News May 28, 2024

கடந்த ஆண்டில் 27 லட்சம் சைபர் மோசடி புகார்கள் பதிவு

image

தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் சூழலில், சைபர் மோசடிகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில், சைபர் மோசடிகள் குறித்த கண்காணிப்பை மத்திய அரசு அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 27 லட்சம் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள 99.5% காவல் நிலையங்கள் குற்றவியல் கண்காணிப்பு நெட்வொர்க் உடன் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

News May 28, 2024

Ad Blocker செயலிகளுக்கு எதிராக யூடியூப் அதிரடி

image

யூடியூப் நிறுவனத்திற்கு விளம்பரங்கள் மூலமே அதிக வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில், சில பயனாளர்கள் Ad Blocker செயலிகளை பயன்படுத்துவது அந்நிறுவனத்திற்கு தலைவலியாக மாறியது. Ad Blocker போன்ற மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என பயனர்களை வலியுறுத்தி வந்த யூடியூப், ஒரு கட்டத்தில் அவர்கள் முழு வீடியோவை பார்க்க முடியாத படி செய்தது. தற்போது, ஆடியோவை மியூட் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

News May 28, 2024

கொரோனாவை போல் மீண்டும் ஒரு பெருந்தொற்று ?

image

கொரோனாவை போல் உலகில் அடுத்த பெருந்தொற்றை தவிர்க்க முடியாது என்று இங்கி., முன்னாள் தலைமை அறிவியல் ஆலோசகர் சர் பேட்ரிக் வாலன்ஸ் எச்சரித்துள்ளார். தொற்று பரவினால் ஆபத்தாக மாறிவிடும். எனவே, தொற்றை கண்டறியும் முறை, தடுப்பூசி, சிகிச்சை முறை ஆகியவை தயாராக இருந்தால் தொற்றின் பாதிப்பை வெகுவாக குறைக்க முடியும். ஜி7 மற்றும் ஜி20 நாடுகள் இந்த விவகாரத்தில் தீவிரம் காட்ட வேண்டும் என எச்சரித்துள்ளார்.

News May 28, 2024

வெற்றியை தீர்மானிக்கும் அந்த 77 தொகுதிகள்?

image

2019இல் பாஜக 303 தொகுதிகளில் வென்ற நிலையில், அதில் 77 தொகுதிகளில் 1 லட்சத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே வென்றது. குறிப்பாக, 40 தொகுதிகளில் மிக சொற்பமான வாக்கு வித்தியாசத்தில் பாஜகவினர் எம்பிக்களானார்கள். இதனால், இந்த குறிப்பிட்ட தொகுதிகளை தக்க வைக்க பாஜக போராடி வருகிறது. இந்த தொகுதிகளில் பாஜக தனது வெற்றியை மீண்டும் உறுதி செய்தால் தான், மெஜாரிட்டி என்ற அவர்களின் எண்ணம் நிறைவேறும்.

News May 28, 2024

முட்டை விலை ₹5.20ஆக குறைந்தது

image

நாமக்கல் கோழிப் பண்ணைகளில் முட்டை விலை குறைந்ததால், அதன் தாக்கம் சில்லறை விலையிலும் எதிரொலித்துள்ளது. கடந்த சில நாள்களாகவே ஏறுமுகத்தில் இருந்த முட்டை விலை, தற்போது சரிவை சந்தித்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு மொத்த விலையில் 5 ரூபாய் 80 காசுகளாக இருந்த ஒரு முட்டை விலை, தற்போது 5 ரூபாய் 20 காசுகளாக குறைந்துள்ளது. இதன் காரணமாக, வீட்டுச் செலவு சற்று குறையும் என இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News May 28, 2024

நாளை வெளியாகிறது ‘மகாராஜா’ படத்தின் அப்டேட்

image

விஜய் சேதுபதியின் 50ஆவது படமான ‘மகாராஜா’ படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை நாளை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இயக்கும் மகாராஜா படத்தை சுதன் சுந்தரன், ஜெகதீஷ் பழனிச்சாமி தயாரிக்கின்றனர். பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில் அனுராக் காஷ்யப், பாரதிராஜா, சிங்கம் புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

News May 28, 2024

கார் விபத்து வாழ்க்கையை மாற்றிவிட்டது

image

கார் விபத்து அனுபவம் தனது வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிட்டதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். 2022இல் விபத்தில் சிக்கிய பண்ட், அதிலிருந்து மீண்டு தற்போது டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் பழைய நிகழ்வை நினைவுகூர்ந்த அவர், கடவுளின் கருணையால் உயிரோடு இருப்பதாகவும், விபத்துக்கு பிறகு 7 மாதங்கள் வரை வலி தாங்காமல் அவதிப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

News May 28, 2024

6ஆம் கட்டத் தேர்தலில் 63.37% வாக்குப் பதிவு

image

நடந்து முடிந்த 6ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் 63.37% வாக்குகள் பதிவானதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 6 மாநிலங்கள், டெல்லி உள்பட 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில், மே 25ஆம் தேதி 6ஆம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஜூன் 1ஆம் தேதி, 7ஆவது மற்றும் கடைசி கட்டமாக 57 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 28, 2024

மோடி ஆட்சி முடிய இன்னும் 7 நாள்: ராகுல்

image

மக்களை ஏமாற்றும் போலி ஆன்மிகவாதி மோடியின் ஆட்சிக்கு இன்னும் 7 நாள்களே உள்ளதாக ராகுல் காந்தி சூளுரைத்துள்ளார். ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு பிரதமர் மோடி, பாஜகவுக்கு குட் பை சொல்லப்படும் எனக் கூறிய அவர், நாட்டிற்கான உண்மையான நல்ல நாள்கள் விரைவில் வரவுள்ளன. பாஜகவிடமிருந்து நாட்டிற்கு விரைவில் சுதந்திரம் கிடைக்கவுள்ளது எனவும் தெரிவித்தார்.

News May 28, 2024

இணையத்தில் விவாதத்தை கிளப்பிய CRED சிஇஓ

image

பொறியாளர்கள் மருத்துவர்களின் வேலையை பறிக்கலாம் என்ற CRED சிஇஓ குணால் ஷாவின் கருத்து விவாதப் பொருளாகியுள்ளது. மருத்துவ துறையில் தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியை குறிப்பிட்டு அவர் கருத்து தெரிவித்த நிலையில், மருத்துவர்களின் மனித தொடர்பு ஈடுசெய்ய முடியாதது என்ற எதிர் கருத்து எழுந்துள்ளது. ஒவ்வொரு துறையும் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் சூழலில் இந்த விவாதத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

error: Content is protected !!