News May 26, 2024

எல்லா மதத்தையும் சமமாக மதித்தவர் ஜெயலலிதா

image

ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என அண்ணாமலை கூறியதற்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்து தத்துவத்தை மட்டும் ஆதரித்தாக கூறி ஜெயலலிதாவிற்கு களங்கம் ஏற்படுத்திய அண்ணாமலையை கண்டிக்கிறோம் என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். ஜெயலலிதா எல்லா மதத்தையும் சமமாக மதித்தவர், சொந்த பணத்தில் இஃப்தார், கிறிஸ்தவ விழாவை நடத்தியவர் வேண்டும் கூறியுள்ளார்.

News May 26, 2024

அஜித்தின் அடுத்த பட இயக்குநர் இவரா?

image

மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்துவருகிறார் அஜித். இதில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டிருந்தாலும், விரைவில் மீண்டும் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த இரு படங்களையும் முடித்துவிட்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் அஜித் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News May 26, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மே 26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News May 26, 2024

வாக்களித்த அனைவருக்கும் நன்றி

image

டெல்லி, பிஹார் உள்ளிட்ட 6 மாநிலங்களின் 58 தொகுதிகளில் நேற்று நடைபெற்ற 6ஆம் கட்ட தேர்தலில் 59% வாக்குகள் பதிவானது. இந்நிலையில், இத்தேர்தலில் வாக்களித்த மக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். NDA கூட்டணியின் எண்ணிக்கை சிறப்பாக உள்ளதாகத் தெரிவித்த அவர், INDIA கூட்டணி ஆட்சிக்கு அருகில் வராததால், அதற்கு வாக்களிப்பது வீண் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் என X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

News May 26, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மே 26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News May 26, 2024

6 விக்கெட்டுகளை வீழ்த்திய முஸ்தஃபிசுர்

image

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டியில் USA வெற்றிபெற்ற நிலையில், நேற்று நடைபெற்ற 3ஆவது போட்டியில் வ.தேசம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதில் சிறப்பாக பந்துவீசிய வ.தேச அணி வீரர் முஸ்தஃபிசுர் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

News May 26, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மே 26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News May 26, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

* 58 தொகுதிகளில் இன்று நடைபெற்ற 6ஆம் கட்ட தேர்தலில் 59% வாக்குகள் பதிவாகியுள்ளது.
* சிறப்பு ஆசிரியர்களுக்கான மதிப்பூதியத்தை உயர்த்தி தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டது.
* குஜராத்தில் கேமிங் சென்டர் ஒன்றில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.
* அரசுப் பேருந்துகள் மீது விதிக்கப்பட்ட அபராதத்தை திரும்பப் பெறுவதாக தமிழக காவல்துறை அறிவித்தது.

News May 26, 2024

ஒருநாளைக்கு எவ்வளவு சக்கரை பயன்படுத்தலாம்?

image

சுவையூட்டியான சர்க்கரை நம்முடைய அன்றாட டயட்டில் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்றாகும். டீ, ஜூஸ், இனிப்புகள் என எந்தவொரு உணவிலும் சுவையை அதிகப்படுத்த நாம் சர்க்கரையை பயன்படுத்தி வருகிறோம். இது நம் மனதிற்கு இதமான உணர்வை கொடுத்தாலும், இதை அளவாக உண்ணாவிட்டால் உடலுக்கு பலவிதங்களில் கேடு விளைவிக்கும். குறிப்பாக, தினமும் 20 முதல் 25 கிராம் அளவிற்கு சர்க்கரை சாப்பிடுவது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

News May 26, 2024

டி20: பாக்., அணிக்கு எதிராக இங்கிலாந்து அபார வெற்றி

image

இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 183 ரன்களை குவித்துள்ளது. அந்த அணியின் பட்லர் அதிரடியாக ஆடி 51 பந்தில் 84 ரன்களை குவித்தார். தொடர்ந்து விளையாடி பாகிஸ்தான், 160 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. ஃபகார் ஜமான் அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார். இரு அணிகளுக்குமான முதல் போட்டி மழையால் தடை பட்டது.

error: Content is protected !!