India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேர்தல் பிரசாரம் முடிந்ததும் எங்காவது ஓரிடத்தில் தியானம் செய்வதை மோடி வழக்கமாக கொண்டிருக்கிறார். 2019 மக்களவைத் தேர்தலில் இதுபோல கேதார்நாத் சென்றார். அதற்குப் பிறகு நடந்த 59 தொகுதிகளுக்கான தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை பாஜக வென்றது. அதேபோல, இம்முறை கன்னியாகுமரியில் தியானம் செய்ய முடிவெடுத்துள்ளார். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றிய KKR அணிக்கு, நடிகரும் அதன் உரிமையாளருமான ஷாருக் கான் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது X பக்கத்தில் பதிவிட்ட அவர், “இந்த அணி மரியாதையினால் கட்டமைக்கப்பட்டது. கோப்பை என்பது அணியில் சிறந்த வீரர்கள் இருப்பதற்கான சான்று அல்ல. ஒவ்வொரு வீரரும் அணிக்கு சிறந்தவர்கள் என்பதற்கு சான்றாகும். நீங்கள் அனைவரும் உண்மையிலேயே சிறந்தவர்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
டி20 உலகக்கோப்பையில் ரோஹித் ஷர்மா 4ஆவது இடத்தில் களமிறங்க வேண்டும் என முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். தொடக்க வீரர்களாக கோலி & ஜெய்ஸ்வால் களமிறங்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், சுழற்பந்து வீச்சை சிறப்பாக விளையாடும் ரோஹித் 4ஆவதாக களம் இறங்க வேண்டும் என்றார். முன்னாள் வீரர்கள் பலரும் ரோஹித்-கோலி ஓப்பனிங் இறங்க வேண்டும் என்று கூறிய நிலையில், இவர் மாற்று கருத்தை கூறியுள்ளார்.
கன்னியாகுமரியில் பிரதமரின் தியான திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என திமுக, மாவட்ட தேர்தல் அலுவலரிடம் மனு அளித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், பிரதமரின் தியானம் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு நாளை வரும் மோடி, அடுத்த 2 நாள்களுக்கு இரவும் பகலுமாக தியானம் செய்ய உள்ளார்.
தனது அறுவை சிகிச்சைக்கு தோனி உதவப் போவதாக, CSK ரசிகர் இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், குஜராத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் போது தான் மைதானத்திற்குள் நுழைந்து தோனியை சந்தித்து, தனக்கு மூச்சுத்திணறல் பிரச்னை இருப்பதாக கூறியதாகவும், அதற்கு அவர், “உனது அறுவை சிகிச்சையை நான் பார்த்துக் கொள்கிறேன். உனக்கு எதுவும் ஆகாது. கவலைப்படாதே” என தோனி வாக்குக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஜூன் 3க்குள் 25% மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சேர்க்கை பெற்ற மாணவர்களின் விவரம் பெற்றோரின் செல்ஃபோன் எண்களுக்கு OTP அனுப்பப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், OTP எண் பெற்ற மாணவர்களின் பெற்றோர் ஜூன் 3க்குள் பள்ளிக்கு சென்று சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
சூர்யாவின் 44ஆவது படத்தில், உறியடி விஜய் குமார் வில்லனாக நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில், சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் அந்தமானில் தொடங்க உள்ளதாகத் தெரிகிறது.
குடிநீரை வீணாக்கினால் ₹2,000 அபராதம் விதிக்கப்படும் என டெல்லி அமைச்சர் அதிஷி எச்சரிக்கை விடுத்துள்ளார். தண்ணீர் தொட்டிகளில் அதிகளவு நீரை சேமித்து வைத்தாலும், வாகனங்களை கழுவினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெரிய அளவில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட கூடாது என்பதற்காக இந்த முன்னேற்பாடுகளை செய்வதாக டெல்லி அரசு கூறியுள்ளது.
ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் உடல்நலம் குன்றியதற்கு அவரை பின்னால் இருந்து இயக்கும் லாபிதான் காரணம் என பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். திரை மறைவில் அதிகாரத்தை ருசித்து வரும் சிலரது லாபி இதில் அடங்கி இருக்கிறதோ என சந்தேகம் எழுந்துள்ளது. ஒடிஷாவில் பாஜக ஆட்சி அமைந்ததும், தனி விசாரணை ஆணையம் அமைத்து, உடல்நலம் குன்றியதற்கான காரணம் குறித்து விசாரனை நடத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
முகூர்த்தம், வார இறுதிநாள்களையொட்டி மே 31, ஜூன் 1ஆம் தேதி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என TNSTC அறிவித்துள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து மே 31இல் 500 பேருந்துகளும் ஜூன் 1இல் 570 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து மே 31, ஜூன் 1இல் 65 சிறப்புப் பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
Sorry, no posts matched your criteria.