News May 26, 2024

வானில் நடைபெறவிருக்கும் அதிசயம்

image

ஜூன் 3ஆம் தேதி மற்றும் ஜூன் 4ஆம் தேதிக்கு இடையே வானில் 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரவிருக்கும் அதிசயம் நிகழவுள்ளது. வெள்ளிக் கோளைத் தவிர மற்ற அனைத்தையும் ஒரே நேர் கோட்டில் வானில் பார்க்கலாம். 6 கோள்கள் ஒரே நேரத்தில் வானில் தோன்றுவது இயல்புதான். ஆனால், அவை ஒரே நேர் கோட்டில் தோன்றுவது அதிசயமாக பார்க்கப்படுகிறது. இவற்றைப் பார்ப்பதற்கு தொலைநோக்கி அவசியமாகும்.

News May 26, 2024

18 வருடங்களை நிறைவு செய்த ‘புதுப்பேட்டை’

image

தனுஷ் நடித்த ‘புதுப்பேட்டை’ திரைப்படம், இன்றுடன் 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான இப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. பிழைப்பிற்காக ரவுடியாக மாறுவதைப் பற்றிப் பேசும் இப்படத்தின் பின்னணி இசை, பாடல்கள் பட்டையைக் கிளப்பி இருக்கும். குறிப்பாக, ‘ஒரு நாளில்’ பாடல், இப்போதும் ரசிகர்களின் ஃபேவரைட். உங்களுக்கு இந்தப் படம் பிடிக்குமா?

News May 26, 2024

ஜுன் 3ஆம் தேதி “கலைஞர் 100” வரியுடன் கோலம்

image

திமுக தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கருணாநிதி பிறந்தநாளான ஜுன் 3ஆம் தேதி திமுகவினர் தங்களது வீடு முன்பு “கலைஞர் 100” என்ற வரியுடன் கோலமிட்டு அவரின் பிறந்த நாளை கொண்டாட வேண்டும், உள்ளூர் மைதானங்களில் பெண்கள், இளைஞர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி ஊக்குவிக்க வேண்டுமென ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

News May 26, 2024

IPL: வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசு தெரியுமா?

image

KKR-SRH இடையேயான ஐபிஎல் இறுதிப்போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணிக்கு, இந்திய மதிப்பின்படி ₹20 கோடி, தோல்வியடையும் அணிக்கு ₹13 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும். அதுமட்டுமின்றி, தொடரில் 3ஆவதாக இடம்பிடித்த ராஜஸ்தான் அணிக்கு ₹7 கோடியும், 4ஆவதாக இடம்பிடித்த பெங்களூரு அணிக்கு ₹6.5 கோடியும் வழங்கப்படும். இம்முறை கோப்பையை வெல்லப் போவது யார்?

News May 26, 2024

குழந்தைகள் மரணத்துக்கு பிரதமர் இரங்கல்

image

டெல்லி மருத்துவமனை தீ விபத்தில் 7 பிஞ்சுக் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தன. இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடைய X பதிவில், “டெல்லி மருத்துவமனை தீ விபத்து நெஞ்சை உலுக்குகிறது. இந்த இக்கட்டான சூழலில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தை எண்ணி வருந்துகிறேன். காயமடைந்தவர்கள் உடனடியாக குணமடையவும் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

News May 26, 2024

மின் இணைப்பு துண்டிப்பு: முன்கூட்டி தெரிவிக்க வேண்டும்

image

அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா ஆட்சியில் அளிக்கப்பட்டது போல 100 யூனிட் விலையில்லா மின்சாரம், ஏழை, எளிய, நடுத்தர வாடகைதாரர்களுக்கும் தொடர்ந்து கிடைத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கட்டணம் செலுத்தாதோரின் மின் இணைப்பை துண்டிக்கும் முன்பு அவர்களுக்கு தகவல் தெரிவித்து, கட்டணத்தைச் செலுத்த அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.

News May 26, 2024

OnThisDay: முதல் ஐபிஎல் கோப்பையை வென்ற MI

image

2013ஆம் ஆண்டு இதே நாளில், CSK-வை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி முதல் ஐபிஎல் கோப்பையை வென்றது. முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில், 148/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பொல்லார்ட் 60*(32) ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய சென்னை அணி, விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தோனி 63*(45) அதிரடியாக விளையாடியும் இலக்கை எட்ட முடியாததால், 23 ரன்கள் வித்தியாசத்தில் CSK தோல்வி அடைந்தது.

News May 26, 2024

தமிழக நீதித்துறையில் காலிப் பணியிடங்கள்

image

தமிழ்நாடு சார்நிலை நீதித்துறையில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாகும். இதில், ஓட்டுநர், அலுவலக உதவியாளர், தூய்மைப் பணியாளர், காவலர், நகல் பிரிவு உதவியாளர், இளநிலை & முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர், மசால்ஜி உள்ளிட்ட 2,311 பணிகள் நிரப்பப்படவுள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் <>www.mhc.tn.gov.in<<>> என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

News May 26, 2024

இஸ்ரேலின் மொசாட் போல மாறி விட்டதா ரா? (3/3)

image

கனடா, அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகியவை ரா அமைப்பு மீது தெரிவித்த குற்றச்சாட்டுகளை இந்திய அரசு நிராகரித்து விட்டது. அதேநேரத்தில், தேர்தல் பிரசாரத்தில் பேசும் பிரதமர் மோடி தனது தலைமையிலான புதிய இந்தியா, நாட்டின் எதிரிகளை அவர்கள் இடத்திற்கே தேடிச் சென்று கொல்லும் என பேசி வருகிறார். இதைவைத்து பார்க்கும்போது, நாட்டின் எதிரிகளை ரா அமைப்பு உண்மையில் வேட்டையாடுகிறதோ என்ற எண்ணம் ஏற்படவே செய்கிறது.

News May 26, 2024

இஸ்ரேலின் மொசாட் போல மாறி விட்டதா ரா? (2/3)

image

கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் எனக் கூறப்படுவோரை இந்திய உளவாளிகள் கொலை செய்துவிட்டதாக அந்நாட்டு பிரதமர் ட்ரூடோ குற்றம்சாட்டி வருகிறார். இதேபோல், தங்கள் நாட்டிலும் கொலை முயற்சி நடந்ததாக அமெரிக்கா தெரிவித்தது. ஐநா பொதுச் சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதியும், தங்கள் நாட்டில் உள்ள தீவிரவாதிகள் சிலரை அடுத்தடுத்து தேடிப்பிடித்து இந்திய உளவுத்துறை கொலை செய்து விட்டதாக குற்றம்சாட்டினார்.

error: Content is protected !!