India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஷ்மீரின் அனந்தநாக்-ரஜௌரி மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று (மே 25) நடைபெறவுள்ளது. இந்நிலையில், இத் தொகுதியில் வாக்களிக்க தகுதிபெற்றுள்ள 26,000 காஷ்மீர் பண்டிட்டுகள் தங்களது வாக்குகளைச் செலுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக புலம்பெயர்ந்த வாக்காளர்களுக்காக ஜம்மு, உதம்பூர் & டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் 34 சிறப்பு வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
டாடா, ஸ்டார் ஆகிய இரு படங்களின் வசூல் ரீதியிலான வெற்றியைத் தொடர்ந்து, வளர்ந்துவரும் இளம் நடிகர்களின் பட்டியலில் லேட்டஸ்டாக நடிகர் கவின் இணைந்துள்ளார். ‘ஸ்டார்’ படம் ₹7 கோடியை வசூலித்ததை அடுத்து, தனது சம்பளத்தை ₹5 கோடியாக கவின் உயர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அத்துடன், இனி அவரின் இரு உதவியாளர்கள் கதையைக் கேட்டு ஓகே செய்தால் மட்டுமே 3ஆவதாக கவின் கேட்பார் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
➤1607 – புனிதத் துறவி மக்தலேனா தே பாசி கார்மேல் மறைந்த நாள். ➤1837 – கியூபெக்கில் இங்கிலாந்து ஆட்சிக்கெதிராக கிளர்ச்சி வெடித்தது. ➤1940 – போலோன் துறைமுகத்தை ஜெர்மனிக் கைப்பற்றியது. ➤1977 – வில்லியம் ஷேக்ஸ்பியரின் இலக்கியங்கள் மீதான தடையை சீனா நீக்கியது. ➤1981 – ரியாத் நகரில் வளைகுடா கூட்டுறவுப் பேரவை உருவானது. ➤2008 – நாசாவின் பீனிக்ஸ் விண்ணூர்தி செவ்வாயில் தரையிறங்கியது.
இந்தியாவுக்கு அடுத்த தலைமுறை அணு எரிபொருள் மிக விரைவில் அளிக்கப்படும் என்று ரஷ்ய அணுசக்தி கழகத்தின் தலைவர் அலெக்ஸி லிகாச்சே அறிவித்துள்ளார். செர்பியாவில் இந்திய அணுசக்தி கமிஷனின் தலைவர் அஜித்குமார் மோஹான்தியை லிகாச்சே நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர், அணுசக்தியை உலக அமைதிக்காக பயன்படுத்துவதும் இந்தியாவுடனான துறைசார்ந்த ஒத்துழைப்பை விரிவுபடுத்த தயாராக ரஷ்யா இருப்பதாகக் கூறியுள்ளார்.
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலச்சரிவில் சிக்கி 100 பேர் உயிரிழந்துள்ளனர். மலைப் பாங்கான அந்த நாட்டின் தலைநகர் போர்ட் மோர்ஸ்பிக்கு 600 கி.மீ. தொலைவிலுள்ள காவ்கலாமில் நிலச்சரிவில் புதையுண்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. நிலச்சரிவில் 3,000 பேர் மாயமாகியுள்ளன நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,000-க்கும் மேல் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
RR-க்கு எதிரான போட்டியில், தான் வீசிய 4 ஓவரில் 24 ரன்கள் மட்டும் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுக்களை எடுத்த அபிஷேக் ஷர்மா SRH அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார். SRH அணியின் வெற்றி குறித்து பேசிய அவர், ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாட வேண்டும் என்பது எனது கனவுகளில் ஒன்றாகும். அது நிறைவேற உள்ளது. பயிற்சியில் கற்ற அனைத்தையும் களத்தில் செயல்படுத்த வாய்ப்பளித்த கம்மின்ஸுக்கு நன்றி என்றார்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: வான்சிறப்பு ▶ எண்: 13
▶குறள்:
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
▶பொருள்:
நான்கு புறமும் கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், உரிய காலத்தில் மழைநீர் பொய்த்து விட்டால், பசியின் கொடுமை நிலைத்து நின்று, பல்லுயிர்களை வாட்டி வதைக்கும்.
இவிஎம் பதிவுகளை 2-3 ஆண்டுகள் பாதுகாக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் பேசிய அவர், “வாக்கு எண்ணிக்கை முடிவதற்குள், வாக்குகள் எப்படி பதிவானது என்பதை மக்களுக்கு தெரிவிப்பதில் தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டக்கூடாது. வாக்குகள் எண்ணும் முன் அனைத்து கட்டங்களின் பதிவுகளையும் பகிரங்கப்படுத்த வேண்டும்” என்றார்.
‘அனிமல்’ படத்துக்குப் பின்னர் நாடறிந்த நடிகையாகிவிட்ட ரஷ்மிகா மந்தானா தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு ராஷ்மிகா மும்பை அடல் சேது கடல் பாலத்தில் பயணம் செய்து வியந்த அனுபவத்தை வீடியோவில் பகிர்ந்திருந்தார். அதுதான் இப்போது அவருக்கு தலைவலியாக மாறி இருக்கிறது. ஐ.டி சோதனையில் இருந்து தப்பிக்க பாஜகவை காக்கா பிடிக்கிறீர்களா என்று நெட்டிசன்கள் விமர்சிகின்றனர்.
RR-க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் Qualifier 2 போட்டியில், 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து, RR அணி ப்ளே-ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது. லீக் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த RR அணி, கடைசி 2 போட்டிகளில் வெற்றி பெற்று ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட RR அணி, இம்முறையும் கோப்பையை வெல்ல முடியாமல் போனது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.