India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிஹாரில் நிதிஷ் குமாரின் பேச்சுக்கு யாரும் மதிப்பு கொடுப்பதில்லை என ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் சாடியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பிஹாரில் அரசோ, ஜனநாயகமோ இல்லை, அரசு அதிகாரிகள் ஆதிக்கமே உள்ளது என்றார். பிஹாரில் வெயில் வாட்டி எடுப்பதால், பள்ளிக்குழந்தைகள் கடும் துயரத்தில் உள்ளதாகவும், அவர்களுக்காக நேரத்தை தளர்த்தலாம், ஆனால் நிதிஷ் கையில் எதுவுமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நமீபியாவுக்கு எதிரான உலகக் கோப்பைப் பயிற்சி ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் பங்கேற்ற காரணத்தால், சில ஆஸி., வீரர்கள் ஓய்வெடுக்க சென்று விட்டனர். இதனால் இன்றைய போட்டியில், 9 வீரர்கள் மட்டுமே விளையாடும் நிலையில் இருந்தனர். அணியில் ஆள் இல்லாத காரணத்தால், தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட், தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி ஆகியோர் மாற்று வீரர்களாக ஃபீல்டிங் செய்தனர்.
வைகோவுக்கு தோள் பட்டை அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்ததாக அவரது மகன் துரை வைகோ தெரிவித்துள்ளார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், 3 இடங்களில் பிளேட் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். அத்துடன், தொற்றுகள் ஏதும் ஏற்படாமல் இருக்க ஒரு வாரம் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளதால், தொண்டர்கள், நலம் விரும்பிகள் அவரை சந்திக்க வர வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
புகார் அளிக்க காவல்நிலையம் செல்ல சிலருக்கு தயக்கமாக இருக்கும். அவர்களுக்காக ஆன்லைனில் புகார் அளிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, உங்களது பெயர், செல்போன் எண்ணை பதிவிட வேண்டும். பிறகு செல்போன் எண்ணிற்கு வரும் OTP எண்ணை உள்ளிட்டு, உங்கள் புகாரை பதிவு செய்யலாம். பிறகு உங்கள் புகார் மீதான விசாரணை நிலவரத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
உத்தர பிரதேச மாநிலம் கைசர்கஞ்ச் தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரான சர்ச்சைக்குரிய பிரிஜ்பூஷண் சிங்கின் மகன் கரண் பூஷண் சிங் போட்டியிடுகிறார். கோண்டாவில் அவர் அணிவகுப்பின்போது அணிவகுப்பு வாகனம் பைக்கில் சென்ற 2 பேர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் ரத்த வெள்ளத்தில் பலியாகினர். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாகன ஓட்டிகள் புதிதாக லைசன்ஸ் பெறுவதற்கு RTO அலுவலகம் செல்லத் தேவையில்லை என்ற விதியை மத்திய அரசு ஜூன் 1 முதல் அமல்படுத்துகிறது. டிரைவிங் ஸ்கூல் சான்றிதழ் அளித்தாலே லைசன்ஸ் வீடுதேடி வரும் என்ற நடைமுறையை பின்பற்றவுள்ளது. ஆனால், இது தொடர்பான எந்த அறிவிப்பும் தமிழக அரசிடம் இருந்து வெளியாகவில்லை. இப்படியான, இருவேறு முடிவுகளால் RTO சேவையை பயன்படுத்துவோர் குழப்பத்தில் உள்ளனர்.
பேப்பர் விலை வெகுவாக குறைந்ததால் நோட்டு புத்தகங்களின் விலை 20% வரை குறையும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், நோட்டு புத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. கடந்த ஆண்டு ₹1.15 லட்சமாக இருந்த ஒரு டன் பேப்பர் விலை, இந்த ஆண்டு ₹85ஆயிரமாக குறைந்துள்ளது. இதனால், நோட்டு புத்தகங்களின் விலையும் குறையும் என கூறப்படுகிறது.
டி20 உலக கோப்பையில் இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவே அதிகபட்சமாக 39 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதற்கடுத்து, வங்கதேச வீரர் ஷகீப் அல் ஹாசன் 36 போட்டிகளிலும், இலங்கை முன்னாள் வீரர் தில்ஷன் 35 போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராவோ, பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி, சோயிப் மாலிக், ஆஸ்திரேலியாவின் வார்னர் 34 போட்டிகளில் விளையாடியுள்ளனர். கோலி 27 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அரசியலில் பல்டி அடிப்பது அதிமுகவினருக்கு மிகவும் சகஜம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அதிமுகவினர் தற்போது பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பார்கள். தேர்தல் முடிவு வந்தபிறகு பாஜகவுடன் கூட்டணி என்பார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவினர் திசை தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.
நடித்தால் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என ராமராஜன் உறுதியாக இருந்ததால், ஏராளமான பட வாய்ப்புகளை இழந்ததாகக் கூறப்படுவதுண்டு. அண்மையில் ராமராஜன் நடிப்பில் வெளியான சாமானியன் படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காததை பார்த்த ராமராஜன், இனி பெரிய நடிகர்களின் படங்களில் தனக்கு உரிய கதாபாத்திரம் கிடைக்கும்பட்சத்தில், அதை மறுக்காமல் ஏற்று நடிப்பதென முடிவு செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.