News May 28, 2024

‘ஜாமின் நீட்டிப்பு’ கெஜ்ரிவால் மனுவை விசாரிக்க மறுப்பு

image

டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் கைதான கெஜ்ரிவாலுக்கு, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உச்சநீதிமன்றம் ஜுன் 1 வரை இடைக்கால ஜாமின் அளித்திருந்தது. இந்நிலையில், உடல்நிலை குறித்து பரிசோதனை செய்யவுள்ளதால், ஜாமினை 7 நாள்கள் நீட்டிக்கக்கோரி அவர், அவசர மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தலைமை நீதிபதி முடிவெடுப்பார் எனக்கூறி, அவசர வழக்காக விசாரிக்க மறுத்துள்ளனர்.

News May 28, 2024

ஜூன் 1 முதல் கனமழைக்கு வாய்ப்பு

image

ஜூன் 1 முதல் தமிழகத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. ஜூன் முதல் வாரத்தில் இருந்து வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் அடுத்த 5 நாள்களுக்கும், கர்நாடகாவில் ஜூன் 1ஆம் தேதி முதலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கூறியுள்ளது. கடும் வெப்பத்தால் மக்கள் அவதிப்படும் நிலையில், இந்த மழை அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

News May 28, 2024

11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்த 3 பேர் கைது

image

சென்னையில் 6 மாதமாக 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உறவினர் உள்ளிட்ட மூவரை, போலீசார் கைது செய்தனர். திண்பண்டம் வாங்கி தருவதாக கூறி, சிறுமியின் பெரியப்பா மகன், பக்கத்துவீட்டு பையன், அப்பகுதியில் உள்ள தையல்காரர் என மூவரும், பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளனர். சிறுமியின் பெற்றோர் இந்த பலாத்காரம் தொடர்பாக அறிந்திருந்தும், அமைதியாக இருந்தது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

News May 28, 2024

மருத்துவ காப்பீடு துறைக்கு வரும் LIC?

image

மத்தியில் புதிதாக பதவியேற்கவுள்ள அரசு, ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு ஆகியவற்றை ஒரே நிறுவனம் வழங்குவதற்கு அனுமதி தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை வைத்து, ஆயுள் காப்பீடு மட்டும் தற்போது வழங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான LIC, மருத்துவ காப்பீடு துறைக்கு வர திட்டமிட்டு வருவதாகவும், இத்துறையில் உள்ள ஏதேனும் ஒரு நிறுவனத்தை கையகப்படுத்த வாய்ப்புள்ளதா என ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

News May 28, 2024

அக்னிபான் ராக்கெட் ஏவுதல் மீண்டும் ஒத்திவைப்பு

image

‘அக்னிபான் சார்டெட்’ எனும் சிறிய ராக்கெட்டை விண்ணில் ஏவும் திட்டம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 4ஆவது முறையாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 700 கி.மீ. தூரம்வரை செல்லும் திறனும், 300 கிலோ எடையும் கொண்ட இது, பகுதி கிரையோஜெனிக் என்ஜின் மூலம் இயங்கக்கூடிய நாட்டின் முதல் ராக்கெட்டாகும். இதனை, சென்னை ஐஐடியுடன் இணைந்து அக்னிகுல் காஸ்மோஸ் என்ற இந்திய நிறுவனம் வடிவமைத்துள்ளது.

News May 28, 2024

மோடி, அமித்ஷா பெயர்களில் போலி விண்ணப்பம்

image

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு, 3,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதில் மோடி, அமித்ஷா, சச்சின், தோனி, சேவாக் போன்ற பிரபலங்களின் பெயர்களில் போலியான விண்ணப்பங்களை சிலர் பதிவு செய்துள்ளனர். கூகுள் விண்ணப்பம் மூலம் பெயர்களை பதிவு செய்ய பிசிசிஐ கூறிய நிலையில், போலி விண்ணப்பங்களால் சர்ச்சை எழுந்துள்ளது.

News May 28, 2024

ஜூன் 1இல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

image

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, ஜூன் 1ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று, அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் கட்சி வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். வாக்கு எண்ணிக்கையின்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.

News May 28, 2024

இடஒதுக்கீடு குறித்து பிரசாரம் செய்தது ஏன்? மோடி விளக்கம்

image

எஸ்சி, எஸ்டி, ஓபிசி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவே இடஒதுக்கீடு குறித்து பிரசாரம் செய்ததாக மோடி விளக்கமளித்துள்ளார். வாக்கு வங்கிக்காக எதிர்க்கட்சிகள், அரசியலமைப்பை மீறியதாகவும், தலித், பழங்குடியினர் நண்பர்கள் என தங்களைக் கூறும் எதிர்க்கட்சிகள், உண்மையில் அவர்களின் எதிரிகள், முஸ்லிம் லீக்கின் திட்டமே, அக்கட்சியின் தேர்தல் அறிக்கையாக இருந்தது எனவும் மோடி விமர்சித்துள்ளார்.

News May 28, 2024

வைகோ குறித்து நலம் விசாரித்தார் முதல்வர்

image

எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வைகோ குறித்து, துரை வைகோவிடம் தொலைப்பேசியில் முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார். தவறி கீழே விழுந்ததால் தோள் பட்டையில் வைகோவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அல்லது நாளை அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News May 28, 2024

விஷமாக மாறும் மயோனைஸ்

image

கேரளாவில் மயோனைஸ் சாஸ் சாப்பிட்ட பெண் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பச்சை முட்டையைக் கொண்டு செய்யப்படும் சாஸ் என்பதால், பல வகையான பாக்டீரியாக்கள் அதில் இருக்க வாய்ப்பு உள்ளது. இது சில நேரங்களில் உயிர் கொல்லியாகக் கூட மாறி விடுகின்றன. இதன் காரணமாகத்தான் சவுதி அரேபியா, UAE ஆகிய நாடுகள் மயோனைஸ் மற்றும் அதனைக் கொண்டு செய்யப்படும் ‘ஷவர்மா’ போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!