News May 25, 2024

கேரளாவில் H5N1 தொற்று உறுதி

image

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் அரசு கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக மண்ணார்காடு அரசு கோழிப்பண்ணையில் உள்ள 9,000 கோழிகளை அழிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான கோழிகள் திடீரென இறந்ததை அடுத்து போபால் தேசிய ஆய்வகத்துக்கு மாதிரி அனுப்பப்பட்டது. ஆய்வக முடிவில் கோழிகளுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News May 25, 2024

திருப்புமுனையை ஏற்படுத்திய SRH பவுலிங்

image

RR-க்கு எதிரான Qualifier 2 போட்டியில், SRH பவுலர்கள் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினர். RR அணி அதிரடியான தொடக்கத்தை கொடுத்த போது, SRH பவுலர்கள் அபாரமாக பந்துவீசி மிடில் ஓவர்களில் ரன் எடுக்க விடாமல் தடுத்தனர். ஷாபாஸ், அபிஷேக் தலா 4 ஓவர்கள் வீசி 3/23, 2/24 விக்கெட்டுகளும், நடராஜன் 3 ஓவர்கள் பந்துவீசி 1/13 விக்கெட்டும் கைப்பற்றினர். இதனால், SRH அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

News May 25, 2024

குரூப் 2, 2A தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்

image

அரசுப் பணிகளுக்கான குரூப் 2, 2A தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-2, தேர்வு 2Aக்கு தனித்தனியே முதன்மைத் தேர்வு நடத்தப்படும். தேர்வு2-ன் முதன்மை எழுத்துத்தேர்வுக்கான மாற்றப்பட்ட மற்றும் தேர்வு 2A-ன் புதிய பாடத்திட்டம் <>https://www.tnpsc.gov.in/English/<<>>syllabus.html என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News May 25, 2024

இன்னும் 57 தொகுதிகளில் மட்டுமே தேர்தல்

image

மக்களவையில் உள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் 8 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு இன்று 6ஆவது கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. இத்துடன் சேர்த்து மொத்தம் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நிறைவு பெறுகிறது. இன்னும் 57 மக்களவைத் தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. இங்கு ஜுன் மாதம் 1ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

News May 25, 2024

விசிக, காங்கிரசை கூட்டணியில் சேர்க்க அதிமுக வியூகம்

image

மக்களவைத் தேர்தலின்போதே அதிமுக கூட்டணியில் விசிகவை சேர்க்க முயற்சி நடந்தது. ஆனால், அது கைகூடவில்லை. இருப்பினும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் விசிகவை தனது அணிக்கு கொண்டு வரும் முயற்சியை அதிமுக இப்போதே தொடங்கி விட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல், பிரசாந்த் கிஷோரை திமுக மேலிடம் சந்தித்ததால் அதிருப்தியில் உள்ள காங்கிரசிடமும் ராகுலுக்கு நெருக்கமான ஒருவர் மூலம் பேசி வருவதாக சொல்லப்படுகிறது.

News May 25, 2024

கோப்பையைக் கைப்பற்றுவாரா பேட் கம்மின்ஸ்?

image

RR-க்கு எதிரான Qualifier 2 போட்டியில் வெற்றி பெற்று, SRH அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆஸி,. வீரர் பேட் கம்மின்ஸ், டி20 கேப்டனாக பொறுப்பேற்ற முதல் சீசனிலேயே தனது அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆடம் கில்கிறிஸ்ட், டேவிட் வார்னர் தலைமையிலான SRH அணி, 2 முறை (2009, 2016) ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியுள்ளதால், 3ஆவது முறையும் கோப்பையை கைப்பற்றுமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

News May 25, 2024

நாளை ரேஷன் கடைகள் திறந்திருக்கும்

image

சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருட்களின் இயக்கத்தினை உரிய காலக்கெடுவிற்குள் முடித்திடும் பொருட்டு நாளை அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என நுகர்பொருள் வாணிபக் கழகம் அறிவித்துள்ளது. மாதத்தின் முதல் 2 ஞாயிற்றுக்கிழமை தவிர, மீதமுள்ள ஞாயிற்றுகிழமைகள் விடுமுறை அளிக்கப்படும். ஆனால், நாளை பணி நாளாக இருக்கும் என்பதால், இதற்கு ஈடாக மற்றொரு நாளில் விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News May 25, 2024

தொடங்கியது 6ஆவது கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு

image

6ஆவது கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. டெல்லி, ஹரியானா உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு சரியாக காலை 7 மணிக்குத் தொடங்கியது. இதையொட்டி, காலையிலேயே வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடைமையை நிறைவேற்றி வருகின்றனர். தேர்தல் அமைதியாக நடைபெற பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

News May 25, 2024

நிலம் மனைப் பிரச்னைகளைப் போக்கும் ஆதிவராகர்

image

பூமாதேவியை இம்சித்த இரண்யாட்சனை சம்ஹாரம் செய்து, காத்த வராகரை வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. சனிக்கிழமையன்று விரதமிருந்து, வராகர் அவதரித்த திருத்தலமாகப் போற்றப்படும் திண்டிவனம் அருகே உள்ள பெரமண்டூர் ஆதிவராகர் கோயிலுக்கு சென்று, நெய் தீபமேற்றி, வராக மூலமந்திரத்தை 108 முறை பாடி, துளசி மாலை சாற்றி வழிபாட்டால் நிலம் தொடர்பான பிரச்னைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

News May 25, 2024

தமிழகத்தில் 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெற்கு கேரளா, அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதனால் இன்று முதல் 30ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

error: Content is protected !!