India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
* டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.
* திறந்தநிலைப் பள்ளிச் சான்று தமிழக அரசின் வேலைக்கு செல்லாது என்ற அரசாணைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
* அரசியல் வருகைக்கு பிறகு முதல்முறையாக நடிகர் விஜய் பெற்றோரை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
* டி20 உலகக்கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து ஜேசன் ஹோல்டர் காயம் காரணமாக விலகியுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின், நயன்தாரா நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘கஜினி’. சூர்யாவின் கெரியரில் இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில், இப்படம் கேரளாவில் அடுத்த மாதம் 7ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் இருக்கும் சூர்யா ரசிகர்கள் அவர்கள் குஷியில் உள்ளனர்.
இங்கிலாந்து, பாகிஸ்தான் இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 11 மணிக்கு நடைபெறுகிறது. நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் இங்கி., வெற்றிபெற்றது. இதையடுத்து நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இங்கி., 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் தொடரைக் கைப்பற்றும்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கடந்த 3 ஆண்டுகளாக திமுக அரசு தமிழகத்துக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அதிமுக ஆட்சியில் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைத்திருந்தோம் என்றார். மேலும், முல்லை பெரியாறு இடிக்கப்பட்டால் தென் தமிழகம் பாலைவனமாகும் என்றார்.
▶மே – 28 ▶வைகாசி – 15 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM வரை, 4:30 PM – 5:30 PM வரை ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM வரை, 7:30 PM – 8:30 PM வரை ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM வரை ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM வரை ▶குளிகை: 12:00 PM – 1:30 PM வரை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶ திதி: திதித்துவம்▶ பிறை: தேய்பிறை
‘லியோ’ படத்தைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘GOAT’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக சினேகா, மீனாக்ஷி சௌத்ரி நடித்து வருகின்றனர். இப்படத்தில் விஜய் இரண்டு வேடத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், தற்போது மூன்று வேடத்தில் விஜய் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
கோடை வெயிலுக்கு மத்தியில் கடந்த சில தினங்களாக தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 3 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காலை 7 மணி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
*அதிகமாக சாதிப்பதற்கு, முதலில் நீங்கள் அனைத்தையும் இழக்க வேண்டும்.
*செயல்கள் அற்ற வார்த்தைகள் மதிப்பற்றவை.
*நீ ஊமையாய் இருக்கும் வரை உலகம் செவிடாய் தான் இருக்கும்.
*மண்டியிட்டு வாழ்வதைவிட, நிமிர்ந்து சாவது மேலானது.
*எதிரிகளும், தோல்வியும் இல்லாத வாழ்க்கை வாழ்ந்தவன், முழுமையாக வாழவில்லை என்றே அர்த்தம். * எழுதப் படிக்கத் தெரியாத ஒரு நாட்டை ஏமாற்றுவது எளிதானது.
நீதிமன்றம் தொடர்பான மக்களின் சேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், நடமாடும் இ – சேவை கேந்திரா என்ற சேவை மையம், நாட்டிலேயே முதன்முறையாக கேரளாவில் துவங்கப்பட்டுள்ளது. நடமாடும் இ – சேவை மையத்தை வழக்கறிஞர்கள், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்கு தொடுப்பவர்கள் மின்னஞ்சல் வாயிலாக வழக்கை பதிவு செய்யவும், ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களை அறியவும் இது உதவியாக இருக்கும்.
வேட்டையன் படப்பிடிப்பின் போது, ரஜினியை சந்தித்த தயாரிப்பாளர் தேனப்பன் படையப்பா ரீ-ரிலீஸ் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ரஜினி தனக்கு ஒரேயொரு வருத்தம் இருப்பதாகவும், ‘படையப்பா’ படத்தில் நடித்த சிவாஜி, மணிவண்ணன், செளந்தர்யா என யாருமே தற்போது உயிரோட இல்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார். அத்துடன், தொடர்ந்து இன்னும் 2 மாதத்தில் ‘படையப்பா’வை ரீ-ரிலீஸ் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.