India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஜூன் 4ஆம் தேதி நடக்கிறது. இந்நிலையில், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் 1,433 ஊழியர்களுக்கு நாளை (மே 29) முதல் கட்ட பயிற்சியும், ஜூன் 3 ஆம் தேதி இரண்டாம் கட்ட பயிற்சியும் அளிக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், சென்னை ஆணையருமான ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நில மோசடி வழக்கு தொடர்பாக கவுதமி கொடுத்த புகாரின் அடிப்படையில் 13 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அழகப்பன் என்பவர் ₹56 லட்சம் மதிப்புள்ள நிலத்திற்கு தன்னிடம் ₹3.16 கோடி பெற்றதுடன், அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் 49 ஆண்டுகள் குத்தகை ஒப்பந்தம் போட்டு ஏமாற்றியதாக கவுதமி புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் அழகப்பனின் உறவினர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் முற்பகல் 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமெண்ட்டில் சொல்லுங்க.
ரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 1,010 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Apprentices (கார்பெண்டர், எலக்ட்ரீசியன், வெல்டர் பிரிவுகளில்) பணிகளில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: 10, 12ஆம் வகுப்பு, NCVT பயிற்சி. வயது வரம்பு: 15 – 24. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 21. மேலும் தகவல்களுக்கு<
தமிழ்நாட்டில் கடந்த 2 மாதமாக வெயில் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் பருவமழை குறித்து IMD வெளியிட்டுள்ள கணிப்பில், தென்னிந்திய மற்றும் மத்திய இந்திய பகுதிகளான ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், பிஹார், ஒடிஷா தமிழ்நாட்டில் இந்தாண்டில் சராசரியைவிட அதிகம் மழை பெய்யக்கூடும், வடகிழக்கு இந்தியாவில் குறைவாகவும், வடமேற்கு இந்தியாவில் சராசரியாகவும் மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது.
நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் ‘தவெக’ கட்சி குறித்து கேள்வி எழுப்பும்போது எல்லாம் சீமான் வரவேற்று பேசுகிறார். அவருடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு ‘விஜய்யிடம் கேளுங்கள்’ என்கிறார். இதனை நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் விரும்பவில்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது. என்றைக்கும் தனித்துப் போட்டி என்ற கொள்கையின் படியே கட்சியை அண்ணன் வழிநடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
அங்காரகனின் நீசப் பார்வையால் ஏற்படும் செவ்வாய் தோஷத்தால் திருமண தடை, கடன் பிரச்னை, தீராத நோய்களால் அவதியுற நேரிடும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. செவ்வாய் தோஷத்தால் மனம் வாடுவோர் சத்தியமங்கலம் பாலதண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு விரதமிருந்து சென்று, முருகனுக்கு செவ்வரளி மலர்மாலை சாற்றி, நெய் தீபமேற்றி, துவரை அன்னம் நைவேத்தியம் செய்து வழிபட்டாலே போதும் தோஷங்கள் அனைத்தும் விலகிடும் என்பது ஐதீகம்.
+2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற தளத்தில் விடைத்தாளை பதிவு எண், பிறந்த தேதி பதிவு செய்து பதிவிறக்கம் செய்யலாம். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதளத்தில், படிவத்தை வரும் நாளை முதல் ஜூன் 1 வரை அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இந்திய விமானப்படையில் பிளையிங், கிரவுண்ட் பியூட்டி ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள 304 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பி.இ., பி.டெக் படித்த 20 – 23 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு, உடற்தகுதி, நேர்காணல் தேர்வு ஆகிய முறைகளில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் ஜூன் 28ஆம் தேதிக்குள் <
மே 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்றுடன் நிறைவைடைகிறது. இந்த ஆண்டு அக்னி தொடங்கும் முன்பிருந்தே, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஏப்ரல் மாதத்திலே பல்வேறு இடங்களில் வெயில் சதமடித்திருந்தது. தென் மாவட்டங்கள் மழை பெய்தாலும், வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இந்நிலையில், அக்னி வெயில் இன்றுடன் முடிவதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.