India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட், உலகம் முழுவதும் உள்ள உளவாளிகளைக் கொண்டு பிற நாடுகளிலுள்ள தனது எதிரிகளை களையெடுப்பதாக கூறப்படுவதுண்டு. முனிச் தாக்குதலில் ஈடுபட்ட பாலஸ்தீன தீவிரவாதிகள் பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து கொல்லப்பட்டது உள்ளிட்டவை இதற்கு உதாரணமாகக் கூறப்படுகிறது. அதேபோன்று தற்போது இந்தியாவின் “ரா” உளவு அமைப்பும் மாறிவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தொடர் மழை காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தக்காளியின் வரத்து அளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக, கடந்த வாரம் கிலோ ₹40க்கு விற்கப்பட்ட தக்காளி, இன்று ₹60க்கு விற்கப்படுகிறது. அதேபோல, காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மழையின் தீவிரம் குறைந்தாலும் பல பயிர்கள் அழிந்துவிட்டதால், காய்கறிகளின் விலை குறைய நாளாகும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.
சுதா கொங்கரா இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்குமார் பெரியசாமியின் அமரன் படத்தைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இணையவுள்ளார். சூர்யாவின் ‘புறநானூறு’ படம் தொடங்குவதற்கு தாமதமாவதால், அதற்கிடையில் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு ஆக்ஷன் படம் இயக்க சுதா கொங்கரா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
KKR-SRH இடையேயான ஐபிஎல் இறுதிப்போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. பலம் வாய்ந்த இரு அணிகள் மோதவுள்ளதால், எந்த அணி கோப்பையை கைப்பற்றப்போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில், KKR வீரர் சுனில் நரைன் இன்று தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி வரும் அவர், இன்று அணிக்கு கோப்பையை பெற்றுத் தருவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜூன் 6ஆம் தேதி தமிழகம் முழுவதும் பள்ளிகள் தொடங்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூன் 17ஆம் தேதி பக்ரித்-ஐ முன்னிட்டு அரசு விடுமுறை வருவதால் மாணவர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஜூன் 17ஆம் தேதி திங்கட்கிழமை என்பதால் சனி, ஞாயிறு, திங்கள் என்று மூன்று நாட்கள் தொடர் விடுமுறை. அதற்குப்பின், ஜூன் மாதத்தில் எந்த ஒரு அரசு விடுமுறையும் இல்லை.
தொலைதூர ரயில் பெட்டிகளின் ஜன்னல் மீது வெள்ளை, மஞ்சள், பச்சை நிற கோடுகள் இருப்பதை பார்த்திருப்போம். அது ஏன் தற்போது தெரிந்து கொள்வோம். வெள்ளை நிற கோடு இருப்பின், அது முன்பதிவு இல்லாதோர் பயணிக்கும் பெட்டி என அர்த்தம் ஆகும். மஞ்சள் நிற கோடு இருப்பின், மாற்றுத்திறனாளி, நோயாளிகளுக்கான சிறப்பு பெட்டி என்று அர்த்தம். பச்சை, கிரே நிற கோடுகள் இருப்பின் மகளிர் சிறப்பு பெட்டி என பொருள்படும்.
எப்படி நியூட்ரலாக இருக்க வேண்டும் என்பதை தோனியிடம் இருந்து கற்றுக் கொண்டதாக CSK கேப்டன் ருதுராஜ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், போட்டியின் போது எதற்கும் அதிகமாக உற்சாகமடையக் கூடாது என்றும், எந்தவொரு விஷயத்திற்காகவும் சட்டென்று மனம் தளரக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், கிரிக்கெட்டை பொறுத்தவரை அப்படி இருப்பது தான் சரியான அணுகுமுறை எனக் குறிப்பிட்டார்.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ஜுன் 3ஆம் தேதி கலைஞர் கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டுமென்றும், அதற்கடுத்த நாள் நடைபெறும் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் வெற்றிக் கொடியை நாட்டி, INDIA கூட்டணியின் வெற்றியை கலைஞருக்கு காணிக்கையாக்குவோம் என்றும் கட்சித் தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் தாய்ப் பாலை விற்பனை செய்வதற்கு எந்தவித அனுமதியும் இல்லை என்று FSSAI தெரிவித்துள்ளது. இதுபோன்று, தாய்ப்பாலை வணிகமாக்கும் எந்தவொரு செயலுக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கு தானம் செய்யப்பட்ட தாய்ப்பாலை வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை.
பொன்ராம் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் கவின் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் 2ஆம் பாகமாக கூட இருக்கலாம் என்றும், முதல் பாகத்தில் சிவகார்த்திகேயன் நடித்த நிலையில், 2ஆம் பாகத்தில் கவினை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. குடும்பங்கள் கொண்டாடும் காமெடி படமாக இப்படம் உருவாகவாகவுள்ளதாகத் தெரிகிறது.
Sorry, no posts matched your criteria.