India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடு முழுவதும் இதுவரை 6 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் முடிந்துள்ளது. இந்த நிலையில், 5 கட்ட தேர்தலில் பதிவான வாக்குகளின் முழு விவரங்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, மொத்த வாக்காளர்கள், பதிவான வாக்குகளின் எண்ணிகை உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. முன்னதாக, வாக்குப் பதிவு விவரங்களை முழுமையாக வெளியிடவில்லை என தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணி நாளை விளையாட உள்ள நிலையில், அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன், X ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளார். நேற்று இரவு முதலே ஹைதராபாத், கொல்கத்தா அணிகளை மையப்படுத்தி செய்திகள் வைரலாக தொடங்கிய நிலையில், தற்போது காவ்யாவும் இணைந்துள்ளார். வெற்றியை மிகுந்த ஆரவாரமாக கொண்டாடும் காவ்யாவுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா?
டெல்லியில் காங்., ஆம் ஆத்மி கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில், இன்று வாக்குப்பதிவு நடந்தது. இதில், ராகுல், சோனியா காந்தி வசிக்கும் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் போட்டியிடுகிறார். இதனால், சோனியா குடும்பத்தினர் முதல்முறையாக ஆம் ஆத்மியின் துடைப்பம் சின்னத்திற்கு வாக்களித்தனர். இதேபோல், கெஜ்ரிவால் வசிக்கும் தொகுதியில் காங்., வேட்பாளர் போட்டியிடுவதால், அவரும் காங்., சின்னத்திற்கு வாக்களித்தார்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, குமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விடுமுறைக்கு சிம்லா சென்ற ராகுல், இதுவரை ராமர் கோயிலுக்கு செல்லவில்லை என அமித் ஷா விமர்சித்துள்ளார். இந்த தேர்தல், 6 மாதத்திற்கு ஒருமுறை விடுமுறை எடுக்கும் ராகுலுக்கும், 23 ஆண்டுகளாக விடுமுறை எடுக்காமல் தீபாவளியை ராணுவத்தினருடன் கொண்டாடும் மோடிக்கும் இடையேயானது என்ற அவர், இந்த தேர்தலில் ராகுலுக்கு 40 இடம் கூட கிடைக்காது என்றார். ராகுல், வாக்கு வங்கிக்காக ராமரை புறக்கணிப்பதாகவும் அவர் கூறினார்.
2023ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவைச் சேர்ந்த தொடர்கள், திரைப்படங்கள் Netflix-இல் 100 கோடி பார்வைகளை பெற்றுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள சந்தாதாரர்கள் Netflix-ஐ 9000 கோடி மணி நேரம் (90 billion) பார்வையிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ‘ஜானே ஜான்’ (20.2M) முதலிடத்திலும், ‘ஜவான்’ (16.2M) 2ஆவது இடத்திலும் உள்ளன.
ஐபிஎல் கோப்பையுடன் KKR – SRH அணி கேப்டன்கள் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பேட் கம்மின்ஸ் இருப்பது போன்ற போட்டோ ஷூட் சென்னை மெரினா கடற்கரையில் நடந்தது. இதில், படகில் கோப்பைக்கு இடையே அவர்கள் அமர்ந்திருப்பது போலவும், ஆட்டோவில் அமர்ந்திருப்பது போலவும் எடுத்த புகைப்படங்களை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. நாளை இரவு இறுதிப்போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஜம்மு & காஷ்மீரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நம்பிக்கை அளிப்பதாக தெரிவித்த அவர், காஷ்மீர் மக்களே அவர்களுக்கான அரசை தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் என்றார். காஷ்மீரில் 2018 முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. 6 மாதங்களுக்கு ஒரு முறை அது புதுபிக்கப்பட்டு வருகிறது.
சீன விஞ்ஞானிகள் புதிதாக உருவாக்கியுள்ள வைரஸால், 3 நாள்களில் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹெபேய் மருத்துவப் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் சிலர், ‘எபோலா’ வைரஸைப் போன்ற புதிய வகையிலான வைரஸை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து நடந்த சோதனையில், இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் பட்சத்தில் 3 நாள்கள் உயிரிழப்பு ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் அவரது 26வது படத்திற்கு ‘வா வாத்தியார்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்தில், கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியும், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
Sorry, no posts matched your criteria.