India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடு முழுவதும் 58 தொகுதிகளுக்கு நடைபெற்ற 6ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மதியம் 3 மணி வரை 50% அளவுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இறுதி வாக்குப்பதிவு நிலவரம் இன்று அல்லது நாளை வெளியாக வாய்ப்புள்ளது. இதுவரை நாடு முழுவதும் 486 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இன்னும் 57 தொகுதிகளுக்கு வரும் ஜூன் 1இல் தேர்தல் நடைபெற உள்ளது.
கடந்த சில தினங்களாக அரசுப் பேருந்துகள் மீது விதிக்கப்பட்ட அபராதத்தை திரும்பப் பெறுவதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் சீட் பெல்ட் அணியவில்லை, நோ பார்க்கிங்கில் பேருந்தை நிறுத்தியது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டதாக காவல்துறை அபராதம் விதித்தது. இந்நிலையில்,
இரு துறைகளின் செயலாளர்களும் இன்று பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இவ்விவகாரம் முடிவுக்கு வந்தது.
முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேச வேண்டும் என பிரதமரை மறைமுகமாக சரத் பவார் விமர்சித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சி காலம் குறித்த மோடியின் பேச்சுகள் வேதனை தருகிறது என்று கூறிய அவர், பிரதமர் பதவியின் மாண்பை தேவையற்ற பேச்சுக்களின் மூலம் யாரும் குலைக்க கூடாது என்றார். முன்னதாக, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியா மீது பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தியதாக மோடி கூறியிருந்தார்.
தனிநபர் கடன் வாங்கினால், வருமான வரி விலக்கு கோர முடியாது. ஆனால், வருமான வரிச் சட்டப்பிரிவு 24B படி வீட்டை மறுசீரமைப்பு செய்ய தனிநபர் கடன் வாங்கினால், அதற்கு வருமான வரி விலக்கு கிடைக்கும். ஒரு நிதியாண்டில் ₹30000 வரை, கடனுக்காக செலுத்திய வட்டித் தொகையில் வருமான வரி விலக்கு கோரலாம். இதேபோல, வெளிநாட்டில் படிக்க தனிநபர் கடன் வாங்கினாலும், நாம் செலுத்தும் மொத்த வட்டி தொகைக்கும் வரி விலக்கு கிடைக்கும்.
தனது தவறான ஆட்டம் காரணமாகவே இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெற முடியவில்லை என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். நேற்றைய போட்டியில் தவறான ஷாட்டை அவர் தேர்வு செய்ததே ராஜஸ்தான் தோல்விக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்த அவர், உலகக் கோப்பை டி20 போட்டியில் தனது வாய்ப்பை 2 கைகளாலும் அவர் கைப்பற்றி தனது இடத்தை உறுதிபடுத்தி கொள்வார் என்றார். நேற்றைய போட்டியில் 10 ரன்களில் சஞ்சு சாம்சன் அவுட் ஆனார்.
போக்குவரத்து காவல்துறை-அரசுப் போக்குவரத்துக் கழகம் இடையிலான பனிப்போர் முடிவுக்கு வந்தது மக்களை நிம்மதி அடையச் செய்துள்ளது. காவலரிடம், நடத்துனர் டிக்கெட் கேட்ட விவகாரம் சர்ச்சையானதால், ஆங்காங்கே விதிகளை மீறியதாக அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் மக்கள் கடும் சிரமங்களை சந்தித்த நிலையில், சம்பந்தப்பட்ட காவலரும், நடத்துனரும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்டதால் பிரச்னை முடிவுக்கு வந்தது.
INDIA கூட்டணி ஆட்சி அமைத்தால் 3 மாதங்களில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ராமர் கோயிலை இடிக்கும் என்று பொய் பரப்புரைகளை மோடி கூறி வருவதாக தெரிவித்த அவர், அனைத்து மதங்களையும் சமமாக நினைக்கும் ஒரே கட்சி காங்கிரஸ் என்றார். பாஜக 200 இடங்களை தாண்டாது என்ற அவர், காங்கிரஸ் கூட்டணி 300 இடங்களை பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சாதி குறித்த தன்னுடைய நிலைப்பாட்டில் அம்பேத்கர் தெளிவாகவும், கடுமையாகவும் இருந்ததாக நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில் தனக்கு வரலாற்றில் அதிக ஆர்வம் இருப்பதாக தெரிவித்த ஜான்வியிடம், நெறியாளர் வரலாற்றில் எந்த காலகட்டத்திற்கு செல்ல விரும்புகிறார்கள்? என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு பதிலளித்த ஜான்வி, அம்பேத்கரும், காந்தியும் விவாதிப்பதை பார்க்க ஆசைப்படுவதாக தெரிவித்தார்.
கேரளாவில் கூகுள் மேப் பார்த்து ஓட்டிச் செல்லப்பட்ட கார், ஆற்றுக்குள் மூழ்கியது. ஹைதராபாத்தில் இருந்து ஒரு பெண் உட்பட 4 பேர் கேரளாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். ஆலப்புழா நோக்கி சென்றபோது கனமழை காரணமாக அவர்கள் பயணித்த சாலை நீரால் சூழப்பட்டிருந்தது. எனினும், கூகுள் மேப்பை நம்பி அவர்கள் பயணத்தை தொடரவே, வழி மாறி சென்ற கார் ஆற்றுக்குள் மூழ்கியது. இதில், அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்தவர்கள் உயிர் தப்பினர்.
ஹைதராபாத் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு டேனியல் வெட்டோரியின் ஆலோசனை மிகவும் உதவியதாக அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். நேற்றைய போட்டியில் ஷாபாஸ் அஹ்மதை இம்பேக்ட் வீரராக களமிறக்க வேண்டும் என்று வெட்டோரி கூறியதாக தெரிவித்த அவர், அந்த முயற்சி வெற்றிக்கு நன்கு உதவியதாகவும் தெரிவித்தார். இறுதிப்போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி கோப்பையை வெல்வோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.