News May 26, 2024

ஜியோ சினிமா இனி ₹299 மட்டுமே

image

ஜியோ சினிமா OTT தளத்துக்கான ஓராண்டு சந்தா ₹999ஆக இருந்து வந்தது. இதனால் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துவந்த நிலையில், அதற்கு பதிலாக சில புதிய திட்டங்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆண்டுக்கு ₹299 சந்தா முறை ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், இத்திட்டத்தின் கீழ் ஒரு திரையில் மட்டுமே ஜியோ சினிமாவை காண முடியும்.

News May 26, 2024

திருவள்ளுவருக்கு மதசாயம் பூசுவது சரியா?

image

திருவள்ளுவரின் சிலைக்கு காவி துணி அணிவிப்பதும், காவி உடையில் திருவள்ளுவர் இருப்பது போன்ற படத்தை அச்சிட்டு விநியோகிக்கும் செயலிலும் பாஜகவினர் அண்மைகாலமாக தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஆளுநர் மாளிகை அழைப்பிதழிலும் இதே நிலையே காணப்பட்டது. திருக்குறளில் எங்கும் திருவள்ளுவர் மதத்தை வெளிப்படுத்தாத நிலையில், அவருக்கு மதசாயம் பூசுவது சரியா என நடுநிலையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

News May 26, 2024

துணை இயக்குநர்களுக்கு பரிசளித்த சிவகார்த்திகேயன்

image

‘அமரன்’ படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி, படத்தில் பணியாற்றிய அனைத்து துணை இயக்குநர்களுக்கும் சிவகார்த்திகேயன் பரிசளித்துள்ளார். முன்னதாக, படக்குழுவுக்கு பிரியாணி விருந்து அளித்த அவர், நேற்று விலையுயர்ந்த ‘ஃபாசில்’ வாட்சை பரிசாக வழங்கியுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படம், வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்றும், விரைவில் படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

News May 26, 2024

‘கங்குவா’ காட்சிகளை பார்த்த அஜித்

image

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் சில காட்சிகளை, நடிகர் அஜித் பார்வையிட்டதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. காட்சிகளை பார்த்த அவர் பிரமித்து போனதாகவும், இயக்குநர் சிறுத்தை சிவாவை பாராட்டியதோடு விரைவில் அவருடன் இணைந்தது படம் பண்ண உள்ளதாகவும் கூறப்படுகிறது. கங்குவா படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதோடு, தீபாவளி அன்று படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

News May 26, 2024

ஜெயலலிதா இந்துத்துவா தலைவரா?

image

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்று அண்ணாமலை பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா ஆன்மிகவாதிதான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இந்துத்துவா ஆதரவாளரா என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறி. ஏனெனில், காஞ்சி சங்கராச்சாரியாரை எந்தவித தயக்கமும் இல்லாமல் கைது செய்தவர் ஜெயலலிதா. ஒரு இந்துத்துவா தலைவர் இதனை செய்திருப்பாரா என்று யோசிக்க வேண்டும்.

News May 26, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் முற்பகல் 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

News May 26, 2024

ஜெயலலிதாவின் வாக்கு வங்கிக்கு அண்ணாமலை குறி?

image

தேர்தலில் பாஜக தனிக் கூட்டணி அமைத்து பாேட்டியிட்டது. எனினும், பிரசாரத்தின்போது ஜெயலலிதா பெயரை பல இடங்களில் அண்ணாமலை பயன்படுத்தினார். அண்மையில் பேட்டி ஒன்றில் ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என அவர் கூறினார். தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு இன்னும் பெண்கள் மத்தியில் தனி செல்வாக்கு உள்ளது. அந்த வாக்குகளை அண்ணாமலை குறிவைக்கிறாரா என அரசியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

News May 26, 2024

IPL: அதிக முறை இறுதிப்போட்டி வரை முன்னேறி தோற்ற அணி

image

2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில், 2008 முதல் இதுவரை இறுதிப்போட்டி வரை அதிக முறை முன்னேறி தோல்வியடைந்த அணி எது என்பதை தெரிந்து கொள்வோம். 2008ஆம் ஆண்டில் சென்னை அணி இறுதிப் போட்டியில் ராஜஸ்தானிடம் தோற்றது. இதற்கடுத்து, 2012, 2013, 2015, 2019ஆம் ஆண்டு என 5 முறை சிஎஸ்கே இறுதிப் போட்டி வரை வந்துள்ளது.

News May 26, 2024

புனே விபத்து விவகாரத்தில் தாத்தா கைது

image

புனேவில் மதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய 17 வயது சிறுவனின் தாத்தாவும் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து ஏற்படுத்தியது நான்தான் என்று டிரைவர் நேற்று ஆஜரான நிலையில் அவரை மிரட்டி ஒத்துக் கொள்ள வைத்ததாக சிறுவனின் தாத்தா கஜேந்திர அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். செல்ஃபோனை பறித்து வைத்துக் கொண்டு வெளியே விடாமல் மிரட்டியதாக டிரைவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

News May 26, 2024

IPL: அதிக முறை சாம்பியன் கோப்பை வென்ற அணிகள்

image

ஐபிஎல் டி20 தொடர் 2008 முதல் நடைபெறுகிறது. இதில் தோனி தலைமையில் சிஎஸ்கே அணி, 2010, 2011, 2018, 2021, 2023ஆம் ஆண்டு என 5 முறை சாம்பியன் கோப்பைகளை வென்றுள்ளது. இதேபோல் ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2017, 2019, 2020ஆம் ஆண்டு என 5 முறை சாம்பியன் கோப்பையை கைப்பற்றியுள்ளது. அதாவது, ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே, மும்பை அணிகளே அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.

error: Content is protected !!