகளில் இன்று மாலை 4.1 மீட்டர் வரை அலைகள் எழும்பக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென் தமிழக கடற்பகுதியில் குளச்சல் முதல் கீழக்கரை வரையும், வட தமிழக கடற்பகுதியில் பழவேற்காடு முதல் கோடியக்கரை வரையும் மாலை 5.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை அலைகளின் உயரம் 0.6 – 4 மீட்டர் வரை இருக்கும். எனவே, தென் வங்கக்கடல், அந்தமான் பகுதிகளில் இன்று மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

error: Content is protected !!